இலக்கியம்
தனிமை தரும் சமூகவலயமா?
சமூகவலயம் தனிமை தருமா? இந்தக் கட்டுரையின் தலைப்பே சரியாகப் படவில்லையே என்று நீங்கள் எண்ணலாம். வாருங்கள் இதைப் பற்றி மேற்கொண்டு அலசுவோம். சுமார் பத்து வருடங்களின் முன்னர் நியுயார்க் நகரத்திற்கு அருகாமையில் கனக்டிக்கட் மாநிலத்தின் கீரீன்விச் எனப்படும் ஒரு நகரத்தில் நடந்த சம்பவம். கீரீன்விச் அமெரிக்காவிலேயே மிகவும் வசதி மிகுந்த மத்திய அத்திலாந்திக் சமுத்திரக் கடற்கரையோர நகர் எனவும் கூறிக்கொள்ளலாம். இந்த நகரில் ஒரு சம்பவம் யாவரையும் பேச வைத்தது. பாரிய சொத்துடைய செல்வந்தப் பெண்மணி ஒருவர் […]
கண்டுபிடி மிஸ்டர் ஸ்லையை!!
ஊடக அறம் என்ற வார்த்தை பிரயோகம், சமீப காலங்களில் அடிக்கடி நம்மிடம் அடிபடுகிறது. ஊடக நிறுவனங்களின் வியாபார வெறியினால் பலமாக அது மிதிபடுவதினால் ஏற்படும் சத்தம் காரணமாக இருக்கக்கூடும். தொலைகாட்சிகள், டிஆர்பிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைக் கோர்த்துவிட்டு, தூண்டிவிட்டு, குழாயடிச் சண்டையை ஏற்படுத்துகிறார்கள் என்றால், பத்திரிக்கைகள் சர்குலேஷனைக் கூட்ட கருத்துக் கணிப்பு, புலனாய்வு போன்றவற்றை உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்கிறார்கள். சர்குலேஷனைக் கூட்ட, பத்திரிக்கைகள் கடைபிடிக்கும் பல யுக்திகளைக் கண்டிருக்கிறோம். உற்பத்திச் செலவுக்கு கீழே பத்திரிக்கையை விற்று, வாசகர் […]
மனிதனாக இரு !
சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை.
இரவில்
சுடர் விடும்
மின் மினிப் பூச்சிகளைக்
கொன்று குவிக்காதே !
பள்ளி செல்ல
மனமில்லையா ?
மறதிக்குப் பின் வருவதே மரணம்
படுத்த படுக்கையாகி
விட்டேன்
மௌனமாய் உணர்கிறேன்…
திரும்ப முடியாமல்
படுத்தேயிருப்பதால்
முதுகெல்லாம் புண்கள்
ஒப்புக் கொள்கிறேன்…
தமிழ்ப் புத்தாண்டு
சித்திரைத் திருமகள் சிறப்புடனே வருகிறாள்
சீராட்டிப் பாராட்டிச் செழிப்பூட்ட வருகிறாள்
சிந்தனைச் சிற்பிகளைச் சிரந்தூக்கிச் செறுக்கேற்றி
சீலமாய் வாழ்பவரைச் செழுமையுடன் வைத்திடுவாள் !!
கத்திரி வெயிலிலே கழனியில் உழைப்பவரை
காரிருள் நேரத்திலும் களத்துமேடு காப்பவரை
கனத்த மழையினிலும் கடுந்தொழில் புரிபவரை
காத்திடுக இயற்கையெனக் கைகூப்பி அழைக்கிறாள் !
வேலையில்லாப் பட்டதாரி !
நான்
அருகே சென்றாலும்
கடல் அலைகள்
என் பாதங்களை
முத்தமிடாமல்
செல்லுகின்றன !
என்
கண்களில் கண்ணீரோ
வற்றி விட்டது
என் மனமோ
ரத்தக்கண்ணீர்
வடிக்கின்றது !
சக்கரைக் கிழங்கைச் சாமர்த்தியமாக வளர்ப்போம்
வட அமெரிக்கக் கண்டமும் மெதுவாக இளவெனிலை நோக்கி நடையெடுக்கிறது. இந்தத் தருணத்தில் சக்கரைக் கிழங்குச் செடியை எவ்வாறு நமது யன்னலோரத்தில் வளர்க்கலாம் என்று பார்ப்போம். தேவையானவை நீண்ட நீர் குடிக்கும் கண்ணாடிக் குவளை/Water glass அல்லது பூ வைக்கும் சாடி பெரிய நீளமான சக்கரைக் கிழங்கு ஒன்று பற்குத்தி (Toothpick), அல்லது சான்விச் குச்சிகள் மற்றும் மூங்கில் குச்சிகள் (Bamboo skewers) சாதாரண வீட்டுக் குழாய்த்தண்ணீர் சக்கரைக் கிழங்கான மரக்கறி, மளிகை வாங்கும் கடைகளில் மிகவும் சொற்ப […]
இணையச் சுழல்….
இது சுய விமர்சனம்… அல்லது சக விமர்சனம்… எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எப்படியாவது எடுத்துக் கொள்ள வேண்டும்… அவ்வளவுதான். இந்த வாழ்க்கை எதை நோக்கி? இந்தப் பயணம் எதற்காக? ஏதோ ஓர் உந்துதல் ஏதாவது ஒரு வழியில் நம்மைத் தள்ளிக் கொண்டே செல்கிறது.. சிலர்.. வெட்டியாக உட்கார்ந்தே வாழ்க்கையை ரசிக்கிறார்கள். சிலர்.. விவகாரம் பேசுகிறார்கள்….. சிலர்.. எழுதுகிறார்கள்.. சிலர்.. அரசியல் பேசுகிறார்கள்….சிலர் விளையாடுகிறார்கள்… சிலர் பெண்களை மட்டுமே காவல் காக்கிறார்கள்….. சிலர் வன் கலவியையே வேலையாகச் […]
நிறமற்ற சினிமா
படம் ஓடிக் கொண்டிருந்தது…. அது நிறங்களின் சிறகை, திரை தாண்டி துளிர்த்துக் கொண்டிருக்கிறதோ… என்றொரு சந்தேகம்… சற்று நேரம் வரை வரவில்லை.. என் கண்கள் எனக்கு முன்னால் சற்று வலது பக்கம் அமர்திருந்த அவளைக் காணும் வரை…எனக்கு, திரை தாண்டிய நிறங்களின் கூடு என் மேல் பொழிகிறதோ என்று தோன்றவேயில்லை.. மாயங்களின் வலையை நான் பின்னிக் கொண்டே இருப்பதற்குத் தகுந்தாற் போல… அவள் முகம் இன்னும் சற்று மெல்ல திரும்பி இருந்தது…..என் கண்கள் பாதி கன்னம் தெரிந்த […]






