இலக்கியம்
அலை பாயும் மனதினிலே !
சிற்பி கையிலே சிற்றுளி செதுக்க முடியாமல் சிலையாக நின்றான் அலைபாயும் மனதோடு ! அவன் வசிப்பது வசந்த மாளிகை புசிப்பது அறுசுவை உணவு துயில்வது பஞ்சு மெத்தை துக்கம் மனதோடு தழுவி தூக்கம் கண்களைத் தழுவாமல் தூங்காமல் அலை பாய்கிறதே! அவன் பொய் முகத்தை மெய் முகமெனக் காட்டி பணம் பதவி புகழ் நாட்டி பசித்தவன் போல் மன நிம்மதி தேடி கடல் அலைகள்போல் கவலையில் அலைகின்றானே ! உலகில் காதலே அலைபோலே […]
உயிர்ச்சொற்களுக்கான சவப்பெட்டி
எப்போதுமான முகாந்திரமற்ற இலையுதிர்தல் தொடர்கிறது வீதியின் விளிம்புகளில்….. வசந்தத்தை ஒரு வாளியில் மொள்ளுகிறது ஆளும் அரசுகள். ஆங்காங்கே உடைந்துக்கிடக்கின்றன செத்துப்போன இந்திய நாணயங்கள் காலாற நடந்த வீதியின் வீச்சை கணத்த இதயத்தோடு பார்க்கும் நடுத்தரவர்க்க நாய்கள் அவ்வப்போது முளைக்கும் இலவச எலும்புத்துண்டுகள் கூப்பாடு போடலாமென்று கூடிமுடிவெடுத்தது வாலாட்டிக்கூட்டங்கள். நிமிர்த்தவா முடியும்? எப்போதும்போல் வந்தது ஐந்தாண்டுக்கொருமுறை நாடகம். கிடைத்தன எலும்புத்துண்டுகள் ஜனநாயகத்தின் வாய்மூடிவிட்டது. ஜனங்களின் வயிறுகள் காலிக்குடுவைகள். மக்களுக்கான சவப்பெட்டியை மக்களே சுமந்தனர் மடிநிறைய. பெட்டிநிறைய வழிந்தது மக்களாட்சி… […]
அழகே..
குளுகுளு காற்று அழுவது கேட்டேன் உன் பார்வையின் குளுமை அதற்கில்லையாம் சலசலத்தோடும் நதியின் கண்ணீர் பார்த்தேன் உன் நகைத்தல் இனிமை தன்னிடம் இல்லையாம் பளபளத்து ஜொலித்தபூ வாடிடக் கண்டேன் உன்னுதட்டு பொலிவைப் பெறுவது கடினமாம் பரபரக்கும் பட்டாம்பூச்சி பறவாமைக் கண்டேன் உன் முகவண்ணம் கண்டு பொறாமை கூடியதாம் வரிவரியாக எழுதும் கவிஞரின் வெற்றுத்தாள் கண்டேன் உன் நளினத்திற்கு உவமை காணாமல் தவித்தாராம் தரதரவெனக் காளையர்கள் கண்ணிமைக்காதது கண்டேன் உன் சிலைவடிவைக் […]
காளிங்க மர்த்தனம்!!
கண்களுக்கு இனியவனாம் கண்ணன் காட்சிக்கு இனியதுவாம் கடவுள் கண்களால் ரசிப்பதுவோ கண்ணன் – அகக் காட்சியாய்த் தொழுதிடவோ கடவுள் ஆயர்பாடி மாளிகையில் அயர்ந்திருந்த கண்ணனவன் வாயதனில் மண்ணுண்டு தேயத்தைக் காட்டியவன் மாயங்கள் பலசெய்து நியாயத்தை நாட்டியவன் தாயங்கள் ஒழித்தழித்த தர்மங்கள் மீட்டவனவன்!! காளிங்கன் என்றொரு கடும்விஷப் பாம்பு கலக்கிய விஷமது யமுனை வியாபித்து காகம் குருவிமுதல் கருடன் போன்றவையும் கடல்வாழ் உயிரினமும் கருக்கிச் சரித்தது!! இன்னுயிர் அனைத்தும் இன்னலைத் தழுவ மன்னுயிர் பலவும் மாண்டொழிதல் மாற தன்னுயிர் […]
மழை இரவு !
மழையே மழையே மகிழ்ந்து மகிழ்ந்து குழந்தைபோல் விளையாட விண்ணுக்கும் மண்ணுக்கும் ஏணி அமைக்க வா ! மழையே மழையே பகலவன் சூடு தணிய விண்ணில் விளையாடும் கருமேகமே மழைத்துளிகளை மண்ணுக்கு மலர்போல் இரவில் அள்ளி வீசு ! மழையே அந்தி மழையே விண்ணில் சிந்து பாடி மண்ணில் நொந்த உயிர்கள் மகிழ்ந்து வாழ – நீ மண்ணில் வந்து விளையாடு ! மழையே இரவு மழையே மண்ணில் நீ வீழ்ந்தால் மரம் […]
இனவாதமே பிணமாகு
கண் எட்டும் தூரம் கரையுமில்லை! கரையைத் தேடவே துடுப்புமில்லை! நீந்தி ஓடத்தான் மீனுமில்லை! மீனாய் வாழவே வழியுமில்லை! தன்னந் தனியே தத்தளிக்கிறான் – இவனும் நெருப்பு அள்ளக் காணியிலே! கறுப்பு வெள்ளைத் தோணியிலே! இயற்கை தந்த நிறத்தினிலே இலங்கை பிரிந்த புறத்திலே! எமனின் மனமாகும் இனவாதமே பிணமாகு! குயில் ஓசை இங்கே புயல் பாசை பேசுதுவே! மயில் இறகு இங்கே வெயில் கயிறு வீசுதுவே! எலும்பில்லா தசை ஆகிறேன் -நானும் அரசியலின் ஆட்டமே இனவாத ஓட்டம்! அறிஞரின் […]
ஜெய்ஹிந்த்
“ஜனா..” “ம்ம்.. சொல்லு ..” “அப்பா போய்ட்டாரு..” சின்னதாக விசும்பினாள் பூனம். “.. எப்போ…”.. “இப்போதான் மூணு நிமிஷம் இருக்கும் ..” “அம்மா எப்படியிருக்காங்க..” “அழுதுட்டே இருக்காங்க… ஒரு நிமிஷம் .. டாக்டர் கூப்பிடறாராம்… முரளி கிட்ட தரேன் .. பேசு..” … “ஹலோ.. ஜனா? ஏ சாரிடா ..எவ்ளோ ட்ரை பண்ணோம்.. ஒன்னும் முடியாதுன்னுட்டாங்க.. சிவியர் நிமோனியா..” “சந்தோஷ் எங்க இருக்காரு இப்போ.. “ “அவருக்கு இன்னும் உதாம்பூர் டிப்ளாய்மென்ட் முடியல.. காலைல கூடப் பூனம் […]
தலைவன் இருக்கின்றான்!
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! இந்த வாக்கியத்தைக் கலைஞர் கருணாநிதி அவர்களின் கரகர குரலினால் இனி நாம் நேரில் கேட்கப்போவதில்லை! காவேரி கரையில் பிறந்தார்…காவேரியில் மறைந்தார் என்ற கடைசி சேதி கேட்டதும் குபுக்கென்று நம்மையும் அறியாமல் கண்ணீர்! வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருவமில்லா உருண்டை உருவாகியது போல ஒரு பிரமை. நம் சொந்தத்தை இழந்தோம் என்றால் என்ன வலியை அடைவோமோ அது போல பலமடங்கு வலி! ஓய்வறியாச் சூரியனாகத் திகழ்ந்த கலைஞர் அவர்களை உலகெங்கும் […]
வேலை தேடுங்க !!!
அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு! என்ற திருவள்ளுவரின் வாக்குக்கிணங்க, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருட் செல்வமாகும். ஆசைகளைப் பெருமளவு அடக்கி, எளிமையான வாழ்வு நடத்துபவருக்கும் பொருள் என்பது இன்றியமையாததே. முற்றும் துறந்த ஞானியர் தவிர மற்ற அனைவரும், பொருளீட்டும் முயற்சியில் முழுவதும் ஈடுபடுவது புரிந்து கொள்ளக் கூடியதே. அதுபோன்ற பொருளீட்டும் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அவரவரின் திறமைக்கும், தகுதிக்கும் ஒப்ப ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிவதும் உலக வழக்குகளில் ஒன்றே. அவ்வாறு […]
நட்புக்கான நந்நாள்
பசியென்றால் பகர்ந்திடலாம் அன்னையிடம் – அவளும் புசியென்றே படைத்திடுவாள் அறுசுவை விருந்து!! படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார் அரும்பொருள் அவரும்!! மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள்!! வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான்!! வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள்!! பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான்!! அன்பிற்குச் சிலநாள் […]






