இலக்கியம்
அந்தமும் ஆதியும்
இல்லாத பலதை இலக்காய்க் கொண்டு
கொண்டதை யெல்லாம் எளிதில் மறந்து
மறக்க வேண்டியதை மலையெனச் சுமந்து
சுமையாகிப் போனதை எண்ணி வருந்தி
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1
Fusion எனும் ஆங்கில வார்த்தைக்கு இணையத்தில் பொருள் தேடிய போது இணைவு, கலவை எனப் பல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. ஒரு இணையப் பக்கத்தில் இந்த ஆங்கிலச் சொல்லுக்கு உருகுதல் என்று பொருள் தந்திருந்தார்கள். மறைந்த இசை மேதை M.S.V. யின் பாடல்களைப் பற்றிய தொடரின் ஒரு பகுதியாக Fusion இசைப் பாடல்கள் பற்றிய இக்கட்டுரைக்கு இது மிகப் பொருத்தமான சொல்லாகப் பட்டது. Fusion என்பது இரண்டு வகையான இசைப் பகுப்புகளை ஒன்றாக உருகியோடச் செய்வதாகும். ஆப்பிரிக்க […]
எசப்பாட்டு
மண்ணுக்கும் மரத்துக்கும் தாகமுன்னா
மழை கொட்டியே தாகத்தைத் தீக்குதடி!
வண்டுக்கும் தும்பிக்கும் தாகமுன்னா
வண்ண மலரும் தேன்தந்து தீக்குதடி!
தமிழர் கை வைத்தியக் குறிப்புக்கள்
அசீரணம் – ஓமம்(basil) அரைத்துப் பசும்பாலிலோ, அல்லது பச்சடியாகவோ உட்கொள்ளலாம். அத்துடன் 2 அவுன்ஸ் தேனையும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். கண்ணீர் வடிதல் – இதைத் தவிர்க்க வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை (Almonds) மெதுவாக மென்றுத் திண்ணலாம். காது வலி – மூன்று உள்ளிப்பூண்டு நகங்கள் வாதுமை (Almond) ஆகியவற்றை எண்ணெயில் அவை கருகும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். தேவையான நேரம் 3 சொட்டுக்களை வலிதரும் காதில் விட்டுக்கொள்ளவும். குமட்டல் (Feeling to vomit )– […]
கொலைபேசி
உடல் எடையைக் குறைக்கும் குறிப்புகள் ; பல்லை வெண்மையாக்க வழிவகைகள்; விக்டோரியா சீக்ரெட்டின் ‘புஷ் அப்’ ரகசியங்கள்; விரல் நகங்களில் விரிசல் வராமல் எப்படிப் பார்த்துக் கொள்வது; தலைமுடியைச் சுருட்டையாக்குவது எப்படி; சில கசமுசா படங்கள்; பலான வீடியோக்கள் ; டாம்பான், ரெஸ்டாரண்ட் கூப்பன்கள் இத்யாதி இத்யாதி விஷயங்கள் தான் கிடைத்தன… ஏகப்பட்ட வாட்ஸ்அப், டெக்ஸ்ட் மெசேஜ் எனப் பல பேருடன் தகவல் பரிமாறல்கள் .. அலுப்பாக இருந்தது வம்சிக்கு.. நான்கு மணி நேரமாகத் தேடி, கடந்த […]
விநாயகர்ச் சதுர்த்தி
கல்லிற் செய்த கருஞ் சிலையாம்
கணக்காய் அமைத்த கற் கோயிலாம்
கருணைக் கடவுளாய்க் காண்பவர் பலராம்
கண்மூடித் தனமாய்க் கடிந்துரைப்பர் சிலராம்
தனித் தீவு
அதி காலை மணி 5. யாரோ தலையில் தட்டியது போல எழுந்தாள் வாணி. சிறிது நேரம் தூக்கம் கலையும் வரை அப்படியே படுத்திருந்தாள். அருகில் படுத்திருந்த குரு புரண்டு படுத்தான். இவள் முழித்து இருந்ததைப்பார்த்து, பக்கத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். “மணி 5 தானே ஆகுது, ஞாயித்திக்கிழமை தானே? தூங்கு”. “தூக்கம் வரல. வழக்கமா எழுந்துக்கிற நேரம் அதான். நான் கீழே போறேன்.” ஏனோ வாணிக்கு இந்தச் சனி ஞாயிறு சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் பிடித்தமான ஒரு […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 12
முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் […]
எசப்பாட்டு – கேள்வி/பதில்
முத்தான தமிழ்கொண்டு
முழுமூச்சாய்ப் பாட்டமைக்கும்
முடிவில்லா கவிக்கூட்டமதை
முனைப்புடனே வினவுகின்றேன்…….
முக்காலம் உணர்ந்திட்ட
முனிவர்களும் சீடர்களும்
முன்வாழ்ந்த கோடிகளும்
முன்னோர்கள் அனைவருமே
கிழித்தெறியப்படும் கவிதைகள்
இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென
ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம்
புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட
நெறி தவறாமல் – நாம்
எம் கவிதைகள் படித்தோம்






