\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இலக்கியம்

தமிழ் அழகியல்

தமிழ் அழகியல்

அழகியல் என்பது அழகு, கலை மற்றும் சுவை ஆகியவற்றைப் படிப்பதையும் நாம் இன்பமாக பாராட்டுவதையும் குறிக்கிறது. இது அழகின் இயல்பு, கலை வெளிப்பாடு மற்றும் பல்வேறு வடிவங்களில் அழகை உணர்ந்து ரசிக்கும் மனித திறன் ஆகியவற்றைக் கையாள்கிறது. அழகியல் பற்றிய சில விடயங்கள் அழகு, கலை மற்றும் சுவை ஆகியவற்றின் இயல்புடன் தொடர்புடைய தத்துவத்தின் ஒரு கிளையாகும். கலை, இயற்கை மற்றும் பிற பொருள்கள் அல்லது அனுபவங்களில் அழகைப் பற்றிய நமது கருத்து மற்றும் தீர்ப்புக்கு பங்களிக்கும் […]

Continue Reading »

ஒரு நல்ல வாழ்க்கையின் ஐந்து தூண்கள்

ஒரு நல்ல வாழ்க்கையின் ஐந்து தூண்கள்

சிறந்த சுவிஸ் மனோதத்துவ ஆய்வாளர் கார்ல் ஜுங் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வியக்கத்தக்க நடைமுறை வழிகாட்டியை விட்டுச் சென்றார். பிரபலமான உளவியல் உலகில், ஒரு மாபெரும் நபரின் வேலையைத் தவிர்ப்பது கடினம்: கார்ல் ஜுங், 60 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிக்மண்ட் ராய்டின் ஒரு காலத்தில் கூட்டாளி. உங்களுக்கு ஏதாவது சிக்கலானது இருப்பதாக நீங்கள் நினைத்தால், சுவிஸ் மனநல மருத்துவர் அந்த வார்த்தையை கண்டுபிடித்தார். நீங்கள் ஒரு வெளிப்போக்கு அல்லது உள்முக சிந்தனையாளரா? அதுவும் அவருடைய சிந்தனைகளே. […]

Continue Reading »

கலங்காதிரு மனமே!

கலங்காதிரு மனமே!

“என்னிடம் என்ன தவறுள்ளது என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னைச் சுற்றியுள்ள யாரும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஆதரவான கரங்கள் தேவைப்பட்டது. என் தலையில் நடக்கும் போராட்டத்தின் வேதனையையும் வலியையும் யாராவது புரிந்துகொள்வார்களா, உதவி செய்வார்களா என்று அழுததுண்டு. நான் கெட்டவள் இல்லை. எனது புதிய நிலைக்கு ஏற்ப என்னை சீராக்கிக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். அவநம்பிக்கை கொப்பளிக்க, கூர்மையான பற்கள் கொண்ட கத்தியுடனே எப்போதும் ஓடிக்கொண்டிருந்தேன்”. நம்மில் பெரும்பாலோனோர்க்குத் தெரிந்த மிகப் பிரபலமானவொருவர் […]

Continue Reading »

திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு – 3

திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு – 3

நமக்கு எது அழகாகத் தெரிகிறது? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். நாம் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது அழகு என்று அர்த்தம். அதாவது, அழகு பார்வையில்  மட்டுமே உள்ளதாக நினைக்கிறோம். கண்களின் வழியே நுகரப்படும் அனுபவம் இன்பமளித்தால் அதனை அழகு என வகைப்படுத்துகிறோம். ஆனால் அன்பு ஊற்றெடுக்கும் பட்சத்தில், புற ரூபத்தைக் கடந்த அழகை உணர்கிறோம். உலக அழகிகள் நிறைந்திருக்கும் மேடையில், அன்னை தெரசா வந்து நின்றால் மற்றவர்களைவிட […]

Continue Reading »

நானோ பிளாஸ்டிக் எனும் அசுரன்

நானோ பிளாஸ்டிக் எனும் அசுரன்

சமீபத்தில் ‘நானோ பிளாஸ்டிக்குகள்’ மனித உடலுக்குள் நுழைந்திருப்பதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று வழியாக மனித உடலுக்குள் நுழையும் இவ்வகை மிக நுண்ணிய (மீநுண்) பிளாஸ்டிக் துகள்கள் செரிமானப் பாதை அல்லது நுரையீரலின் திசுக்கள் வழியாக இரத்த ஓட்டத்தில் கலந்து, உயிரணுக்களுக்கு தீங்கு உண்டாக்கும் செயற்கை இரசாயனங்களைப் பரப்புகின்றன என்று நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். கொலம்பியா பல்கலை (நியு யார்க்) மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலை […]

Continue Reading »

நானே சிந்திச்சேன் – ஜனநாயகத் திருவிழா

நானே சிந்திச்சேன் – ஜனநாயகத் திருவிழா

வீட்டுக் காலண்டர், அன்றைக்கு என்ன கிழமைன்னு சொல்லுதோ இல்லையோ, ஜனாவிடமிருந்து ஃபோன் வந்தால் அது ஞாயிற்றுக்கிழமையென்று அடித்துச் சொல்லலாம். ஃபோனை எடுத்து ‘ஹலோ’வென்று சொல்லும் முன்னரே  “மச்சி .. லைன்ல யாரு இருக்குறதுன்னு சொல்லு?” என்றான். “இதென்னடா கேள்வி.. நீ ஃபோன் போட்டா நீ தான் லைன்ல இருப்ப .. கூட, வீணா போன வரது வேணா இருப்பான்..” “என்னடா இப்டி பொசுக்குனு இன்சல்ட் பண்ணிட்ட.. நல்ல வேளை அவன இன்னும் நான் ‘கான்ஃப்ரன்ஸ்’ பண்ணல.. இது […]

Continue Reading »

சித்திரை வருடப் பிறப்பு

சித்திரை வருடப் பிறப்பு

சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் […]

Continue Reading »

மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா (மார்ச் 2024)!

மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா (மார்ச் 2024)!

இரு நண்பர்கள் வலைச்செயலி மூலம் வெகு நாட்களுக்குப் பின்னர் உரையாடுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றாகப் படித்து, வேலை பார்த்துப் பின்னர் உலகத்தின் இரு வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வேரூன்றியவர்கள். பேச்சு அலுவலக வேலை, சினிமா, வீட்டுப் பராமரிப்பு முதலியவற்றைக் கடந்து குழந்தைகள், அவர்களுடைய படிப்பு ஆகியவற்றை நோக்கிச் செல்கிறது. “எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்கு, ஆனா, பசங்க மெதுவாத் தமிழை மறந்திடுவாங்களோனு தோணுது.” “ஏன், உங்க ஊர்ல தமிழ்ப் பள்ளியோ இல்ல தமிழ்ச் சங்கம் மாதிரி அமைப்புகளோ இல்லியா?” […]

Continue Reading »

திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு

திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு

சென்ற பதிவில், பார்வையற்ற ஒர் இளைஞன், தனக்கு நெருக்கமான ஒரு பெண்ணின் அழகைத் தொட்டு, உணர்ந்து தான் கேள்விப்பட்ட பொருளோடு ஒப்புமை செய்த பாடலான ‘அழகே, அழகு’ பாடலைக் கண்டோம். ஒரு சாமான்யருக்கே காதல் வசப்பட்டவுடன், உலகமே அழகாக தோன்றத் துவங்கிவிடும்; பார்க்கும் பொருட்களை எல்லாம் இனிமை பொங்கிட, தனது காதலி/காதலனுடன் இணைத்துப் பார்க்கத் தூண்டும். ‘பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது; பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது’ என்ற நிலையே பொழுதெல்லாம் நீடிக்கும். இயற்கையின் படைப்புகளிலுள்ள அழகையெல்லாம் […]

Continue Reading »

வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்

வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்

“வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்” பற்றிய வாசிப்பனுபவம் பற்றி உங்களுடன் சற்றுப் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். தலைப்பு கொஞ்சம் வில்லங்கமாகவும் விகாரமாகவும் தெரியலாம். கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தின் தலைப்பே இது. கவிஞர் வேணு தயாநிதி தற்போழுது மினசோட்டா மாநிலத்தில் வசித்து வருகின்றார். இவரின் இந்தக் கவிதை நூல் 2023 டிசம்பரில் ‘யாவரும் பதிப்பகம்’ மூலம் வெளியானது.  தமிழ் நாட்டைச் சேர்ந்த கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் இப்போது அமெரிக்காவில் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad