\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

என் காதலி

Filed in இலக்கியம், கவிதை by on January 21, 2015 0 Comments
என் காதலி

தூரிகையில் தோன்றிய தேவதையே!
சிலர் காதலிக்க கவிதை எழுதுவர்!
சிலர் காதலித்து கவிதை எழுதுவர்!
நான் கவிதை எழுத உனைக் காதலித்தேன்!!!
யோகியின் சித்ததில் உதித்து
கணினியில் வளர்ந்தவளே!
கனை எடுத்து உனை வெல்லேன்!
என் கவி கொண்டு உனைக் கொள்வேன்!!!

Continue Reading »

உறைபனியில் மீன் பிடித்தல்

Filed in கட்டுரை by on January 21, 2015 0 Comments
உறைபனியில் மீன் பிடித்தல்

அமெரிக்காவிலுள்ள மினசோட்டா மாகாணம், மற்றும் கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாகாணங்களில் வாழும் மக்கள் பனிக்காலத்தில் பல்லாயிரம் ஏரிகள், ஆறுகளில் இந்நாட்டு மக்கள் பலர் உல்லாசமாகப் பனிக் கொட்டில் (icehouse/tent) கட்டி மீன் பிடிப்பதைப் பார்த்திருப்போம். உஷ்ணப் பிரதேசத்தில் இருந்து வந்த மக்களாகிய எமக்கு உறைபனியில் குளத்திற்கு நடுவில் போவது பாதுகாப்பானதா என்றும் தோன்றும். ஆயினும் வடஅமெரிக்க மாநிலங்கள், மாகாணங்கள் உறைபனியை அதிகம் பெறுவதால் இவ்விடம் வாழும் மக்கள் நீர் உறையும் தட்ப வெப்பங்களை அறிந்து, உறைபனிப் பருமனையும், மற்றைய […]

Continue Reading »

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10

Filed in கட்டுரை by on January 21, 2015 0 Comments
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10

விசாச் சிக்கல் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்களில் பலர் தாம் சென்று குடியேறிய நாடுகளில் தங்குவதற்கான சட்டரீதியிலான அனுமதிப் பத்திரம் (எளைய) இன்றியே பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் அந்தந்த நாட்டிற்குரிய சட்டங்களின்படி புலம்பெயர்ந்து சென்ற பலர் நாடு கடத்தப்பட்டனர். வேறு சிலர் சிறை வைக்கப்பட்டனர். பலர் அபராதத் தொகையுடன் அனுமதிக்கப் பட்டனர். இன்னும் பலர் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டனர். தாம் எண்ணி வந்த எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகிப் போக, புலம்பெயர்ந்த நாடுகளிலும் இவர்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட தமது எதிர்காலக் […]

Continue Reading »

மாற்றம் தேவை

Filed in கதை by on December 24, 2014 0 Comments
மாற்றம் தேவை

“Sorry sir, I will make sure it won’t happen again!” என ப்ரித்வியின் அம்மா பள்ளி முதல்வரிடம் கேட்டுக்கொண்டாள். அவள் கண்களில் கோபம் தெரிந்தது. ப்ரித்வி மெளனமாக பக்கத்தில் அமர்ந்திருந்தான். பள்ளி முதல்வர் கடும் குரலில் “He need to learn to share with others. Otherwise he will get into fight again and again. Prithvi, let this be the last time we call on […]

Continue Reading »

கண்கள் இல்லாக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on December 24, 2014 0 Comments
கண்கள் இல்லாக் காதல்

கண்கள் இல்லாக் காதல்   கண்கள் காணாக் காளையர் தமக்கும் கருத்தில் வந்து தோன்றும் காதல் பெண்கள் உறவு புரிந்தவர் எவர்க்கும் புறத்தில் நின்று போற்றும் காதல். தேசம் விட்டுத் தேசம் பெயர்ந்து காசது தேடிக் கடலும் கடந்த பாசம் மிக்க பலரும் போற்றும் சுவாசம் ஒத்த உணர்வே காதல். இளமையில் தோன்றி பூரித்து நின்று இனிமையே என்றும் வலம்வர இயைந்து வளமையும் தாண்டி வறுமையே வரினும் தனிமையது இன்றித் தழுவுவதே காதல். உடலின் அழகை உணர்வில் […]

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 15

உலகச் செம்மொழி – அத்தியாயம் 15

அத்தியாயம் 14 செல்ல இங்கே சொடுக்கவும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதியது போன்று பல மொழிகள் தமிழில் இருந்து தோன்றின அவற்றில் கடைசியாக தோன்றிய மொழி மலையாளம். இதை ஒத்துக்கொள்ள சிலர் தயங்கினாலும்   பெரும்பான்மையானோர் ஒத்துக்கொள்கிறார்கள். திராவிட மொழி வரலாற்றை முதன் முதலில் ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல் அவர்கள் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். ஏ.ஆர்.ராஜராஜவர்மாவின் கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்த  தமிழே சம்ஸ்கிருதத்தின் தாக்கத்தினால் மலையாள மொழியானது என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார். இன்றும் […]

Continue Reading »

ஓட்டம்

Filed in கவிதை by on December 24, 2014 0 Comments
ஓட்டம்

கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெரு ஓட்டம் நடு நடுவே சிற்சில சில்லறை ஓட்டங்கள் பத்து மாதத்தில் உலகைத்  தொட்டுவிட ஒரு ஓட்டம் பிறந்த எட்டு மாதத்தில்  அடி எடுத்துவைக்க மறு ஒட்டம் இரட்டை வயதிற்குள் மழலையைக் கொட்டிவிட குட்டி ஒட்டம் பால்குடி மாறா வயதில் பால்வாடிக்கு ஒரு குறு ஓட்டம் பள்ளிக்கு சித்தம் கலங்கிட நித்தம் ஒரு ஓட்டம் கன்னியரும் காளையரும் கரைகாணா பேரின்ப பெரு ஓட்டம் நிலையில்லா மாந்தர்க்கு நிலையான ஆஸ்திக்கு நிகரில்லா […]

Continue Reading »

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-9

Filed in இலக்கியம், கட்டுரை by on December 24, 2014 0 Comments
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-9

தகுதிக்கேற்ற தொழிலின்மை தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் நிற-இன ரீதியிலான வேறுபாடுகள் அதிகளவில் உணரப்பட்டன. தாயகத்தில் ஓரளவு படித்த பலரும் புலம்பெயர்ந்து சென்று தமது அந்தஸ்து, தகுதியை விடுத்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக எந்த வேலையினையும் செய்யத் துணிந்தார்கள். புதிய இடம், அந்நிய மொழியறிவு இன்மை போன்றனவும் புகலிடத் தமிழர்களை மிகவும் பாதித்தது.   “தகுதி வேலை ஊதியம் சமன்பாடு குழம்பிய நிலையில் இன்னுமொரு முதலாளித்துவத் தெருவில் நான் ஒரு பிராங்கெனினும் என் […]

Continue Reading »

இயக்குனர் சிகரத்தின் இறுதிப் பயணம்

இயக்குனர் சிகரத்தின் இறுதிப் பயணம்

தமிழ்த் திரையுலகின் இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் கடந்த செவ்வாய், டிசம்பர் 23ம் தேதி காலமானார். கைலாசம் பாலச்சந்தர் 1930 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஒன்பதாம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்தவர். அறிவியலில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்று ஏ.ஜி.ஸ் (அக்கவுண்டன்ட் ஜெனரல்) அலுவலகத்தில் எழுத்தராக பணி புரிந்து வந்தார். இங்கு அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்கள் எழுதி, நடித்து  அரங்கேற்றி வந்திருக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’ போன்ற […]

Continue Reading »

பார்த்ததில் ரசித்தது

பார்த்ததில் ரசித்தது

”சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் சண்டை வச்சா, ஆரு செயிப்பாக?” – எனக்கும் என் நெருங்கிய நண்பன் வெங்கடேசனுக்கும் சிறு வயதில் அடிக்கடி வரும் தகராறு இதுவே. நாங்களிருவரும் அவ்வளவு ஒற்றுமையான நண்பர்கள், ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இருவரும் கீரியும் பாம்பும் போலச் சண்டை போடுமளவுக்கு விரோதிகள். மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகன் அவன். நான் சிவாஜி கணேசனென்றால் உயிர் கொடுக்கவும் தயார்.. ”எம்.ஜி.ஆர் மாதிரி கத்திச் சண்டை போடமுடியுமாடா சிவாஜியால?” பொதுவாக என் தீர்ப்பு அனைத்தையும் மறு […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad