இலக்கியம்
வாழிய மகாத்மா
சத்தியாக்கிரக எழுச்சி மீண்டு வருமா?
சாதிபேதமற்ற புரட்சி சாதனைத் தொடக்கமா?
சத்தியம் கற்றுக்கொடுத்ததோ ஹரியின் நாடகமா?
நிதமும் விளங்கினாய் பக்தியின் பாத்திரமா?
நாட்டுக்குத் தந்தையாய் அடைந்தது பாக்கியமா?
நாட்டுக்காக அறப்போர் நடத்தியது மறப்போமா?
JUST JESS
சாலை நெளிந்து வளைந்துச் சென்றுக் கொண்டிருந்தது. நடுநிசியைக் கடந்த நேரம். அடர்த்தியான மேகங்களிடையே தனது ஒளிக்கதிரை எப்படியாவது செலுத்தி விட நிலவு முயன்று கொண்டிருந்தது. சாலையின் இருபக்கங்களிலும் வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள் மேகத்தைக் கடந்து விழுந்த ஒரு சில ஒளிக்கீற்றையும் தரையில் விழுந்திடாதவாறு மறித்திருந்தது. வினோத்தின் காரிலிருந்து விழுந்த வெளிச்சம் மட்டும் அந்த கும்மிருட்டை இரண்டாகப் பிளந்து கொண்டு போய்க் கொண்டிருந்தது. அவ்வப்போது வெளிச்சத்தை நோக்கிப் பறந்து வந்த சின்ன பூச்சிகள் கார் காற்றைக் கிழித்துக்கொண்டு வரும் […]
கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் – தீஞ்சுவை தரும் தத்துவ நன்முத்தா? தேனமுதூறும் தெவிட்டாத காதலா? இந்தியத் தேசத்தில் திரைப்படங்கள் தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவடைய இருக்கின்றது. இந்த நூறு ஆண்டுகளில், திரைப்படங்கள் பல பரிமாணங்களைக் கடந்து பயணித்துள்ளது என்பது நாமறிந்ததே. இந்தப் பயணத்தில் பல வெற்றி தோல்விகளைச் சந்தித்த திரைப்பட உலகம், ஒரு சராசரி இந்தியனின் முழுநேர வாழ்க்கையையும் கிட்டத்தட்ட முழுமையாக ஆட்கொண்டு விட்டது என்றே கூறலாம். நல்லதோ, கெட்டதோ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை, பாடலை, […]
வாங்க ஃப்ரீயா பேசலாம்
“என்ன அண்ணாச்சி? சொகமா இருக்கீயளா?” “அடடே .. வாடே மாப்ளே .. நல்லா இருக்கம்டே. என்னடே விடியாலைல வேட்டியெல்லாம் கட்டி அசத்தறீரு? இங்கிட்டு என்ன வெய்யிலா அடிக்கி? வெறக்கீயில்லா?” “பண்டிக நாளல்லா.. வேட்டி கட்டியாகோணுமுன்னு ஊர்லேருந்து ஆத்தா தாக்கீது அனுப்பிருச்சு .. “ ”அப்படித்தாம்ல நடந்துகிடோனும்… கெடக்கட்டும் … ஏது இந்தா தூரம்?” “சும்மாதாம் … கனநாளாச்சுல்லா இந்தப் பக்கம் வந்து ..” “ஆமாம்லே.. கடையில கொள்ளச் சோலி கெடக்கும் ..அங்கன போய் வாறதுக்கே நேரம் வெருசா […]
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு
ஈழத் தமிழர்கள் புவியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரக் காரணங்களினால் உந்தப்பட்டுத் தாம் தொன்று தொட்டு வழிவழியாக வாழ்ந்த பாரம்பரிய மண்ணை விட்டு; முற்றிலும் வேறுப்பட்டப் பிறிதொருப் பிரதேசத்தில் வாழத்தலைப்படுவதைப் புலப்பெயர்வு என்றுக் கூறலாம். ‘புலம்’ என்ற சொல்லுக்குத் தமிழ் லெக்ஸிக்கன் அகராதியில் ‘திக்கு’1 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ள அதேவேளையில், ‘பெயர்தல்’ என்பதற்கு ‘இருப்பிடம் விட்டுப் பெயர்தல்’2 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வரும் “கலந்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்”3 என்ற அடியும் இங்கு நோக்குதற்குரியது. புலியூர்க்கேசிகன் […]
கண்ணிவெடிப் பூமியிலே
அன்னை மண்ணே அன்னை மண்ணே உன்னை இழந்து போகின்றேன் -என்
ஆசையுள்ள காதலியாள் எங்கேயென்று தேடுகின்றேன்…
வெட்டைவெளி தாண்டி நாங்கள் நடைப்பயணம் போகின்றோம்
வாழவழி தேடி நாங்கள் வழிப்பயணம் போகும் நேரம் – என்
பாசமுள்ள காதலியைக் கைப்பிடிக்க முடியலையே…
எமது இலத்திரனியல் உலகமும் அதன் பரிவிளைவும்
இன்று நமது அன்றாட வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் நமது அவதானமானது பல்வேறு இலத்திரனியல் சாதனங்களினை நாடியே உள்ளது. நமது தற்போதய காலத்தை இலத்திரனியல், அறிவியல், தொடர்பியல் முன்னேற்ற நூற்றாண்டாக எடுத்துக்கொள்ளலாம். இதை இந்தத் தசாப்தத்தில் பிரதானமாகத் தரும் சாதனங்கள் இலத்திரனியல் கைத்தொலைபேசி, கைப்பலகை ஆகியன. இச்சாதனங்கள் சென்ற நூற்றாண்டில் வர்த்தகமானிகளால் வகுக்கப்பட்ட அபிவிரித்தியடைந்த, அபிவிரித்தியடைந்து கொண்டிருக்கும், மற்றும் இருண்ட கண்ட நாடுகள் சகலத்தையும் ஊடுருவித் தொடுக்கிறது. தகவல் பரிமாற்றம், தொலைத் தொடர்புத் தொழிநுட்ப மேம்படல், சாதாரண மக்கள் […]
வறுமை
இளமையில் வறுமை இறப்பினும் கொடிது
இயம்புதல் அருமை ஔவையின் அமுது
இன்னலின் முதன்மை இல்லாததன் பொழுது
இரப்பவன் நிலைமை இருப்பவன் தொழுது
பெற்றதும் இழந்ததும்
உயர் வடையவே உறவினை இழந்தேன்
உடமை பெறவே உரிமை இழந்தேன்
பொருண்மை சேர்க்கப் பொறுமை யிழந்தேன்
பெறுமதி பெறவே பெருமை யிழந்தேன்.
நகரமும்! கிராமமும்!
அடுக்கு மாடி கட்டிடமாம் இடுக்கில் கூட குடித்தனமாம்! மடக்கு நீருக்கு வழியில்லையாம். மிடுக்கு மட்டும் குறையலையாம்! பஞ்சு மெத்தை வகைவகையாம் படுத் துறங்க நேரமில்லையாம்! பல்லு துலக்க பலபசையாம். பளிச்சினு சிரிக்க மனசில்லையாம்! உரசாம நடக்க முடியலையாம் உரையாடு வதற்குத் துணையில்லையாம் உதவிக் கொரு ஆளில்லையாம் உறவுக் கூட நிலைக்கலையாம்! அழகு ஏடிஎம் அணிவரிசையாம் அடகுக் கடைகட்கு அழிவில்லையாம்! அலைபேசி இருபதாயிரம் விலையாம். அடுத்தவேளை கஞ்சிக்கு வகையில்லையாம். அருகம் புல்லுக்கு இடமில்லையாம் அறிவியல் கல்லூரிக்கு குறைவில்லையாம்! […]






