\n"; } ?>
Top Ad
banner ad

கதை

சுய மரியாதை

Filed in இலக்கியம், கதை by on October 25, 2015 6 Comments
சுய மரியாதை

மதியம் மூன்று மணியாகிக் கொண்டிருந்தது. காலையில் இருந்து ஏதோ பர பர வென்று இருந்தது உதயாவிற்கு. பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரம் ஆகி விட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் அவர்களைச் சென்று அழைத்து வர வேண்டும். அவளது கணவன் பரத் அன்று சீக்கிரம் வருவதாகச் சொல்லி இருந்தான். வீட்டின் வேலைகாரம்மா அன்பு அன்று நேரம் கழித்து வந்து அப்பொழுதுதான் வீட்டை சுத்தம் செய்து துடைத்துக் கொண்டு  இருந்தாள். தன்னுடைய அலமாரியில் புடவைகளை அடுக்கி […]

Continue Reading »

கொலைபேசி

Filed in இலக்கியம், கதை by on October 25, 2015 0 Comments
கொலைபேசி

உடல் எடையைக் குறைக்கும் குறிப்புகள் ; பல்லை வெண்மையாக்க வழிவகைகள்; விக்டோரியா சீக்ரெட்டின் ‘புஷ் அப்’ ரகசியங்கள்; விரல் நகங்களில் விரிசல் வராமல் எப்படிப் பார்த்துக் கொள்வது; தலைமுடியைச் சுருட்டையாக்குவது எப்படி; சில கசமுசா படங்கள்; பலான வீடியோக்கள் ; டாம்பான், ரெஸ்டாரண்ட் கூப்பன்கள் இத்யாதி இத்யாதி விஷயங்கள் தான் கிடைத்தன… ஏகப்பட்ட வாட்ஸ்அப், டெக்ஸ்ட் மெசேஜ் எனப் பல பேருடன் தகவல் பரிமாறல்கள் .. அலுப்பாக இருந்தது வம்சிக்கு.. நான்கு மணி நேரமாகத் தேடி, கடந்த […]

Continue Reading »

தனித் தீவு

Filed in இலக்கியம், கதை by on September 28, 2015 2 Comments
தனித் தீவு

அதி காலை மணி 5. யாரோ தலையில் தட்டியது போல எழுந்தாள் வாணி. சிறிது நேரம் தூக்கம் கலையும் வரை அப்படியே படுத்திருந்தாள். அருகில் படுத்திருந்த குரு புரண்டு படுத்தான். இவள் முழித்து இருந்ததைப்பார்த்து, பக்கத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். “மணி 5 தானே ஆகுது, ஞாயித்திக்கிழமை தானே? தூங்கு”. “தூக்கம் வரல. வழக்கமா எழுந்துக்கிற நேரம் அதான். நான் கீழே போறேன்.” ஏனோ வாணிக்கு இந்தச் சனி ஞாயிறு சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் பிடித்தமான ஒரு […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 12

Filed in இலக்கியம், கதை by on September 28, 2015 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 12

முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் […]

Continue Reading »

வேலை

Filed in இலக்கியம், கதை by on August 31, 2015 0 Comments
வேலை

கொரியர் பையன் கொடுத்துவிட்டு போன கவர் சாவித்ரியின் அருகில் கிடந்தது. சாவித்திரி அதை கவனித்ததாக தெரியவில்லை . பார்வை எங்கோ நிலைத்திருக்க சிந்தனை  அப்பாவை சுற்றி வந்ததது. அப்பா எப்படி இருந்தார் இந்த வீட்டில் எல்லாமும் அவரே என்ற நிலை… ஆறு மாதத்துக்கு முன் அந்த விபத்து அவரை அள்ளிக்கொண்டு  போனதும் குடும்பம் தத்தளித்து விட்டது .இன்றோடு ஆறு மாதம் முடிந்து விட்டது . அப்பாவின் மறைவு  ஏற்படுத்திய தாக்கம் அவளிடம் இருந்து இன்னும் மாற வில்லை… […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11

Filed in இலக்கியம், கதை by on August 31, 2015 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11

(பகுதி 10) முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, […]

Continue Reading »

மாலையில் யாரோ மனதோடு பேச

Filed in இலக்கியம், கதை by on August 31, 2015 0 Comments
மாலையில் யாரோ மனதோடு பேச

”மாலையில் யாரோ மனதோடு பேச” என்று பாடிக்கொண்டிருந்த யாழினியின் பாடலுக்குக் கடலலைகள் இசை மீட்டின. தனது காதலனின் வருகைக்குக் காத்திருக்கும் யாழினியைத் தென்றல் தழுவிக் கொண்டிருந்தது. அமுதனின் வருகையைக் கண்டதும் யாழினியின் விழிகள் சூரிய ஒளியாகப் பிரகாசித்தது. தனது வருகையின் ஆனந்தத்தால் யாழினியின் மனதில் பூக்கள் பூத்துக் குலுங்குவதை அவளது விரிந்த உதடுகளின் வழியாக   கண்ட அமுதன் மயங்கி அவளைக் கட்டியணைத்தான்.   கடலலையின் ஓசையோடு தங்கள் காதல் காவியங்களைப் பேசத் தொடங்கினர் இந்த இளஞ்சிட்டுக்கள். நான்காம் […]

Continue Reading »

வானவில்லின் மறுபக்கம்

Filed in இலக்கியம், கதை by on August 31, 2015 0 Comments
வானவில்லின் மறுபக்கம்

“நீ இன்னும் மேல மேல பறந்துகிட்டே இருக்கணும்மா.. எழுந்திரு ..” அமெரிக்காவில் மேற்படிப்புப் படிக்க வாய்ப்புக் கிடைத்த விஷயம் அறிந்தவுடன் அவளது அக்கா சாந்தி அவளை ஆசிர்வதித்துச் சொன்னது ராஜியின் மனதில் ஓடியது. எவ்வளவு பெருமைப்பட்டார்? ‘எங்க வம்சத்தில யாருமே வெளிநாட்டுக்குப் படிக்கப் போனதில்லை .. இவ அமெரிக்கால நாலு காலேஜுக்கு அப்ளை பண்ணா .. நாலு காலேஜ்லேயிருந்தும் சேரச் சொல்லி   லெட்டர் அனுப்பியிருக்காங்க .. எங்க சேர்றதுன்னு அவ தான் டிசைட் பண்ணணும்..’ கிட்டத்தட்ட திருவான்மியூர் […]

Continue Reading »

சொர்க்கத்திலொரு திருத்தம்

Filed in இலக்கியம், கதை by on July 28, 2015 0 Comments
சொர்க்கத்திலொரு திருத்தம்

லிஸி குளித்து முடித்ததும் பசிப்பது போலிருந்தது. உடலில் டவலைச் சுற்றிக் கொண்டு கீழே இறங்கி வந்து கோப்பையில் காப்பி நிரப்பிக் கொண்டு ஜன்னலுருகே இருந்த சோபாவில் அமர்ந்தாள். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மரத்திலிருந்த இலைகளும் மழையில் குளித்து அவளைப் போலவே புத்துணர்வுடன் பளிச்சென்று இருந்தன. கீழே விழுந்திருந்த ஒரு சில உதிர்ந்த இலைகள் மழையில் நனையாமல் இருக்க இங்குமங்கும் ஓடுவது போல் காற்றடிக்கும் திசையில் உருண்டோடின. தொலைபேசி ஒலித்தது. ஆஷிஷ். “ஹை பேபி .. தூக்கத்தைக் […]

Continue Reading »

தோழன்

Filed in இலக்கியம், கதை by on July 28, 2015 0 Comments
தோழன்

பரந்து வளர்ந்த அரச மரம். ஒரு குறுநில மன்னனின் முழுச்சேனையும் அதனடியில் அமர்ந்தாலும் அனைவருக்கும் நிழல் தருமளவு விஸ்தாரமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருந்த அற்புத மரம். அதனடியில் கருங்கற்களைக் கொண்டு ஒரு மேடைபோல் அமைக்கப்பட்டு அதன் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்லாலான விநாயகர் சிலை. விநாயகர் சிலைக்கு அடியில் செதுக்கப்பட்ட சிறிய மூஞ்சூரு மற்றும் மோதகச் சிலைகள் அத்தனையும் தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டிருந்தன. சிலையைச் சுற்றிக் கம்பியினாலான கூடு ஒன்று அமைக்கப்பட்டு, அதைப் பூட்டி வைத்து யாரும் விநாயகரைத் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad