இலக்கியம்
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 7
அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு பெருங்கட்சிகளின் மாநாடு நடந்து முடிந்து விட்டன. கிளீவ்லாண்ட், ஓஹையோ வில் ஜுலை 18-21 நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் அக்கட்சி சார்பில் டானல்ட் ஜான் ட்ரம்ப் அதிபராகவும், மைக்கேல் ரிச்சர்ட் பென்ஸ் துணை அதிபராகவும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். பிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஹிலரி ராடம் கிளிண்டன் அதிபராகவும், டிமோதி மைக்கேல் கெய்ன் துணை அதிபராகவும் அறிவிக்கப்பட்டனர். குடியரசுக் கட்சி மாநாடு பொது மக்களாலும், ஊடகத் துறையினராலும், அரசியல் நோக்கர்களாலும் பெரிதும் […]
ஆட்டிஸம் – பகுதி 7
(ஆட்டிஸம் – பகுதி 6) செய்த விஷயங்களையே திரும்பத் திரும்பச் செய்வதென்பது ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான ஒரு பழக்கமாகும். தங்களுக்கென்று ஒரு சூழலை, கிட்டத்தட்ட ஒரு கூடு போல வகுத்துக் கொண்டு, அதனை விட்டு வெளியில் வராமல் வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களின் வழக்கமாகும். அந்தக் கூட்டை விட்டு வெளியே வந்தால் அவர்கள் மிகவும் அமைதியிழந்து காணப்படுவர். மன அழுத்தம் அதிகரித்து, பதட்டம் மிகுந்து துயரப்படுவர். சிகிச்சை செய்யும் முறைகளும், பள்ளிகளும் அந்தக் குழந்தைகளை வழக்கமான […]
எது பெண்மை ?
ஒரு மாதிரி சமையல் வேலையை முடித்தாள் தேவி. சமையல் அறையின் மேஜையை அழுத்தி மறுமுறை அழுத்தி துடைத்து விட்டு கையை உதறி அதை குப்பையில் எறிந்தாள். “ஹ்ம்ம்” என்ற ஒரு பெருமூச்சு அவளை அறியாமல் வந்தது. இன்னும் அரை மணி நேரம் இருக்கு கிளம்ப, அப்புறம் மீது குட்டியை கூப்பிட்டுக்கிட்டு வரணும். சுவற்றில் இருந்த அந்த குட்டி மீதுவின் புகைப்படத்தைப் பார்த்தபொழுது ஒரு உற்சாகம் பொங்கியது. அந்த குட்டி வாண்டின் சேட்டைகளும்,விளையாட்டும் எப்பொழுதும் மகிழ்வு தான். இன்று […]
செங்கை ஆழியான்
1941 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தில் கந்தையா, அன்னபூரணி தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்து “குணராசா” என்ற பெயர் சூடப்பட்ட இவர் கல்வியிலும் இலக்கியத்திலும் பல்வேறு அரச பணிகளிலும் செய்த பல சாதனைகளைக் கணக்கிடுவது கடினம். பலருக்கு கதாசிரியராக, அரச அதிகாரியாக, நாவலாசிரியராக, இன்னும் பல வடிவங்களில் தெரிந்த குணராசா, எழுதிச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரனாதலால் தனக்குத் தானே “ செங்கை ஆழியான்” எனப் புனை பெயரைச் சூட்டிக்கொண்டு எண்ணிலடங்காத பல இலக்கியங்களைப் படைத்தார். […]
எங்கிருந்தோ வந்த நட்பு
எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிடக் கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு குட்டி நாய் படுத்திருப்பதைப் பார்த்து உர்… என உறுமி இது என் இடம் என்று எதிர்ப்பைக் காண்பித்தது. இதனைக் கண்டவுடன் அந்த இடத்தில் இருந்த நாய் வாலைப் பின் கால்களில் நுழைத்து வளைந்து குழைந்து மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. போகும்போது கூட ஓரக்கண்ணால் இது எங்காவது தன் மீது பாய்ந்து விடுமோ எனப் […]
சாலையோர அனாதையாய் நான்
கண்டதும் காதல் கொண்டேன்!
கள் குடித்த மந்தி போல்!
இல்லான் உனை ஏற்க!
என் இல்லத்தார் எதிர்ப்புரைக்க!
உற்றோறும் பெற்றோறும் உறங்கும்
ஓர் இரவில் இல்லம் நீங்கி!
கவித்துளிகள்
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் …
முதலாய் வெட்கப்பட்ட
பெண் !
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் ….
முதலாய் காதல் வயப்பட்ட
பெண் !
சுதந்திர தேவி
ஆரவார மில்லா அட்சன் ஆற்றில்
ஆர்பாட்டா மில்லா அலைகள் நடுவே
அகிலம் போற்றும் விடுதலைச் சின்னமாய்
அகவை மறுத்து நிற்கிறாள் அந்நங்கை.
ஆணவமிகு ஆதிக்க ஆட்சியாளர் ஒழிந்திட
ஆற்றல்மிகு ஆதவனின்கீழ் அனைவரும் சமமெனும்
ஆவணமதை ஒருகையிலும் அடிமையிருளைப் போக்கிட
ஆழிகாற்றும் அணைக்காவிளக்கை மறுகையிலும் ஏந்தியிருப்பாள்.
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 6
(அமெரிக்கத் தேர்தல் – பகுதி 5) ஒரு வழியாக ஜூன் மாதம் பதினான்காம் தேதியோடு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ப்ரைமரிகள் முடிவடைந்தன. குடியரசுக் கட்சி சார்பில், அனைத்து போட்டியாளர்களும் சில வாரங்களுக்கு முன்னர் விலகிக் கொண்டுவிட டானல்ட் ட்ரம்ப் மட்டுமே எஞ்சியிருந்தார். ஹிலரி கிளிண்டன் கடைசி நேர பலத்த போட்டிக்குப் பின்னர், பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஆதரவோடு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்ற நிலையை எட்டியுள்ளார். தான் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதைத் தன்னந்தனியாக வந்து செய்தியாளர்கள் முன் […]
பிள்ளைகளும் பெற்றார்களும் புத்தகம் வாசித்தல்
சின்னஞ்சிறு சிட்டுக்களாகிய எமது குழந்தைகளின் மூளைகள் துரிதமாக வளரும் உடல் அங்கமாகும். புத்தகம் வாசித்தல் பயிற்சியானது சுகாதீனமான மூளை வளர்ச்சியின் அத்திவாரம். சிறு பிள்ளைகள் மூளையின் வளர்ச்சியில் 90 சதவீதமானது தாயார் தன்னுள்ளே சுமக்கும் தறுவாயிலிருந்து 5 வயது வரை நடைபெறும். மூளையானது மற்றைய உடல் தசைகள் போன்று பயிற்சியால் வலிமையடையும் பாகம். ஆயினும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் அது தனது பிரதான வளர்ச்சியைப் பிள்ளையின் முதல் 60 மாதங்களிலேயே பூர்த்தி செய்து கொள்ளுகிறது. உடலின் வெளிப் […]






