இலக்கியம்
யார் அந்த இராவணன் பகுதி – 3
(பகுதி – 2) இராவணன் எப்படி அரக்கன் ஆக்கப்பட்டான் இராவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்றும் பேரழகன் என்றும் பொருள் உண்டு. “இரா” என்றால் ‘இருள்’ அல்லது ‘கருமை’ என்பது பொருளாகும். இருள் போன்ற கரிய நிறத்தினை உடையவனாதலால் இராவணன் (இராவண்ணன்) என அழைக்கப் பட்டான். இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை எனும் அளவிற்குச் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். கதைக்காகத் தமிழ் அரசனான இராவணனை அப்படிக் காட்டியிருந்தாலும் அவனின் வீரம் என்றுமே போற்றுதலுக்குறியது. மாற்றான் […]
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 3
(எங்கேயும் எப்போதும் MSV – 2) ராக் அண்ட் ரோல் (Rock and Roll) நாற்பதுகளில் அமெரிக்காவில் பிரபலமடைந்தவொரு இசை வடிவம். ஜாஸ், ப்ளூஸ் போன்ற ஆப்பிரிக்க இசை வடிவங்களின் நீட்சியே ராக் அண்ட் ரோல். ஜாஸ், ப்ளூஸ் போன்ற இசைகளோடு கண்ட்ரி மியூசிக் (நாட்டார் இசை) கலந்திருப்பதால் ஜாஸில் தொக்கியிருக்கும் சோகம் ராக் அண்ட் ரோல் இசையில் காணப்படுவதில்லை. தொடக்க காலங்களில் ஜாஸ் இசையைப் போன்றே ராக் அண்ட் ரோலிலும் பியானோ, பிராஸ் இசைக் கருவிகளின் […]
ஈழத்துச் சித்தர்கள்
சித்தில் வல்லவர் சித்தர் என்பது பண்டைய தமிழ் மக்களின் பாங்கான வாய்மொழி. சித்து என்பதற்கு அறிவு என்றும் ஒருபொருள் உண்டு. எனவே சித்தர்கள் என்பவர்கள் அறிவுடையார், புத்திஜீவிகள் (Intellects) என்றும் தற்காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆயினும் ஈழத்திலும், தமிகத்திலும் சித்தர்கள் பலதர அறிவு சார்ந்த விடயங்களிலும், யோகமார்க்கத்திலும் வல்லவராயிருந்து வந்தனர். பலதுறைகளிலும் கவனம் செலுத்திய தமிழ்ச் சித்தர்கள் வைத்தியத் துறையிலும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டனர். சித்தர்கள் சத்திர சிகிச்சை முறை, மூலிகைத் தயாரிப்பு, தாவரவியல் என பலதரப்பட்ட […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-18
இன உணர்வு (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-17) இன உணர்வு என்பது எல்லா இனத்தினர்க்கும் உரித்தானதொன்று. தத்தம் இனம் சார்ந்து சிந்திக்கப் பழகிக் கொண்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்லர். காகங்கள் கூடத் தம்மினத்தில் ஒன்று இறப்பினும் கூடி அழும். சிறிதளவு உணவு கிடைப்பினும் கூடி உண்ணும். இத்தகைய இனமான உணர்வு தமிழரிடத்தில் சொற்ப அளவில் இருப்பதை எண்ணிப் பெருமை கொள்வோம். “பட்டினிப் பிசாசு தின்னும் ஓர் ஆப்பிரிக்கக் குழந்தைக்காய் வழியும் என் கண்ணீரை என் இனத்துக் குழந்தைக்காய் மட்டும் […]
வெள்ளப் பாதுகாப்புக் கைமுறைகள்
வெள்ளத்தின் முன்பு கட்டிடங்களை வெள்ளப்பெருக்குத் தரைகளில் தவிர்த்தல் கட்டிடங்களின் அத்திவராம் போடும் போதே அடமழை வெள்ளப் பெருக்குத் கடைமுறைகளைக் கையாளுதல் – குறிப்பாக மண்மேட்டு அணை, சீமந்துக் கல்பாறை அணை மற்றும் தறிக்கட்டைகள் போடுதல் கட்டிடத்தின் தாழ்ந்த பகுதிகள், நில அடி அறைச்சுவர்களில் தடித்த நீர் ஊறுதல் தடுக்கும் சீமெந்து மற்றும் கட்டிடப் சாந்துகளைப் waterproof compounds பூசுதல் காலநிலை அறிவிப்புக்களில் வெள்ள அவதானத்திற்கும், வெள்ள அபாயத்திற்குமான வித்தியாசங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளல் வெள்ள அவதானம் – […]
வெழல் வெய்த – வசந்த மாளிகை
மச்சு வீடுகள் எங்கும் மல்கிவிட்ட இந்தக் காலத்தில் குச்சு வீடுகள் நமக்கு மறந்து போனதில் வியப்பொன்றும் இல்லையே. ஆம் வெழல் வெய்த கூரை வீடுகளை இன்று காண்பது அரிதாகி விட்டது. இன்று ஏழ்மையின் அடையாளமாகக் காணப்படும் இந்த வீடுகள்தாம் சிலகாலத்திற்கு முன்புவரை ஒட்டுமொத்த சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது என்றால் நம்ப முடிகிறதா? எனது சிறுவயதில் வெழல் வெய்த கூரை வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். அந்தப் பட்டறிவும் அதில் உள்ள இன்ப துன்பங்களைப் பட்டியலிடும் முயற்சியே இந்தக் கட்டுரை. ஆம்! […]
முதற் காதல்
எழுதி எழுதித் தீர்த்தாலும் இனி
எழுதுவதற்கு இல்லையென இருந்திட இயலாது….
அழுது அழுது தீர்த்தாலும் இனி
அழுவதற்கு ஏதுமில்லையென அமைந்திட இயலாது…
அரும்பாக இருக்கையிலே அழகாக அரும்பியது
துரும்பாக இருந்ததையும் தூசிதட்டி விரும்பியது
குறும்பாக நடந்ததெல்லாம் குறுகுறுத்துப் பருகியது
இரும்பான இதத்தையும் இளக்கிடவே திரும்பியது
வீழ்வேனென்று நினைத்தாயோ!
“சாவு பயத்தக் காட்டிடாங்க பரமா!”… அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் கரை வாழும் அனைத்து சென்னை மக்களும் சொன்ன வார்த்தைகள் இவை. கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென ஒரேநேரத்தில் 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. மாநகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்தது. நீர் தேங்கி மாநகருக்குள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மழைநீரில் வீடுகள் மூழ்கியதால், மின் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-17
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16) சுதந்திர வேட்கை சுதந்திரம் என்பது மனிதர்களின் பிறப்புரிமை. அது மறுக்கப்பட்ட நிலையில் வாழும் ஈழத் தமிழர்கள் தமது விடுதலை உணர்வின் வேட்கையினை மனதுக்குள் போட்டுப் பூட்டி வைத்து மௌனியாகி வாழாவிருக்கின்றனர். சோகங்களில் மூழ்கி வாழ்வினைத் தொலைத்த போதிலும் நம்பிக்கை ஒன்றே வாழ்வின் மூலதனமாக நின்று செயற்படுவதாகத் ‘தமயந்தி’ எழுதிய “நம்பிக்கையான மௌனம்” என்ற கவிதை குறிப்பிடுகின்றது. “துளிர்ப்புக் காலத்தை எதிர்நோக்கி தவமிருக்கும் பனிப்புலத்து இலையுதிர் மரங்களைப் போல் மெளனமாய் எங்கள் இருத்தல் […]






