இலக்கியம்
செங்கை ஆழியான்
1941 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தில் கந்தையா, அன்னபூரணி தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்து “குணராசா” என்ற பெயர் சூடப்பட்ட இவர் கல்வியிலும் இலக்கியத்திலும் பல்வேறு அரச பணிகளிலும் செய்த பல சாதனைகளைக் கணக்கிடுவது கடினம். பலருக்கு கதாசிரியராக, அரச அதிகாரியாக, நாவலாசிரியராக, இன்னும் பல வடிவங்களில் தெரிந்த குணராசா, எழுதிச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரனாதலால் தனக்குத் தானே “ செங்கை ஆழியான்” எனப் புனை பெயரைச் சூட்டிக்கொண்டு எண்ணிலடங்காத பல இலக்கியங்களைப் படைத்தார். […]
அப்பா…
மவுண்ட் ரோட் தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனை…. முப்பது மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு, நேரடியாக ஏர்போர்ட்டிலிருந்து ஹாஸ்பிடல் வந்திருந்த கணேஷ் கண்ணீர் விழிகளும், களைப்புத் தேகமுமாய் ஐ.சி.யூ. வாசலில் ட்யூட்டி டாக்டரின் வருகைக்காகக் காத்திருந்தான்… ஐ.சி.யூ.வின் உள்ளே அப்பா உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார், வெண்டிலேட்டரின் தயவில் சுவாசம் நடந்து கொண்டிருக்கிறது….. ஐ.சி.யூ கதவிலிருந்த வட்டமான சிறு கண்ணாடி வழியே உள்ளே பார்க்க, சுயநினைவில்லாமல் மருத்துவ உபகரணங்களுக்கும், குழாய்களுக்கும் நடுவே ஒரு திடப்பொருளாய்ப் […]
பூந்தோட்டம் பராமரித்தல்: களிமண்
மினசோட்டா மாநிலத்தில் பலவகையான மண்வகைகள் காணப்படுகின்றன. ஆறு, ஏரிகள் அதிகமுள்ள மினசோட்டாவில் தாவரவகைகள் எமது வடமேற்கில் இருந்து தென்கிழக்கு வரை வெவ்வேறாக காணப்படுகின்றன. இவை ஒருபுறம் பிரதேச வெட்ப தட்ப நீடிப்புக்களைப் பொறுத்து அமைந்தாலும் வீட்டுத் தோட்டங்களையும், விவசாயங்களையும் பொறுத்தளவில் அவை மண்ணின் தன்மையைக் கொண்டும் அமையும் எனலாம். பண்டைக் காலத்தில் தமிழர் வாழ் ஊர்களில் நீர் நிலைக்கருகாமையில் கிண்டியெடுக்கப்படும் களிமண்ணானது வீடுகட்ட செங்கட்டிகளையும், கூரை வேய ஓடுகளையும், உணவைச் சமைத்துக்கொள்ளவும், நீரைச் சேகரித்துக் கொள்ளவும் உதவியாக […]
கவித்துளிகள்
ஜன்னலின் சத்தங்கள்
கவனமற்று எதிர்நோக்கும்
அன்றைய ஒலியின்
ஆறாத் தனத்தின்
அலம்பலைக் கடக்க
வழி வேண்டா, மனம் வேண்டா
கடவுளின் அடி வயிற்று
வழியெனத் திறந்து கொண்டே
நகர்கிறது,
ஆட்டிஸம் – பகுதி 6
(பகுதி 5) ஆட்டிஸத்தை மட்டுப்படுத்துவதில் முதன்மையான வழிமுறையாகக் கையாளப்படுவது பிரயோக நடத்தைப் பகுப்பாய்வு (Applied Behavioral Analysis) என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த முறை சாதரணத் தேவைகளான பார்த்தல், கவனித்தல், படித்தல், உரையாடுதல், மற்றவர்களைக் கவனித்துப் புரிந்து கொள்ளுதல் போன்ற செயல்களைக் கற்றுக் கொடுக்கும் விதமாக அமைகிறது. இந்த முறை வகுப்பறைக் கல்வியாகவும், தினசரிக் குடும்பச் சூழல்களிலும் பயிற்றுவிக்கப்படலாம். இவை குழந்தைகளுக்கு ஒருவரோடு ஒருவர் பயிற்றுவிக்கும் சூழலிலோ, குழுவாக வகுப்பறை போன்ற அமைப்பிலோ கற்றுத்தர இயலும். சமூகம் […]
பாலை தேசத்தில் கருநிற ஓவியம்!
பாலை தேசத்தில் பகலெல்லாம் காய்ந்து
நிசியில் தோன்றும் வெண்மதி வேளை
கண்டேன்!; கண்டேன்!
காதல் கன்மணியின் கருநிற விழியை
கண்டேன்! கண்டேன்!
உச்சி தனை முகர்ந்தால்
வழக்கம் போல் அந்த அதிகாலை நேரம் விடிந்தது. ஒவ்வொரு நாளும் இதே தான் என்ற ஒரு அலுப்புடன் எழுந்தான் தேனப்பன். வாசலில் செல்வி கோலம் போட்டு கொண்டு இருந்தாள். உள்ளே கோபி ஒருக்களித்து திரும்பி படுத்தான். பழக்கமான உடல் வழக்கமான வேலைகள் செய்தது. ஆனால் மனம் அன்று ஒரு நிலையில் இல்லை. தேதியைக் கிழிக்கும் பொழுது இன்று காலையில் சீனுவை ரயில் நிலையம் சென்று கூட்டி வர வேண்டும். மூன்று நாட்கள் கும்பகோணம், சிதம்பரம், பட்டீஸ்வரம் செல்ல […]
உலகம் செழிக்கும்
நதி!
நம் உறவுகளின் பாலம்,
ஊற்றாய்ப் பிறந்து!
விதம் விதமாய்ப் பெயர் கொண்டு
பெருக்கெடுத்து ஓடும்.
மணிக்கொடிக் காற்று
ந. பிச்சமூர்த்தி…. இவரைத் தாண்டி நீங்கள் புதுக் கவிதைக்குள் போய்விடவே முடியாது…. மணிக் கொடி காலத்தில் புதுமைப் பித்தன், கு. பா. ரா வுக்குப் பின் வரும் இவரின் ஆளுமை…. அசாத்தியமானது…. 1930ல் மணிக் கொடி இதழில் எழுதத் தொடங்கினார்….குடும்பப் பிரச்சினைகளை நிறைய எழுதினார்….குடும்பம் என்பதே கலவைகளின் கூட்டு..அதில் எல்லாரும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம்.. ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாகவும் இருக்கலாம்.. ஆனாலும் மனங்கள் வேறு படும் தருணங்கள் வந்தே தீரும்.. கருத்துக்கள், அவரவரின் பார்வையில் காட்சியின் பொருள் […]
ஹைக்கூக் கவிதைகள்
பவள மல்லியாய்ச்
சிதறிக் கிடக்கின்றன
வானில் விண்மீன்கள்
இரவில் தூங்கி
பகலில் விழித்தது
அல்லி






