நிகழ்வுகள்
சூப்பர் போல்

நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்ட்டி கொடுப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே திட்டமிடும் திருநாளைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரவு உணவுக்கு பீட்சா வேண்டுமென்றால் ஐந்து தினங்களுக்கு முன்னரே ஆணையிட வேண்டுமென்று அறிவீர்களா? இந்திய உணவகத்திற்கு கொறிக்கும் பதார்த்தங்களை ஆர்டர் செய்வதற்காக அரை மணி நேரம் தொலை பேசியில் காத்திருந்த அனுபவமுள்ளதா? மது பானக்கடையில் வாங்கியவையனைத்திற்கும் பணம் செலுத்துகையில், “சொந்த உபயோகத்திற்காக மட்டுமே வாங்குகிறேன், சில்லறை வியாபாரத்திற்காக அல்ல” என்று கையொப்பமிட வேண்டிய கட்டாயமிருந்ததுண்டா? நாள் முழுக்க இயற்கையன்னை தூய்மையான […]
ஆஸ்கரில் தமிழ்ப்பாடல்

’லைஃப் ஆஃப் பை’ (Life of Pi) என்ற ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படத்தில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதியும் பாடியும் இருக்கின்ற “கண்ணே கண்மணியே” என்ற தமிழ்த் தாலாட்டுப் பாடல் சிறந்த திரைப்படப் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவே. இந்த வாய்ப்புக்காக இறைவனுக்கும், பெற்றோருக்கும், ஆசான்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜெயஸ்ரீ, திரைப்பாடல்கள் இயற்றிய அனுபவம் இல்லையென்றாலும், தாலாட்டுப் பாட்டுக்கு, அனுபவமோ, இசையறிவோ தேவையில்லை எனக் […]