இலக்கியம்
எக்குவாஃபேக்ஸ்
ஒருபுறம் ஹார்வி, எர்மா, மரியா என சூறாவளிக் காற்று, பேய்மழை, வெள்ளம் என இயற்கை அன்னை, பல மில்லியன் அமெரிக்கக் குடிகளைப் பாதித்தாள். அதே சமயத்தில் நடந்த எக்குவாஃபேக்ஸ் நிறுவனத்தில் நடந்த கணினி ஊடுருவலில், பல கோடி மக்களின் தனிப்பட்ட, வர்த்தகத் தகவல் சூறையாடப்பட்டுள்ளது. தனிநபர்களின் கடன் வாங்கும் ஆற்றலைக் கணிக்கும் நிறுவனத்தின் தகவல் சூறையாடல் வருமாண்டுகளில் பல வகையிலும் சீரழிவுகளைக் கொண்டு வரலாம் இந்தச் தகவல் கொள்ளை, இதுவரை அமெரிக்க நாட்டில் ஏற்பட்ட சூறாவளிகள், நில […]
எட்டாக் கனியாகுமோ மருத்துவ நலன்?
அமெரிக்காவில் ஆண்டு தோறும் மருத்துவத்துக்காக மட்டும் செலவிடப்படும் தொகை $3.2 ட்ரில்லியன். அதாவது தனி நபர் ஒருவருக்குச் சராசரியாக $10 ஆயிரம் டாலர்கள்; நாட்டின் மொத்த உற்பத்தியில் இது 18%. உலகிலேயே மருத்துவத்துக்கு அதிகம் செலவிடும் நாடு அமெரிக்காதான். இருப்பினும், உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) கணக்குப்படி மருத்துவ நலனைப் பொறுத்தவரையில் அமெரிக்கா 37 ஆவது இடத்தில் தான் உள்ளது. அதாவது மற்ற நாடுகளை விடவும் அதிகம் செலவழித்தும், உடல் / மருத்துவ நலனில் […]
ஒரே ஒரு சந்திரன்
(பாகம் 3) 1952 ஆம் ஆண்டு ராமச்சந்திரனின் நடிப்பில் வெளிவந்த படங்கள் ‘அந்தமான் கைதி’, ‘ குமாரி’, மற்றும் ‘என் தங்கை’. அந்தமான் கைதி, இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, குடும்பத்துடன் இந்தியாவுக்கு வரும் இளைஞன், தன் தந்தை, சிலரால் கொலை செய்யப்பட்டதை அறிந்து, அவர்களைக் கொன்று விடுகிறான். இதற்காக அந்தமான் சிறையில் தண்டனை பெரும் அவன், விடுதலையாகித் திரும்ப வந்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதோடு, கயவர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு ஏழைப் பெண்ணை மணந்து கொள்வதான புரட்சிக் […]
சிந்திய சிந்து
காட்டிலும் மேட்டிலும் களைப்புடன் உழைத்திட்ட காளையும் கன்னியும் கண்ணயர்ந்து சுவைத்திட காதலும் கடவுளும் கருத்தினில் படைத்திட்ட, காரிருள் நீக்கியே கவிபுனைந்த கதிரோன்! சாவதின் பயமது சங்கடமாய்த் துரத்திட சாரமாய் வாழ்க்கையின் சங்கதி உணர்த்திட சாரதியாய் வந்திட்ட கண்ணனைப் பணிந்திட சாயுங்கால சொர்க்கமாய்க் குளிர்ந்திட்ட நிலவவன் !!! தாயகம் முழுவதும் தருக்கரால் பிடிபட தானமும் தவங்களும் தழைக்காது மிதிபட தாயவள் தளையறுக்கத் தலைமகனாய் உதித்திட்ட, தாங்கொணா வெப்பமாய்த் தகித்திட்ட தலைவனவன் !!! நாவினில் கலைமகளை நலமுறவே அமர்த்திட […]
தற்கொலை தவிர்ப்போம்
இக்கட்டுரை வெளியாகும் செப்டம்பர் 10ஆம் நாள் ‘உலகத் தற்கொலைத் தடுப்புத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நீட் (National Eligibility and Entrance Test) கடந்த சில தினங்களில் தமிழ் வாசிக்கத் தெரிந்த அனைவரையும் உணர்வு பூர்வமாகப் புரட்டி போட்ட செய்தி அனிதாவின் தற்கொலை. ‘கனவு காணுங்கள்’ என்ற கூற்றைக் கடந்து மருத்துவராகும் லட்சியத்தோடு மிகச் சிறந்த முறையில் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு, மருத்துவப் படிப்புக்கான விளிம்பில் நின்ற அவருக்கு, ‘நீட்’ நுழைவுத்தேர்வு பற்றி பரிச்சயமும், பயிற்சியும் இல்லாததால், அதில் வெற்றி […]
ஹார்வி பாதிப்புகளுக்கு உதவுங்கள்
ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ், லூசியானா உள்ளிட்ட மாகாணங்களைத் தாக்கிய ஹார்வி சூறாவளியின் பாதிப்புகளை அறிந்திருப்பீர்கள். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 13 மில்லியன் மக்கள் பல்வேறு வகைகளில் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 40000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்புக் கூடாரங்களில் தங்கும் நிலை. ஆகஸ்ட் மாத மத்தியில் ஆப்பிரிக்கக் கரையில் உருவாகிய வெப்ப மண்டலம், சூறாவளிப் புயலாக உருமாறி ஆகஸ்ட் 25 ஆம் தேதி டெக்ஸாஸில் உள்ள அரன்சாஸ் துறைமுகத்தைத் தாக்கிய போது, […]
கொலு பொம்மை
”நீ ஆத்தப் பாத்துக்கோடா… நான் ஒரு இரண்டாத்துக்குப் போய், குங்குமம் வாங்கிண்டு வந்துடறேன்”…. அம்மா சொல்லிக் கொண்டு புறப்படத் தயாரானாள். “அம்மா, என்னம்மா.. என்னப்போய்… இது பொம்மனாட்டிகள் சமாச்சாரம்..யாராவது வந்தான்னாக்கா நான் என்ன பண்ணுவேன்??” என்று இழுத்த கணேஷைப் பார்த்து, “நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேண்டா.. அதுக்குள்ள யாரும் வரமாட்டா.. அப்டியே வந்தாலும் உக்கார வை, நான் வந்துடறேண்டா” சொல்லிக்கொண்டே அவன் பதிலுக்கும் காத்திராமல் வெளியேறினாள் மங்களம் மாமி. ”அம்மா, அம்மா” என்று தான் கத்திக் கொண்டிருப்பதைக் […]






