இலக்கியம்
சுமக்கும் நினைவுகள்
தளிர்க் கரங்கள் பற்றி நின்ற
தண்மை இன்றும் நினைவை வருடுது
சற்றே ஒதுங்கிய வெண்ணிறப் பற்கள்
சடுதியில் வந்து சாகசம் புரியுது….
காலம்
இறந்த காலம் முடிந்த கதை, திருத்த முடியாது, எதிர் காலம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. நிகழ் காலம் மட்டும் தான் நம் கையில் உள்ளது. அதனால் தான் அதை ஆங்கிலத்தில் “Present ” என்று சொல்கிறோம் – ஞானி காலம் அறிவியல் வாயிலாக பல கோணங்களில் பலமுறை ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. காலத்தை துல்லியமாக கணிக்கக் கூடிய பல கருவிகள் இருக்கின்றன. நொடிப்பொழுதை கோடிப் பகுதியாகப் பிரித்து அளக்கக் கூடிய திறமையும் அறிவும் அறிவியல் மேதாவிகளுக்கு உண்டு. காலத்தைப் […]
எசப்பாட்டு – வாழ்க்கைச் சக்கரம்
இருவர் புரிந்திட்ட காமத்தின் விளைவோ?
இறைவன் அருளிய இணையிலா விதியோ?
இயற்கை ஊன்றிய இன்பமான விதையோ?
இயல்பாய் உயிரினம் ஆற்றிய வினையோ?
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-8
(பகுதி-7) பிரிவுத்துயர் எண்ணற்ற சொந்தங்கள் இருந்தும் அவர்களைப் பிரிந்து யாருமற்ற அனாதைகள் போல தனிமையில் வாழ்வது தான் துயர்களில் கொடுந்துயர். புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலர் இன்று உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாய், தந்தை, உடன் பிறப்புக்களைப் பிரிந்து உழைப்பு, உயிர்ப் பயம் போன்ற காரணங்களினால் புலம்பெயர்ந்தோர் சதா அதே நினைவுடன் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க மறுபுறம் மனைவி, பிள்ளைகளைப்பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று பல வருடங்களாகத் தனிமையில் வாடும் கணவன்மார் மற்றும் தந்தைமார்களின் நிலையோ […]
மினசோட்டா மாநில எல்லைக்குள் இருக்கும் பெரும் ஏரிகள்
எமது மாநிலமானது 10,000 க்கும் மேற்பட்ட ஏரிகள் கொண்டு செழிப்புற்றுக் காணப்படும் மாநிலம் என்று பெருமைப்படுவோம். உண்மையில் மாநில வனக்காப்புத் திணைக்களம் (Department of Natural Resouces – DNR) 2008ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நமது மாநிலம் 11,842 ஏரிகளை உள்ளடக்கியுள்ளது. எனினும் சில வரலாற்றுப் பத்திரங்கள் ஒரு காலத்தில் 15,291 ஏரிகள் நிலப்பரப்பளவில் 10 ஏக்கர்களிலும் பெரிதாக இருந்துள்ளன என்கின்றன. மினசோட்டா என்ற சொல்லே பூர்வீக வாசிகளால் சூட்டப்பட்ட சொல்லொன்றாகும். மினி Minni என்பது […]
மனதில் உறுதி வேண்டும்
மணி என்ன தான் இருக்கும் என்று பக்கத்தில் இருக்கும் டீக் கடையின் சுவர்க் கடிகாரத்தில் பார்த்தாள் கனகா . 11.30 மணி ஆகியிருந்தது . கிட்டத் தட்ட 2 மணி நேரமாய் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து கால் கடுத்துப்போய் இருந்தது. டீக் கடையில் நல்ல கூட்டம். நிறைய ஆண்கள், அரட்டை அடித்த படியும், பேப்பர் படித்த படியும் நின்று இருந்தார்கள். சிகரெட் புகை வேறு மூச்சு முட்டுவதைப் போல இருந்தது. என்னடா , இதோ வரேன்னு போன […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6
முன்கதைச் சுருக்கம்: (பகுதி 5) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு […]
மூளையும் நனவு உணர்ச்சியும்
நீங்கள் வீதியீல் ”நடமாடும் பிரேதத்தை”க் (Zombie) கண்டீர்களானால் அது நனவு அற்றது என்று உங்களால் உறுதியாகக் கூறமுடியமா? முடிந்தால் உங்கள் பதில்களை யோசித்தவாறு படிக்க ஆரம்பியுங்கள் இந்தக் கட்டுரையை. தற்போது ஹாலிவுட்டில் இருந்து நமது தமிழ்ச் சினிமாக்களிலும் சரி பல நடமாடும் பிரேதங்கள், குருதி குடிக்கும் வாம்பயர்கள் (vampires) எனக் குரோதமான, திகிலான (Horror Thrillers) படங்கள் வெளிவந்தவாறுள்ளன. அந்தப் படங்களில் எல்லாம் நடமாடும் பிரேதங்களை ரசிகர்கள்பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ளத் தயாரிப்பாளர் பின்னிசை, நிறங்கள், நிழல்கள் […]
உழைப்பின் மகத்துவம்
“அப்பப்பா…. இந்த வேகாத வெயில் இப்படி வாட்டி வதைக்குதே” என்று புலம்பிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தாள் கமலா. அப்போது, எதிரே வந்த தனது இளமைக்காலத் தோழி ராதாவைக் கண்டாள். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள். ‘உன் மகன் சுரேஷ், மருமகள் சுமதி எல்லாரும் எப்படி இருக்காங்க’ என்று இராதா, கமலாவிடம் கேட்டாள். ‘ம்ம்ம்….’ எல்லாரும் நல்லா இருக்காகங்க’ என்று கமலா கூறினாள். ‘ஆமா, நீ முதல்ல நல்லா குண்டா இருந்த, ஆனா இப்ப இப்படி இளைச்சு போயிட்டியே’ […]
இனிய சந்திப்புக்கள்
முன்குறிப்பு – இந்தக்கதை 1600 களில் அமெரிக்க வடகிழக்குப்பாகத்தில் குடியேறிய ஐரோப்பிய மக்களுக்கும் ஆதிவாசிகளிற்கும் இடைப்பட்ட தொடர்புகளை விவரிக்கிறது. களைத்திருந்த புருவத்துடனான டார்சன் தனது கண்ணோட்டத்தை புல்மேட்டுக்கு அப்பால் மலைச்சாரலிடையே ஒடிவரும் ஆற்றை நோக்கிச் செலுத்தினார். ஆமாம் இன்றும் சரக்குப்பண்டங்களை ஏற்றிவரும் ஓடங்கள் வருவதாகத் தெரியவில்லை. மெதுவாக அடுப்பங்கரையில் எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குப் பக்கத்தில் உள்ள மேசை வாங்கில் குடும்பத்தினருடன் வந்து அமர்ந்தார். டார்சன் அவர் மனைவி, மகன் ஒலிவர், மகள் பெர்டசியுடன் புதிய இங்கிலாந்து என்று […]






