இலக்கியம்
ஜெய்ஹிந்த்
“ஜனா..” “ம்ம்.. சொல்லு ..” “அப்பா போய்ட்டாரு..” சின்னதாக விசும்பினாள் பூனம். “.. எப்போ…”.. “இப்போதான் மூணு நிமிஷம் இருக்கும் ..” “அம்மா எப்படியிருக்காங்க..” “அழுதுட்டே இருக்காங்க… ஒரு நிமிஷம் .. டாக்டர் கூப்பிடறாராம்… முரளி கிட்ட தரேன் .. பேசு..” … “ஹலோ.. ஜனா? ஏ சாரிடா ..எவ்ளோ ட்ரை பண்ணோம்.. ஒன்னும் முடியாதுன்னுட்டாங்க.. சிவியர் நிமோனியா..” “சந்தோஷ் எங்க இருக்காரு இப்போ.. “ “அவருக்கு இன்னும் உதாம்பூர் டிப்ளாய்மென்ட் முடியல.. காலைல கூடப் பூனம் […]
தலைவன் இருக்கின்றான்!
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! இந்த வாக்கியத்தைக் கலைஞர் கருணாநிதி அவர்களின் கரகர குரலினால் இனி நாம் நேரில் கேட்கப்போவதில்லை! காவேரி கரையில் பிறந்தார்…காவேரியில் மறைந்தார் என்ற கடைசி சேதி கேட்டதும் குபுக்கென்று நம்மையும் அறியாமல் கண்ணீர்! வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருவமில்லா உருண்டை உருவாகியது போல ஒரு பிரமை. நம் சொந்தத்தை இழந்தோம் என்றால் என்ன வலியை அடைவோமோ அது போல பலமடங்கு வலி! ஓய்வறியாச் சூரியனாகத் திகழ்ந்த கலைஞர் அவர்களை உலகெங்கும் […]
வேலை தேடுங்க !!!
அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு! என்ற திருவள்ளுவரின் வாக்குக்கிணங்க, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருட் செல்வமாகும். ஆசைகளைப் பெருமளவு அடக்கி, எளிமையான வாழ்வு நடத்துபவருக்கும் பொருள் என்பது இன்றியமையாததே. முற்றும் துறந்த ஞானியர் தவிர மற்ற அனைவரும், பொருளீட்டும் முயற்சியில் முழுவதும் ஈடுபடுவது புரிந்து கொள்ளக் கூடியதே. அதுபோன்ற பொருளீட்டும் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அவரவரின் திறமைக்கும், தகுதிக்கும் ஒப்ப ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிவதும் உலக வழக்குகளில் ஒன்றே. அவ்வாறு […]
நட்புக்கான நந்நாள்
பசியென்றால் பகர்ந்திடலாம் அன்னையிடம் – அவளும் புசியென்றே படைத்திடுவாள் அறுசுவை விருந்து!! படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார் அரும்பொருள் அவரும்!! மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள்!! வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான்!! வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள்!! பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான்!! அன்பிற்குச் சிலநாள் […]
ஐந்தாம் தூண்
மரபுசார்ந்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற அச்சு, காட்சி ஊடகங்களை அரசாங்கம் ஒருகட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறோம். பத்திரிகைகள் நடத்தும் சுய தணிக்கைகளை மீறி அரசாங்கம் மறு தணிக்கை செய்த ‘அவசர நிலை கால’ கட்டுப்பாடுகளைக் கண்டிருக்கிறோம். அரசாங்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்கள் அரசு கேபிள்களில் காணாமல் போய்விடும். அவதூறு வழக்கு, கிரிமினல் வழக்கு என்று தொடுத்து, பத்திரிக்கையாளர்களை அச்சத்தில் உறைய வைக்கும் யுக்தியையும் அரசாங்கம் கடைப்பிடித்ததுண்டு. வெளிப்படையாகக் கைது செய்ய […]
வருக வருக 5ஜி
2ஜி, 3ஜி, 4ஜி… இது 5ஜி.. என்று ஆறுச்சாமி மாடுலேஷனிலும், ஓங்கி கீ-போர்டுல அடிச்சா ஒன்றரை ஜிபி டவுன்லோடுடா… என்று சிங்கம் போல் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டும் இணையத்தின் அடுத்தத் தலைமுறையான 5ஜி ரெடியாகிக்கொண்டு இருக்கிறது. 5ஜியைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு அதன் மூதாதையர்களைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். ஜி என்பது ஜெனரேஷன் என்று ஒரு தலைமுறையைக் குறிக்கிறது. ஒயர் மூலம் போன் பேசிக்கொண்டிருந்த கற்காலம் தான் 0ஜி காலம். அதாவது, 1940 காலக்கட்டம். அதன் பின்பு, 1980களில் […]
ஆயிரங்காலத்துப் பயிர்
“கணேஷ், நோக்கு நெனவிருக்கா… நாம மொதமொதல்ல பாத்துண்டது இந்த மரத்தடியிலதான்”…. பாரதி இந்த வாக்கியத்தைச் சொல்கையில், அவளின் கண்கள் பனித்ததைக் கணேஷ் கவனிக்கத் தவறவில்லை. “யெஸ் பாரதி, கோல்டன் டேஸ்” என்று பொதுவாய்ச் சொல்லி வைத்தான். “லைஃப் எப்படிப் போயிண்ட்ருக்கு, கணேஷ்” பாரதி தொடர்ந்தாள். தங்களது இருபத்தி ஐந்தாம் வருடக் கல்லூரி நிறைவைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த அனைத்து முன்னாள் மாணவர்களின் குடும்பங்களிலிருந்தும் சற்று நழுவி, தனிமையில் இவர்களிருவர் மட்டும் சந்தித்துப் பேசத் தொடங்கியிருந்தனர். நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் […]
பள்ளிக்கூட வழித்தடம்
ஊருக்குக் கிழக்கால, கோயிலுக்குப் பக்கத்துல அமைதியா இருக்குற என் பள்ளிக்கூடம் .. மேற்கால இருக்குற மேட்டுத் தெரு வீதியில ஓலக் குடிச தான் என் வீடு… ஒத்தயடிப் பாத ஒண்ணு , வளைஞ்சு நெளிஞ்சு போயிருக்கும்!! குண்டும் குழியுமா கல்லெல்லாம் நெரஞ்சிருக்கும். காலையில விடியு முன்ன கால் நடையா நடந்தாத்தான் வகுப்பறை மணிக்கு முன்ன வாசலில் சேர முடியும் ஏரிக்கரையோரம் போகயில தாமரப் பூ வாசம் வரும்! கரையோரப் பனமரத்துல இளப்பார நிக்கத் […]
ஆசை…
வண்ணமாய்ச் சிலதும் வம்புக்காய்ச் சிலதும் சின்னதாய் ஆசைகளைச் சிறகடித்துக் கேட்டபாடல்! எண்ணமும் செயலும் இருவேறாகாத நிலை திண்ணமுற வேண்டுமென்ற ஒன்றதுவே நம்மாசை! நண்பர்கள் பலரும் நயமுடன் பேசுகையில் பண்புடன் ஒருவர் தம்மனது திறந்திட்டார் இன்பமாய் அவர் எப்போதும் எண்ணுவது துன்பங்கள் துறந்த பின்னோக்கிய பயணமாம்!! கம்பும் நெல்லும் வரகும் விளைத்திடும் வம்பும் வழக்கும் நினைந்திடா விவசாயியாய் அன்பும் அழகும் பூத்துக் குலுங்கிடும் என்பும் பிறர்க்கெனும் மக்கள் நிறைந்திட்ட ஏரிக் கரையினில் எழிலான கிராமம் […]
கேன்சஸ் புலிகள் பாதுகாப்பகம்
உலகில் அருகி வரும் உயிரினமான புலிகளைப் பற்றிய தகவல் ஒன்று நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்தக்கூடும். உலகிலுள்ள காடுகளில் உள்ள புலிகளை விட, அமெரிக்காவில் தனியார் வசம் சிக்கியுள்ள புலிகள் அதிகமாம். வெளிநாட்டில் இருந்து வரும் மனிதர்களுக்கு ஆயிரதெட்டுக் கட்டுப்பாடுகள் இருக்கும் நாட்டில் புலிகள் போன்ற காட்டுவிலங்குகளுக்கென பாதுகாப்புச் சட்டங்கள் ஏதும் இல்லை. சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வீடுகளில் செல்லப்பிராணியாகவும், காட்சிப்பொருளாகவும் இவ்விலங்குகள் பல பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் இவற்றால் ஆபத்து ஏற்படுவதும் நிகழ்கிறது. நிலைமை இப்படி இருக்க, சட்டப்பூர்வமாகக் […]






