இலக்கியம்
வாங்க ப்ரீயா பேசலாம் !!
என்னா ஊருங்க இது? ஒன்னு பேஞ்சு கெடுக்குது.. இல்ல காஞ்சு கெடுக்குது.. அதுவிமில்லீன்னா குளிரித் தொலைக்குது .. பொறக்காலப் போயி ஒக்காரதுக்குள்ளாற பொடனி எல்லாம் வெறச்சுப் போச்சுது.. பெருசா இல்லாட்டியும், ஊருக்கு அந்தாப்பல ஒரு சின்ன வூட்ட வாங்கிப் போட்டேனுங்க.. (நீங்க நெனக்கிற மாதரயெல்லாம் ஒன்னுமில்லீங்க .. சின்ன சைஸ் வூடுங்க ..) அது என்றான்னா நமுக்கு சோலி சாஸ்தியாப் போனது தான் மிச்சமுங்… எதையும் அனுபவிக்க முடிலீங்க.. ”காப்பி கீப்பி குடிக்கிறாங்களா மாமோவ்?” எங்கூட்டம்மணி. “காப்பி […]
ஏன் கடவுளே?
கடவுள் ஒருநாள் கருணையுடன் முன்தோன்ற
கண்கள் குளமாகிக் கனவிதோ, குழப்பமுற
கணம்பல கடந்ததும் கருத்தது தெளிந்திட
கலக்கம் துறந்து களிப்புடனே நான்கேட்க…
பணிதற்குரிய பணி
”கரணம் தப்பினால் மரணம்” கேள்விப்பட்டதுண்டு. உணர்ந்ததில்லை. நாம் செய்யும் வேலைகளில் ஏதேனும் பிழை நேருமானால், ஏற்படும் சேதமென்ன? பிழை திருத்தக் கிடைக்கும் இரண்டாவது, மூன்றாவது சந்தர்ப்பங்கள் எத்தனை? பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரின் பிழைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மேலும், பிழைகளைத் திருத்திக் கொள்ளப் பல வாய்ப்புக்களும் கிடைக்கின்றன. உலகில் மிகவும் வணக்கத்திற்குறிய பணிகள் என மிகச்சில பணிகளை மட்டுமே குறிப்பிட முடியுமென நினைக்கிறேன். தான் எட்டி பார்த்திராத உயரங்களைத் தங்கள் மாணவர்கள் முயற்சித்துப் பிடிக்கத் […]
மனப் போராட்டம்
“உன் புக்கைக் கொஞ்சம் தரியா?”
வலப்புறம் திரும்பி வனப்புடன் அமர்ந்திருந்த மாணவிகளின் மத்தியில் அன்றலர்ந்த மலர்போல வீற்றிருக்கும் பாரதியைப் பார்த்துக் கேட்டான் கணேஷ்.
இளங்கலை மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆசிரியருக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆசை
உறங்கிடா உள்ளத்தில் எண்ணிலா ஆசை
உறவன்றி உருவின்றி உயிர்பெற்ற ஆசை.
உருக்குலையுமுன் உயர்வுடனே உரைத்திட ஆசை
உயிரோயுமுன் அத்தனையும் அடைந்திட ஆசை
மதுவின் இரு பக்கம்
அச்சம் நீக்கும் நம்மில் உறவாடும் கவிதை
ஆழ்ந்த துயரை துரத்தும் அருமை அன்னை
இன்பம் தரும் பாதகம் இல்லாக் கணிகை
ஈதல் வளரச் செய்யும் பண்பான தாதை
உளரல் தந்து மழலை ஆக்கும் தாய்மை
புறநானூறுக்காக ஒரு புனிதப் பயணம்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் தமிழார்வலர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடியும், பல்வழி அழைப்பிலும் திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களைப் படித்து, பொருளறிந்து, விவரித்து, விவாதித்து, ரசிக்கிறார்கள். இவர்கள் புறநானூற்றுப் பாடல்களைப் படித்து முடித்தமையைக் கொண்டாட ஒரு விழா எடுத்தனர். ஆம்! வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து “புறநானூறு பன்னாட்டு மாநாடு” ஒன்றை ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில், மேரிலாந்து மாநிலம் […]
தமிழ் இனி
நம் தாய்மொழி தமிழாகும்.
உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி.
அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி.
9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி.
கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி.
வலி சுமந்த பயணம்
விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி
உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது…
ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து
உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது…
கவித்துளிகள் சில…
அமாவாசை
சிதறிய நட்சத்திரங்களுக்குள்
செத்துக் கிடக்கிறது ஒரு நிலா.
கையடக்கத் தொலைபேசி
சட்டைப் பையில் பதுங்கியிருந்து
பணம் பறிக்கும் இரகசியக் கொள்ளைக்காரன்…






