இலக்கியம்
மனப் போராட்டம்
“உன் புக்கைக் கொஞ்சம் தரியா?”
வலப்புறம் திரும்பி வனப்புடன் அமர்ந்திருந்த மாணவிகளின் மத்தியில் அன்றலர்ந்த மலர்போல வீற்றிருக்கும் பாரதியைப் பார்த்துக் கேட்டான் கணேஷ்.
இளங்கலை மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆசிரியருக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆசை
உறங்கிடா உள்ளத்தில் எண்ணிலா ஆசை
உறவன்றி உருவின்றி உயிர்பெற்ற ஆசை.
உருக்குலையுமுன் உயர்வுடனே உரைத்திட ஆசை
உயிரோயுமுன் அத்தனையும் அடைந்திட ஆசை
மதுவின் இரு பக்கம்
அச்சம் நீக்கும் நம்மில் உறவாடும் கவிதை
ஆழ்ந்த துயரை துரத்தும் அருமை அன்னை
இன்பம் தரும் பாதகம் இல்லாக் கணிகை
ஈதல் வளரச் செய்யும் பண்பான தாதை
உளரல் தந்து மழலை ஆக்கும் தாய்மை
புறநானூறுக்காக ஒரு புனிதப் பயணம்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் தமிழார்வலர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடியும், பல்வழி அழைப்பிலும் திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களைப் படித்து, பொருளறிந்து, விவரித்து, விவாதித்து, ரசிக்கிறார்கள். இவர்கள் புறநானூற்றுப் பாடல்களைப் படித்து முடித்தமையைக் கொண்டாட ஒரு விழா எடுத்தனர். ஆம்! வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து “புறநானூறு பன்னாட்டு மாநாடு” ஒன்றை ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில், மேரிலாந்து மாநிலம் […]
தமிழ் இனி
நம் தாய்மொழி தமிழாகும்.
உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி.
அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி.
9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி.
கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி.
வலி சுமந்த பயணம்
விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி
உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது…
ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து
உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது…
கோமடீஸ்வரர்
1980 களில், பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆகாயத்தில் பறந்து கொண்டே மலர் தூவி வணங்கியது பெருமளவு விவாதத்திற்குள்ளானது நினைவிலிருக்கலாம். அந்தக் கோமடீஸ்வரர் சிலை அமைந்திருக்கும் ஷ்ரவணபெளகொளா (Shravanabelagola) செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. மதச் சம்பந்தமான காரணமெதுவுமில்லாமல், சாதாரணச் சுற்றுலாவாகத் தொடங்கிய இந்தப் பயணம் பாதித்த ஒரு சில குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். கர்நாடக மாநிலத்தில், பெங்களூர் நகரிலிருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் […]
மினசோட்டா ஆமிஷ் சமூகம்
மினசோட்டா ஆமிஷ் சமூகம் (Amish Community in Minnesota) மினசோட்டா மாநிலத்தின் தென்கிழக்கு மூலையில் மாநில நெடுஞ்சாலை 52 யில், பிரஸ்டன் (Preston) நகரத்துக்கும், புரொஸ்பர் (Prosper) நகரத்துக்கும் குதிரை வண்டிகளுக்கென அகன்ற பாதை அமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இந்தப் பகுதியில் அமைதியான எளிமையான, இயற்கையான விவசாயக் கிராமிய வாழ்க்கையை ஒற்றி வாழ்கிறது ஐரோப்பியாவில் இருந்து குடியேறிய ஆமிஷ் சமூகம். ஹார்மனி (Harmony), மற்றும் காண்டன் (Canton) பகுதிகளில், ஆமிஷ் சமூகத்தை சேர்ந்த ஏறத்தாழ 100 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் 1970 […]
அமெரிக்காவிலும் சாதி…
2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் இந்தியாவின் சாதி சமுதாயம் ‘இன வெறுப்பை” ஒட்டியது என்று பிரகடனப் படுத்தியது. இதற்கான குறிப்பை இந்த இணையதளத்தில் காணலாம்: https://www.cbc.ca/news/world/story/2007/03/02/india-dalits.html இந்திய அரசாங்கம் இந்தியாவின் சாதிகள் முறை இன வெறுப்பு அல்ல என்றும் சாதிகளையே அழித்து விட்டோம் என்று மறுத்துரைத்தது ஒரு தனிக்கூத்து. ஐ.நா.வின் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அறிக்கை https://www.hrw.org/reports/2001/globalcaste/ அதைச் சற்றுத் தள்ளி வைத்து நடப்புச் செய்திக்கு வருவோம். அமெரிக்காவிலும் சாதி உள்ளதா? என்று […]
இசையுலக இழப்புகள்
இசையுலக இழப்புகள் இம்சித்துத் தொடர்கிறது .. இம்முறை நாம் இழந்தது இரு பெரும் கவிஞர்களை. எம்.கே. ஆத்மநாதன் தமிழ் திரையுலகம் எளிதாய் மறந்து விட்ட ஒரு பெயர். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் எனப் பல துறைகளில் பரிமளித்தவர். மிகக் குறைந்த பாடல்களே (120) எழுதி யிருந்தாலும் அனைத்துமே முத்தான பாடல்கள். உனக்காக எல்லாம் உனக்காக — (புதையல்) தடுக்காதே என்னை தடுக்காதே — (நாடோடி மன்னன்) இன்று போய் நாளை வாராய் – (சம்பூர்ண ராமாயணம்) […]






