இலக்கியம்
ஆறப்போட்ட தோசைக்கல்
’சூடாகிய தோசைக் கல்லை ஆறவிடக்கூடாது’ என்று சொன்னவர் விஜி, மருத்துவர் சம்பந்தத்தின் மனைவி. மருத்துவர் ஜானகிராமனும் மருத்துவர் சம்பந்தமும் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி ஹார்வர்ட் தமிழ் இருக்கையை வெற்றிகரமாக நிறுவியது எல்லோரும் அறிந்ததே. உலக மக்களிடையே ஹார்வர்ட் தமிழ் இருக்கை ஏற்படுத்திய எழுச்சியை நேரில் கண்ட விஜி சொன்னார், ’இந்த எழுச்சி அலை இருக்கும்போதே ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையைத் தொடங்கிவிடவேண்டும்.’ அதன்படியே ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பினர் கனடா தமிழ் பேரவையுடன் […]
சுதந்திர தின வாழ்த்துக்கள்!
அன்பும் அறனும் விளைந்திட, வேண்டும் சுதந்திரம்! ஆசைகள் நல்வழியில் அடைந்திட, வேண்டும் சுதந்திரம்! இல்லறம் இனிதாய் நடத்திட, வேண்டும் சுதந்திரம்! ஈகையும் கொடையும் பெருகிட, வேண்டும் சுதந்திரம்! உற்றார் உறவினை ரசித்திட, வேண்டும் சுதந்திரம்! ஊரார் ஒன்றாகி மகிழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்! என்றும் நிறைவாய் வாழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்! ஏழைகளும் இயைந்து முயன்றிட, வேண்டும் சுதந்திரம்! ஐயம் அகன்று தெளிந்திட, வேண்டும் சுதந்திரம்! ஒன்றாய் உலகோர் உழன்றிட, வேண்டும் சுதந்திரம்! ஓங்குபுகழ் நாடாய் விளங்கிட, வேண்டும் சுதந்திரம்! […]
ஐந்தாம் தூண்
“மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சியே ஜனநாயகம்”. ஜனங்களை (மக்களை) பிரதானமாகக் கொண்ட இந்த ஆட்சிமுறை பின்னர் மக்களாட்சி என்றானது. நிர்வாகக் கிளை (executive), சட்டமன்றம் (legislative), நீதித்துறை (judicial) என்ற மூன்று கூறுகளாக மக்களாட்சி நிறுவப்பட்டது. ஜனநாயகத்தின் தூண்கள் எனப்படும் இந்த மூன்று கூறுகளின் செயல்களைத் திறனாய்வு செய்து விமர்சிப்பதோடு, அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக அமைவதும் செய்தித்துறையின் முக்கியப் பொறுப்பு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘லண்டன் […]
வனப்பான வண்ணத்துப்பூச்சி சரணாலயம்
பலவகை வண்ணத்துப்பூச்சிகளை பார்த்திட ஓரிடம் கனேடிய கேம்பிரிஜ் சரணாலயம். கோடையில் அமெரிக்க மிச்சிகன் மாநிலத்திலிருந்து ரொறான்ரோ மாநகர் நோக்கி 401 பெருஞ்சாலையில் (highway) செல்லும் போது பரந்த பச்சைப் பசேல் நிலங்கள் இருபுறமும் காணப்படும். இது சனநெருக்கடியான சிமெந்து கட்டடக் காடுகளால் ஆன டெட்ராயிட் நகரையும் , மத்திய ரொறான்ரோ நகரையும் விட மிகவும் இதமான காட்சி ஆகும். இந்தப் பெருஞ்சாலையில் செல்லும்பொழுது சாலையோர அறிவுப்புப் பலகைகள் பல வரும். இவற்றில் குவெல்ஃப், வாட்டலு பல்கலை […]
சந்தமும் சங்கீதமும்
தமிழ்த் திரையிசையுலகை தங்களது வரிகளாலும், இசையாலும் மிகச் சிறப்பாக ஆண்ட இரு மேதைகள் பிறந்த தினம் ஜூன் 24. இயற்கையின் வியத்தகு படைப்புகளில் மிக உன்னதமான நிகழ்வு இது. இந்தக் காரணத்தால்தானோ என்னவோ இந்த இருவர் கூட்டணியில் உருவான பாடல்களெல்லாம் தமிழர் நெஞ்சங்களில் என்றும் நீங்காத தனியிடத்தைப் பிடித்துவிட்டன. இன்று தமிழ்த் திரையிசை பிரமிப்பூட்டும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. வித விதமான கருவிகள், பலப்பல குரல்கள், அசர வைக்கும் ஒலிப்பதிவு, தொழில்நுட்பம், எல்லைகள் இல்லா இசைச் சுதந்திரம் இப்படி […]
மனித வக்ரங்கள்
”கணேஷ், நான் கேள்விப்பட்டது உண்மையா?”.. பாரதியின் குரலிலிருந்த கோபத்தை உடனடியாக உணர்ந்தான் கணேஷ். எதைப்பற்றிக் கேட்கிறாள் என்று உள் மனது சொல்ல, வயிற்றிற்கடியில் ஒரு தீப்பந்து உருண்டு தொண்டைவரை வந்ததுபோல் உணர்ந்தான். அதைத் தெரிந்து கொண்டிருப்பாளா என்று மனது பயமுறுத்த, அதுதான் என்று முழுதாகத் தெரியும்வரை, தானாக எதுவும் வாய்விடுவதில்லை என்ற தீர்க்கமான முடிவுடன் இருந்தான். “எதப்பத்தி கேக்ற, பாரதி” … குரலில் வழக்கத்திற்கதிகமான குழைவை ஏற்படுத்திக் கொண்டு கேட்டான் கணேஷ். “நோக்கு நன்னாத் தெரியும் […]
உங்களுக்குத் தெரியுமா?
வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய சில தெரிவுகள் வண்ணத்துப்பூச்சிகள் பூவில் இருந்து அமிழ்தத்தை (nectar) தமது நீண்ட தும்பிக்கை வாய்மூலம் உறிஞ்சிக் குடித்துக் கொள்ளும். சில வகை வண்ணத்துப்பூச்சிகள் பழங்களில் இருந்து இரசத்தையும், நீர் போன்றவற்றையும் உட்கொள்கின்றன. பல வண்ணத்துப் பூச்சிகள் உணவருந்த ஈரமான இடத்திற்கு வருகை தருவது சேற்றுக்கும்மாளம் (puddle party) என்றழைக்கப்படும். பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகள் வாழ்க்கை 2 வாரங்களே. ஆயினும் வட அமெரிக்க இராச வண்ணத்துப் பூச்சிகள்( Monarch Butterflies) அவற்றின் கால நிலைப் பெயர்ச்சி சந்ததிகள் […]
முடிவில்லாப் பயணம்!!
மூடுபனிக் காலத்துப் பனிச் சாரலில் முழுமதி இரவின் ஒளி ஊடுருவலில் முகவரி அறியாக் காதலைத் தேடி முடிவில்லாது பயணிக்கிறேன்…! கானல் நீரோ …? காட்சிப் பிழையோ …? காதல் நெஞ்சில் கவிப் பாடிட கடைவிழி யசைவில் விழுந்த நானோ கட்டுண்டு கிடக்கிறேன் அவளாளே …! மகரந்தம் வீசும் மானசீகக் காதலில் மங்கை மனதினில் புயல் மையம் கொண்டிட மணாளனின் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திட மண்டியிட்டு தொழுகின்றேன் மனதாலே ..! இன்னிசை மழையில் நனைந்து […]
ஒரு நாள் விரதம்
“அப்பா“ பத்து வயது விக்னேஷ் குரல் கொடுத்தான். “ம்” என்ற ஒற்றை எழுத்தாக பதில் அளித்தான் அரவிந்த். “அப்பா” மீண்டும் கவனம் ஈர்க்கும் விதமாக ஒரு ஏற்றத்துடன் அழைத்தான் விக்னேஷ். “சொல்லு “.. ஒரு எழுத்து ஒரு சொல்லாக மாறி பதில் வந்தது. சமையல் அறையில் இருந்து கௌசி, “அரவிந்த் , விக்னேஷ் ஏதோ உங்க கிட்ட சொல்ல வரான் . தயவு செய்து கொஞ்சம் என்னன்னு கேளுங்க “ கணிப்பொறி திரையில் ஒரு கண் வைத்தபடியே, […]
எனைப் பெத்தவளே …!!
இருட்டு அறையின் இதயத் துடிப்பில் இன்பமாய் உறங்கினேன் இனி வேண்டினாலும் கிடைக்குமோ ..! கண்ணிமைக்கும் நொடியிலும் கண்ணிமைக்காது காத்தவள் காத்துக்கறுப்பு அடிச்சுடும்னு கண்ணுக்குள்ளே குலசாமியா காத்தவளே ..! அமுதளித்த அன்னபூரணியான அன்னையின் மடியில் அந்திப்பொழுதில் தலைசாய்க்கையில் அகிலமெல்லாம் நிறைஞ்சவளே ..! உறவுகளின் பாலமானவளும் உன்னதத்தின் மகத்துவத்தை உள்ளத்தில் திரைகடலோவியமாய் உயிர்களின் உயிராய்க் காத்தவளே ..! எனைப் பெத்தவளே ..!! நீ ஆண்டு நூறு வாழவேணும் …!! எனைப் பெத்த மகராசி ..!! […]






