இலக்கியம்
முகமறியாக் காதல்
முகம் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
முகமறியா முகப்புத்தகத்தில்
முதல்வனாய் என்னுள் முளைத்த
மூன்றெழுத்துக் காதலுக்கு …!!
மனதில் தோன்றிய முதல் காதல்
மனிதனாய்ப் பிறந்ததன் பயனை அறியச் செய்த காதல் …
மனிதனுள் புதைந்த சுவடுகளை
மனதினுள் புகுந்து வெளிக்கொணரும்
மகத்துவமே காதல் ….!!
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 8
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற முப்பத்தியொன்றாம் ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்கத் தேர்தல் களத்தின் உஷ்ணத்தைச் சற்றுக் குறைத்தது அல்லது ஊடகக் கண்களின் பார்வைக் கூர்மையை மழுங்கடித்தது எனலாம். இரண்டு பெரிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் முன்னிறுத்தப்பட்டு, இரண்டு வேட்பாளர்களும் அனல் பறக்க மோதிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆகஸ்ட் மாதம், அரசியல் களத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகப் பரபரப்பின்றி கடந்து சென்றது. இருப்பினும் அவ்வப்போது சில அதிர்வலைகள் ஏற்பட்டன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாமலோ, அல்லது அமெரிக்கா அதிகப் போட்டிகளில் […]
ஏண்டியம்மா எங்க போற?
வயக்காட்டில உழைச்சுக் களைச்ச
மாமன் மனசை விரசாப் போயி
முந்தானையில் அள்ளி முடிய
முந்திட்டுப் போறியோ….
ஏக்கங்களை நெஞ்சில் வச்சு
எட்டி நின்னு பார்த்த பொண்ணு
மாமன் கையில் தாலி வாங்க
துள்ளிக் குதிச்சு போறியோ…
கவிதைக் கண்கள் !
உன் பார்வைகள்
என் மீது
பட்டுத் திரும்பியபோது
என் உடம்பில்
புது இரத்தமே பாய்ந்தது !
என் இதயம்
எல்லாம்
கவிதைகள் நிரம்பின !
எங்கெங்கும் ஏரி…
நியூயார்க்கிற்கு வானுயர்ந்த கட்டிடங்கள், ஃப்ளோரிடாவிற்குக் கேளிக்கைப் பூங்காக்கள், கொலரடோவிற்கு மலைத்தொடர்கள், வேகாஸிற்குச் சூதாட்ட விடுதிகள் என்பது போல மினசோட்டாவிற்குப் பெருமை சேர்ப்பது ஏரிகள். பாருங்கள், எவ்வளவு ரம்மியமான அழகு சேர்க்கும் பெருமை!! ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏரிகள் கொண்ட மாநிலம், மினசோட்டா. இதைக் கேள்விப்பட்டு, பிறகு மினசோட்டாவிற்கு வந்த பிறகு, எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் இருக்க, எனக்குத் தோன்றியது – “இது அனைத்தையும் கூட்டி தான் பத்தாயிரமோ?”. நாங்கள் இருந்த அபார்ட்மெண்டில் கூட, ஒரு […]
ஆட்டிஸம் – பகுதி 9
(பகுதி 8) ஆட்டிஸத்துடன் புழங்கும் சமூகத்திற்கு, நம்பிக்கையூட்டும் விதமாக, நேர்மறையான எண்ணங்களுடன் எதையும் அணுகுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது அனைத்து மனித சமூகத்திற்கும் தேவையான ஒன்று என்றாலும், பாதிப்புள்ளானவர்களுக்கு மிகவும் தேவையான, உதவிகரமான ஒரு பண்பு. பொதுவாக, நாமனைவருமே நல்ல விளைவுகள் வரவேண்டுமென நினைத்து, நல்லதையே செய்கிறோம். நம்பிக்கையூட்டும் விதமாகச் செயல்படுவது நல்லதையே செய்வதற்கு ஒரு உந்து சக்தியாகவே அமைகிறது, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த வழிமுறை ஆட்டிஸக் குழந்தைகளை […]
கற்கை நன்றே !!
பொட்டல் காடெல்லாம் புழுதியாப் பறக்குது
நட்டநடு வீட்டடுப்பில் நாய்பூனை தூங்குது
கட்டடம் கழனியெல்லாம் கனவுபோல மறையுது
பட்டமரம் போலவெங்கும் பஞ்சமாத் தெரியுது…..
மாற்றம்
டாம் என்கிற தமிழரசன் முகத்தில் ஒரு பரபரப்புத் தெரிந்தது. மினியாபோலிஸ் இருந்து லாஸ் வேகாஸ் புறப்படத் தயார் ஆகி கொண்டிருந்தான். அதுவும் இல்லாமல் அவனுடைய நெருங்கிய நண்பனுடைய வருகைக்காகவும் காத்துக் கொண்டிருந்தான். நண்பன் ரஞ்சித் தொலைபேசியில் எவ்வளவு கேட்டும் டாம் பதில் சொல்ல மறுத்தான். “நேரில் வா பேசிக்கொள்ளலாம். இரண்டு நாளைக்கு வேண்டிய துணிமணி எடுத்துக்கொண்டு வா” என்றான். ரஞ்சித் தனது மனைவியை இழந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. திடிரென “வா […]
அறுந்த ஆனந்த யாழ் – நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி
கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது எவ்வளவு கவனமாக இருந்தாலும் பார்க்காமலே அறிந்து கொள்கிறார் 2000 ஆம் ஆண்டில் டீன்-ஏஜைக் கடந்தவர்களுக்கு, தங்களுக்கான இளமை, காதல், சோகம், பாசம் போன்ற உணர்வுகளைப் பாடல்களாக வார்த்தெடுத்துக் கொடுத்தவர், கவிஞர் நா. முத்துக்குமார். அதனாலேயே, நா. முத்துக்குமார் மறைந்த செய்தியை ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று கேட்டபோது, அது இத்தலைமுறையினருக்குப் பெரும் இழப்பைக் கொடுப்பதாக இருந்தது. 1975இல் காஞ்சிபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், இளம் வயதிலேயே தனது தாயாரை இழந்தார். அந்தச் சோகம் […]
அபாயகாலத் தயார்நிலைப் பொட்டலம்
(English Version) நாம் வாழும் சூழல்களில் கோடைக்கால அடைமழைகளும், பனிக்காலப் புயல்களும் பொதுவாக ஏற்படும் விடயங்கள். இப்பேர்ப்பட்ட கால நிலைகளில் நாம் நிதானமாக ஆலோசித்து முன்கூட்டியே செயல்படுவதன் மூலம், நாம் எமக்கும் எமது குடும்பத்திற்குமான கடைசி நேர அசௌகரியங்களைத் தவிர்த்திட வழிபண்ணிக்கொள்ளலாம். இதற்கு நாம் இலகுவாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய தயார்நிலைப் பொட்டலங்களை அமைத்துக் கொள்வது சாலவும் நன்று. எந்த அபாயக்கால பொழுதையும் எதிர்கொள்ள நாம் எமது குடும்பத்திற்கு 72 மணித்தியாலங்கள் அல்லது 3 நாட்களுக்குத் தேவையான […]






