இலக்கியம்
ஒரு IT ஆண் மகனின் சோகக் கதை
காலை அலாரம் அடித்தது. ஒரு சோம்பலுடன் புரண்டு படுத்து அதை அமர்த்தினான் தினேஷ். சமையல் அறையிலிருந்து ஒரு குரல் கொடுத்தாள் கலை. “எழுந்திருங்க, இன்னிக்கு உங்க turn வர்ஷாவைக் குளிக்க வைக்கறது” “ஹ்ம்ம்” காலை 3 மணிக்குத் தான் படுத்திருந்தான். கண்கள் எரிந்தன. நேற்று முழுவதும் offshore டீமுடன் மண்டையை உடைத்து என்ன தவறு நடந்தது என்று குடைந்தாகி விட்டது. இன்று client இடம் பதில் சொல்லி ஆக வேண்டும். யாருடைய தவறு என்று கண்டு பிடிக்க […]
நானே ராசா நானே மந்திரி
நமது சிற்றூர்களில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொழுது, சாயும் வேளையில் கட்டை வண்டிகள் கடகட மடமட என ஓடி வருவதைக் கேட்டிருப்போம். சரக்கு ஏற்ற கட்டை வண்டி இருந்ததைப் போல, சொகுசுப் பயணம் செய்ய அலங்கரிக்கப்பட்ட வில் வண்டிகள் பல இருந்தன. ஆனால் இன்று காலவோட்டத்தில் புகையைக் கக்கி, காதைக் கிழிக்கும் எந்திர வண்டிகள் எங்கும் பரவி, கட்டை வண்டிகளை ஓரம் கட்டி விட்டன. நமது பயன்பாட்டில் இல்லை என்றாலும் நமது நினைவுச் சாலையில் […]
சாமக்கவி
வாயு தேவனும் வருண பகவானும் சங்கமித்து இசை பயிலும் ஒரு பனிக்கால இரவின் முன்சாமப் பொழுதொன்றில் கட்டிலில் சாய்ந்தபடி கவிதை எழுதத் தொடங்கினேன். கவிதை நீண்டு கதையாகிப் பின் தொடர்கதையாய் நீண்டது. சாளரம் திறந்து எட்டிப் பார்த்தேன். தீபாவளிக்கு இல்லாத விடுமுறை திருக்கார்த்திகையில் வந்ததால் வானத்து விண்மீன்கள் நிலாவைத் துணைக்கழைத்தன விளையாட . ஆழ்மனதில் ஒரு கவிதை தோன்றியபோது எழுந்து விளக்கை அணைத்தேன் வீணை மீட்டியபடி பாடத் தொடங்கினேன் ஒரு சாமகானம். ஊரவன் –
காகிதத்தின் வாக்குமூலம்
எந்த நிறத்தையும்
ஏற்கும் சமரசப்பிறவி
காகிதம் !!!
வேறுபட்ட கருத்துகளைத்
தன்னுள் விழுங்கி…
மக்களின் பார்வைக்கு
எவ்விதப் பாகுபடின்றிக் கொடுத்துத் …
திறம்படத் தன் பணி
செய்பவன் …..
எவனோ …..அவனே
காகிதம் …!!!!
ஆட்டிஸம் – 2
(ஆட்டிஸம் – 1) ஆட்டிஸம் என்பதை ஒரு நிலை என்று விளக்குவதே சரியாக இருக்குமென நினைக்கிறேன். இது குழந்தையின் வளர்ச்சிக் குறைவு, பொதுவாக, குழந்தையின் மூன்று வயதுக்குள் தோன்றுகிறது. குறைபாடுகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பல வகைகளில் வேறுபடுகின்றன. சில குழந்தைகள் மற்றவரிடம் தான் தெரியப்படுத்த விரும்புவதைக் காட்ட இயலாத நிலையில் இருக்கலாம். வேறு சில குழந்தைகளால் சிறிய இயக்கங்களைச் செய்ய இயலாத நிலை – அதாவது ஒரு சின்ன கரண்டியையோ, பொம்மையையோ எடுத்து நகர்த்தி வைக்க இயலாத […]
மினசோட்டாவின் கதை – பாகம் 2
(மினசோட்டாவின் கதை பாகம் 1) முதல் மனிதன் வட அமெரிக்காவிற்குக் குறிப்பாக மினசோட்டா மாநிலத்திற்கக்கு வாந்தான் அல்லது வந்தாள் என்று சரியாகத் தெரியாது. எனினும் மனித இனம் ஆசியாவிலும், ஆபிரிக்கக் கண்டங்களிலும் குடியேறியிருக்கும் அதே காலகட்டத்தில் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படவில்லை என்று இதுவரை வட மற்றும் தென்கண்டங்களில் நடந்துள்ள அகழ்வு ஆராய்ச்சித் தரவுகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மினசோட்டாப்பகுதி மற்றும் வட அமெரிக்கவிற்கு வந்தவர்கள் ஆசியக் கண்டத்தில் இருந்து ருஸ்ய-சைபீரியாவுடாக பெரிங் நீரிணையைக் கடந்து; பெரும் பனியுகம் பின்தாங்கத் தொடங்கியபின்னர் […]
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 2
(எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1) ஜாஸ் (Jazz) என்பது ஐம்பதுகளின் மத்தியில் பிரபலமடையத் தொடங்கிய ஒரு இசை வடிவம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வியல் இசையாகக் குறிக்கப்படும் இது பல உட்பிரிவுகளைக் கொண்டு விளக்குவதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும் ப்ளூஸ் (Blues) எனும் பிரிவின் படி மனித வாழ்வியலில் இழையோடும் சோகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுப் பிரபலமடையத் தொடங்கியது. அக்காலங்களில் இங்கு சவ ஊர்வலங்களில் இவ்வகை இசை […]
கண்மாய்க் கரையும் களத்து மேடும்
இலையுதிர் காலம் வந்தால் மினசோட்டாவில் பெரிதும் கொண்டாடப் படுவதில் ஒன்று இயற்கை காட்டும் வண்ண விளையாட்டு. மற்றொன்று ஆங்காங்கே நடத்தப்படும் அறுவடைக் கொண்டாட்டங்கள். வைக்கோல் கட்டுகளைத் திறந்த வண்டியில் அடுக்கி அதன் மீது அமரச் செய்து ஊர்வலம் கொண்டு செல்லும் வைக்கோல் சவாரி (Hay Ride) மற்றொரு புறம். பரங்கிக்காய்களை அறுவடை செய்து ஆங்காங்கே கிடத்தி விளையாட வைக்கும் பரங்கித் திட்டுகள் (Pumpkin Patch) இன்னொரு புறம். இந்தக் கொண்டாட்டத்தை எனது பிள்ளைகளோடு சென்று கண்டு களித்த […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15) போரினால் விளைந்த அவலங்கள் – 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழயுத்தம் தீவிரமடைய தொடங்கியபோது, ஆரம்பத்தில் அது பல்லாயிரக்கணக்கானோரை வெளிநாடுகளுக்குப் புலம்பெயர வைத்தது. தேசங்கள் தோறும் சிதறிஓட வைத்தது. இந்தப் புலம்பெயர்வு ஆரம்பத்தில் பணவரவினூடான வாழ்வினைத் தந்தாலும் காலப்போக்கில் வலியைத் தரத்தொடங்கியது. ஈழத் தமிழரின் அன்றாட வாழ்வில் யுத்தம் பெருமளவிலான பாதிப்பினை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது அங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள உடன் பிறப்புக்கள், உறவுகள் மீதும் தாக்கத்தை விளைவிக்கத் தொடங்கி […]
சுய மரியாதை
மதியம் மூன்று மணியாகிக் கொண்டிருந்தது. காலையில் இருந்து ஏதோ பர பர வென்று இருந்தது உதயாவிற்கு. பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரம் ஆகி விட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் அவர்களைச் சென்று அழைத்து வர வேண்டும். அவளது கணவன் பரத் அன்று சீக்கிரம் வருவதாகச் சொல்லி இருந்தான். வீட்டின் வேலைகாரம்மா அன்பு அன்று நேரம் கழித்து வந்து அப்பொழுதுதான் வீட்டை சுத்தம் செய்து துடைத்துக் கொண்டு இருந்தாள். தன்னுடைய அலமாரியில் புடவைகளை அடுக்கி […]






