\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

Emergency Kit

Emergency Kit

As summer rains and winter storms are upon us, it is best to keep ourselves ready for emergencies. Emergency kit should be a quickly portable set of supplies that would keep you going for some time. It has to easy accessible items at home or when family needs to be on the move due to […]

Continue Reading »

பேரவை தமிழ்விழா -29

பேரவை தமிழ்விழா -29

வட அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது மொழி, பண்பாடு, மரபுக்கலைகள் மற்றும் தொன்மைப் போன்றவற்றைத் தக்கவைத்துக் கொள்வதோடு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும், மற்றும் இங்கு வசிக்கின்ற தமிழர்களை அமைப்பாக்கிடும் நோக்கத்திலும் ஆங்காங்கே தொடங்கப்பட்டவை தமிழ்ச் சங்கங்கள். வட அமெரிக்கா முழுவதும் வேரூன்றியுள்ள பெரும்பாலான தமிழ்ச் சங்கங்களை ஒற்றைக் குடையின் கீழ் திரட்டிய கூட்டமைப்பு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க விடுதலை நாள் விடுமுறையில் – ஜூலை மாத முதல் வாரத்தில் – […]

Continue Reading »

போக்கிமான் –கோ

போக்கிமான் –கோ

* டிவிட்டர், ஃபேஸ்புக் பயனார்களின் எண்ணிக்கை முறியடிப்பு * ஏரிக்கரையில் பிணம் மிதப்பதைக் கண்ட சிறுமி * மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவர்கள் * ஒரே மாதத்தில் 120% வளர்ச்சியடைந்த நிறுவனப் பங்கு இதையெல்லாம் சில நாட்களாக ஆங்காங்கே கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். ‘பாக்கெட் மான்ஸ்டர்ஸ்’ – ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சதோஷி தஜிரி (Sadoshi Tajiri) என்ற ஜப்பானியரின் மூளைக்குள் உருவான கற்பனை அரக்கர்கள் இன்று உலகின் சில பகுதிகளில் கோடிக்கணக்கானவர்களை ஆட்டி வைத்துக் […]

Continue Reading »

தமிழில் இணையதளப் பெயர்கள்

தமிழில் இணையதளப் பெயர்கள்

உங்கள் கணினி இணைய உலாவியில் (browser), என்றேனும் www.panippookkal.com என்பதற்குப் பதில் பனிப்பூக்கள்.com என்று தட்டச்சுச் செய்து, பின்பு திருத்தியிருக்கிறீர்களா? இனி திருத்த வேண்டாம். அதுவும் உங்களைப் பனிப்பூக்கள் தளத்திற்குச் சரியாகக் கொண்டு வந்துவிடும். அதாவது, இணையத்தளங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், தமிழ் போன்ற மற்ற உலக மொழிகளிலும் வைப்பதற்கு வழிவகைகள் இருக்கின்றன. இனி, அழகுத்தமிழிலேயே இணையதளங்களுக்குப் பெயர் வைக்கலாம். அவ்வாறே, உலாவியில் தமிழில் குறிப்பிட்டு, அத்தளங்களுக்குச் சென்று அடையலாம். இது எப்படிச் செயல்படுகிறது? முதலில், பொதுவாக […]

Continue Reading »

பாதச்சுவடுகள் !

Filed in இலக்கியம், கவிதை by on July 31, 2016 0 Comments
பாதச்சுவடுகள் !

ஒளி பொருந்திய பாதையில்
விழி திறந்து பார்க்கையில்
என்னிலும் உன்னிலும்
நம் நெஞ்சங்களில்
நிலைத்து நிற்கும்
விரிந்து கிடக்கும்
எண்ண முடியாத
எண்ணிக்கையில்லாத
இனிய பாதச்சுவடுகள் !

Continue Reading »

எது பிரதானம்?

Filed in இலக்கியம், கவிதை by on July 31, 2016 0 Comments
எது பிரதானம்?

எண் சாண் வயிறுக்கு சிரசே பிரதானம் !!

சொல்லக் கேட்டிருப்பீர், ஆழ்ந்து சிந்தித்ததுண்டோ?
சிரசே பிரதானமோ, சீரிய பேச்சிதுவோ?

சுட்டெரிக்கும் வெய்யிலிலே, சுகம் கருதா வாழ்வினிலே
பட்ட துயரனைத்தும் பாழும் வயிற்றினாலிலையோ?

தற்குறிப் பாமரர்களையும் தானேற்ற பதவிகளால்
திறமைமிகு பண்டிதரும் துதிபாட வைத்திலையோ?

Continue Reading »

ஆட்டிஸம் – பகுதி 8

ஆட்டிஸம் – பகுதி 8

(ஆட்டிஸம் – பகுதி 7) ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ள குடும்பத்திற்கு, நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் சமூகமாக ஒன்று கூடுதல் ஒரு கடினமான சோதனையாகக் கூடும். பல கேள்விகளையும், பல விதமான பார்வைகளையும் சந்திக்க வேண்டிவரும். அதுபோன்ற இடங்களுக்குக் கிளம்புவதற்கு முன்னர், குழந்தை இன்று எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்குமா, அதிகமாகச் சிரித்துக் கொண்டிருக்குமோ அல்லது அழுது கொண்டிருக்குமோ, எங்காவது மோதிக் கொண்டு காயப்பட்டுக் கொள்ளுமோ, மற்ற சக குழந்தைகளுடன் சரியாகப் பழகுமோ – இது போன்ற […]

Continue Reading »

காதல் கொண்டேனடி !

Filed in இலக்கியம், கவிதை by on July 31, 2016 0 Comments
காதல் கொண்டேனடி !

நீ காஷ்மீர் சென்றால்
இமயமலையே திரும்பிப் பார்க்கும்
நீ கன்னியாகுமரி சென்றால்
கடலும் எழுந்து பார்க்கும்
யார் இந்த ( கன்னிய)குமாரி என்று

நீ எல்லையில் நடந்தால்
தீவிரவாதமோ தவிடு பொடியாகும்
சேலையின் தகதகப்பில் கடுங்குளிரும்
தென்றலாய் வருடிடும்

Continue Reading »

செம்புலப் பெயல் நீர்…….

Filed in இலக்கியம், கதை by on July 31, 2016 0 Comments
செம்புலப் பெயல் நீர்…….

“கமான்.. காந்தி கேரளாலதான் பொறந்தாரு”… மூன்றாவது முறையாக அடித்துச் சொல்லும் அருணாவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கணேஷ் என்ன சொல்வதென்று புரியாமல் திகைப்புடன் நிற்கிறான். “இல்லம்மா, நான் தான் சொன்னேனே… வந்து…” வாக்கியத்தை முடிக்கு முன்னர் கணேஷை இடை மறித்த அருணா, “நான் மம்மிக்கிட்ட கேட்டுக் கன்ஃபர்ம் பண்ணிக்கிறேன்” என்று முறைப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள். “ம்ம்…. இந்தப் பொண்ணையா நாம?….” என்று நினைக்கத் தொடங்கி, ”நோ நோ.. அப்டி நெனைக்கக் கூடாது” தன்னைத் தானே […]

Continue Reading »

லெக்ஸி

Filed in இலக்கியம், கதை by on July 31, 2016 0 Comments
லெக்ஸி

வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது.  லிவிங் ரூமில் தனது விரிப்பில் படுத்திருந்த லெக்ஸி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு ஓடியது. மடிக்கணினியில் எதையோ பார்த்தவாறு, ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பவி “வாசல்ல யாரோ வந்திருக்காங்க போலருக்கு..நான் அப்புறமா கூப்பிடட்டுமா .. ம்ம்? சரி.. நீயே கூப்பிடு” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்துவிட்டு எழுந்தாள். அதற்குள் கதவோரக் கண்ணாடி வழியே ஒரு சிறுமி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த லெக்ஸி, பவியிடம் ஓடி வந்து வேகமாக வாலை ஆட்டியவாறு, கதவைச் சீக்கிரம் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad