\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 3

Filed in இலக்கியம், கதை by on February 25, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 3

பகுதி 2 முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். காயமடைந்தவனுக்கு டாக்டர் தேசிகன், அவர் மகள் டாக்டர் புஷ்பா மற்றும் நர்ஸ் ரோஸி சிகிச்சை கொடுத்துக் கொண்டிருகிறார்கள். காயமடைந்தவன் […]

Continue Reading »

என் காதலே

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 0 Comments
என் காதலே

காதல் காவியம் படைத்தேன் உனக்கு
கண்ணே அருகில் வாராய்
உயிரெனும் ஓவியம் வடித்தேன் உனக்கு
உயிரே நீயும் பாராய்

Continue Reading »

காதலியே …

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 3 Comments
காதலியே …

காரிகையே எந்தன் காதலியே
கண்ணில் ஏனிந்த காந்தம் கொண்டாய்?
கணைத் தொடுத்தாய் எனைக் கடைந்தெடுத்தாய்
காதல் கலையெனப் பெயரும் தந்தாய்-உன்
விழி யசைவில் எனை வீழ்த்திச் செல்லும்
வித்தையை எங்கு கற்றாய்?

Continue Reading »

பாலு மகேந்திரா – ஜோ தேவ் ஆனந்தனின் பார்வையில்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
பாலு மகேந்திரா – ஜோ தேவ் ஆனந்தனின் பார்வையில்

எங்களால் மகேந்திரன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட பாலு மகேந்திரா, யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர். அந்தக் கல்லூரியிலுள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார். அக்காலத்தில், என்னுடன் பணி செய்த தேவு குலதுங்கவும் நானும் சேர்ந்து அறுபதுகளில் தயாரித்த ”நீயும் நானும்” என்ற நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பாலு மகேந்திரா நடித்திருந்தார். அவர் மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகர், தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் அவர். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைக்கருகே, புகைவண்டி […]

Continue Reading »

காதலர் தினம்

Filed in இலக்கியம், கதை by on February 25, 2014 2 Comments
காதலர் தினம்

1996 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரித் திங்கள் 14 ஆம் திகதி மாலை சுமார் ஆறு மணி.. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு போல் ஃபுட்போர்டு முழுவதும் பிதுங்கி இருந்த கும்பலுடன் அம்பத்தூரிலிருந்து புறப்பட்டு வந்த 20C பல்லவன் பேருந்து வந்து நிற்கிறது. முதல் நிறுத்தத்திலேயே ஏறியிருந்ததால் நல்ல வசதியான இருக்கையில் ஒருவருடன் ஒருவர் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் கணேஷும், லக்‌ஷ்மியும். பொறியியற் கல்லூரி முடித்து இரண்டு வருடங்களாகச் சென்னையிலேயே வேலை செய்து […]

Continue Reading »

கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 4

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 4

கனிபோன்ற காதல் காதலைப் பாடுவதில் தனக்கு எவரும் நிகரில்லாத தனிப்பெருமை பெறுகிறார் கண்ணதாசன். உலகத்து உயிர்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற இயற்கையுணர்வு காதல். கவிதைகளுக்கும், கலைகளுக்கும் வற்றாத ஊற்றாக இருந்து வளம்தருவது காதல். காதல் கொண்ட ஒரு மனம் தனது துணையைப் பற்றி காணும் கனவுகளும், கற்பனைகளும் எத்தனை எத்தனை? இது போன்ற கற்பனைகள் தனது காதலையும், தான் காதலிப்பவரையும் எப்படியெல்லாம் வர்ணித்து அழகு செய்கின்றன? காதல் கொண்ட சாமானியனுக்கே கவித்துவம் பிறக்குமென்றால், கவியரசரின் புலமையையும், கற்பனையையும் […]

Continue Reading »

தவிக்கும் தமிழன்

Filed in இலக்கியம், கதை by on February 25, 2014 3 Comments
தவிக்கும் தமிழன்

சனிக்கிழமைக் காலை ஜன்னலின் வழியே அத்துமீறி உள்ளே நுழைந்த சூரியன் முகத்தில் ஒளிர்வதால், தூக்கத்திலிருந்து எழுந்தேன். இரவில் தூங்கப் போவதற்குமுன் கர்ட்டெய்னை மூடாமல் படுத்ததற்காக என்னையே திட்டிக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். இடதுபுறம் திரும்பிப் பார்த்தால், நமது சகதர்மிணி கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள், பாவம் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்காக உணவு சமைத்து விருந்துபசாரம் செய்து கிட்டத்தட்ட இரண்டு மணிவரை விழித்திருந்த களைப்பில் தூங்குகிறாள்.. தூங்கட்டும் என விட்டுவிட்டு, […]

Continue Reading »

எசப்பாட்டு – காதல்

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 10 Comments
எசப்பாட்டு – காதல்

காதல்.. கனவில் நினைந்து கண்ணில் மலர்ந்து கருத்தில் கலந்து கல்லறைவரை தொடர்ந்தது… காதல்… கன்னியை நினைந்து கருத்துடன் மணந்து கட்டிலில் இணைந்து கருக்களாய் மலர்ந்தது… காதல் களவினில் மலர்ந்து கவிபல புனைந்து கண்ணியம் கலந்து கல்யாணத்தில் முடிந்தது…. -வெ. மதுசூதனன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காதல் கண்ணில் கனிந்து கருத்தில் கனத்து கானமாய் இசைந்து கானலாய் கரைந்தது. காதல் கனவில் மலர்ந்து காஞ்சனமாய் கவர்ந்து காந்தமாய் இழுத்து காலையில் மறைந்தது. காதல் காவியமாய் துளிர்த்து காமத்தில் எரிந்து காலமாகி பொய்த்து […]

Continue Reading »

கனவுக் கன்னி

Filed in இலக்கியம், கவிதை by on January 15, 2014 2 Comments
கனவுக் கன்னி

கண் மூடி நான் நினைத்தால்
கனவு போல் நிழல் உருவம்
கலை நயம் மிகுந்த பிரம்மன்
கருவி கொண்டு செதுக்கிய சிற்பம்

Continue Reading »

தானியங்கி ஊர்தி (Self Driving Car)

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments
தானியங்கி ஊர்தி (Self Driving Car)

நாம் நாளை உலகம், விஞ்ஞான விந்தை என்று திரைப்படம் பார்த்துச் சொக்கிக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில் 21வது நூற்றாண்டு எந்திரங்கள்  சிறிது சிறிதாக எம்மருகில் அண்மித்து, ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்று கூறுவது மிகையாகாது. கீழே இது பற்றிய விவரணை. இதமான காலை வெய்யில் கிழக்கில், முகில்கள் அதிகமற்ற பிரகாசமான நீலவானம் வழக்கம் போல சிவம் வேலைத்தளம் செல்ல ஆயுத்தமாகிறான்.  அழகான பச்சைப்பசேலெனவும், பூக்கள் பூத்துக்குலுங்கும் சிறிய முன்முற்றத்தைத் தாண்டி தரித்திருக்கும் தனது ஊர்தியினுள் வலதுப்பக்கத்தின் சாரதிப் பகுதியில் ஏறிக்கொள்கிறான். […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad