\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நிகழ்வுகள்

ஹோலி 2023

ஹோலி 2023

வட அமெரிக்காவில்  உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள மிலன் மந்திரில் மார்ச் மாதம் 12ஆம் தேதி அன்று அன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் […]

Continue Reading »

தமிழ்த் திருவிழா 2023

தமிழ்த் திருவிழா 2023

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி ஆண்டுதோறும் நடத்தும் ’தமிழ்த் திருவிழா’ கடந்த இரு வருடங்களாக நோய்தொற்றுக்காலத்தில் நடைபெறாமல் இருந்தது. இவ்வாண்டு, தமிழ்ப்பள்ளி நேரடி வகுப்புகளாக நடைபெற தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் திருவிழா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் தமிழர் உணவுகள், இடங்கள், விளையாட்டுகள், தொழில்கள், எழுத்தாளர்கள் என வெவ்வேறு தலைப்புகளில் கண்கவர் காட்சிப்பொருட்களைச் செய்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தனர். […]

Continue Reading »

துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge – Woodbury) 2023

துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge – Woodbury) 2023

வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் குளிர்காலம் கடந்த டிசம்பர் முதல் கடுமையாக இருந்தபோதிலும் துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge) என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 28-ஆம் தேதி முதல் ஆரம்பித்து மே 10ஆம் தேதி வரை, ஒவ்வொரு ஊரிலுமுள்ள ஏரிகளில்  நடைபெறுகிறது.  போட்டி நடைபெறும் ஏரியின் விபரத்தை இந்த முகநூல் https://www.plungemn.org/ பக்கத்தில் காணலாம். இந்தப் போட்டிகளில் முக்கிய அம்சம் நிதி திரட்டுவது. விசேஷ ஒலிம்பிக் போட்டியாளர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு […]

Continue Reading »

சங்கமம் 2023

சங்கமம் 2023

பொங்கல் திருநாளையொட்டி மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் சங்கமம் கலை விழா, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று Osseo Senior High School அரங்கத்தில் நடைபெற்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை பலர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், மதியம் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடந்தன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, மினசோட்டா மாநில மேலவை உறுப்பினர் திரு. ஜான் ஹாப்மேன் (John Hoffman) அவர்கள் […]

Continue Reading »

ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2022 (IAM Thanksgiving 2022)

ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2022 (IAM Thanksgiving 2022)

வட அமெரிக்காவின், மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (Indian Association of Minnesota) அமைப்பின் சார்பில் 2022 ஆம் ஆண்டு ஆண்டில் உதவி அனைத்து தன்னார்வலர்கள், வர்த்தக ரீதியாக உதவியவர்கள் மற்றும்  தன்னார்வ  நிறுவனங்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக நன்றி நவில்தல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழா  மேப்பில் குரோவில்  அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் சென்ற மாதம் நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சமாக அனைவருக்கும்  இரவு உணவு வழங்கப்பட்டது. பின்பு புதிதாக பதவியேற்றுள்ள […]

Continue Reading »

2022 கைப்பந்து விளையாட்டு

2022 கைப்பந்து விளையாட்டு

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ப்ளூமிங்டன் நகரில் அமைந்துள்ள கென்னடி ஆக்டிவிட்டீஸ் சென்டர் என்ற பள்ளி மைதானத்தில் டிசம்பர் 10ஆம் தேதி இந்த கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர், மகளிர் அணி இரு குழுவாக பிரித்து ஆடவர்க்கும், மகளிர்க்கும்  தனித்தனி  பிரிவுகளில், போட்டிச் சுற்றுகள் நடைபெற்றன. தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட பக்கத்திற்கு சென்று பார்க்கவும் https://www.facebook.com/mdvtvolleyball அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக!!!   […]

Continue Reading »

மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2022

மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2022

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மினசோட்டா மலையாளி  அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை அவர்கள் அமைப்பின் சார்பில்  மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் இதே போல் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று மினசோட்டாவில் அமைந்துள்ள ஹாப்கின்ஸ் சமுதாயக்  கூடத்தில் (Hopkins Community Center) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள  கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர் சிறப்பு விருந்தினராக ஜேம்ஸ் சீட்டேத் (James Chitteth) (Pastor St. […]

Continue Reading »

பிங்க் கார்பா (Pink Garba)-  மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பிங்க் கார்பா (Pink Garba)-  மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஐக்கிய அமெரிக்காவின், மினசோட்டா  மாநிலத்திலுள்ள மினசோட்டா இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (IAM) அமைப்பின் மூலம் ‘பிங்க் கார்பா – மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு’ நிகழ்ச்சி, கடந்த மாதம் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. மக்களுக்கு மார்பகப்  புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது தொடர்பான மருத்துவம் குறித்த தெளிவான தகவலை கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய மற்றும் அமெரிக்க உணவின் விருந்தோம்பலுடன் தொடங்கிய விழாவில், பின்னர் புற்று நோயின் வல்லுனர்கள், […]

Continue Reading »

மினசோட்டா வரலாற்றுச் சங்கக் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு இந்தியரின் பெயர்

மினசோட்டா வரலாற்றுச் சங்கக் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு இந்தியரின் பெயர்

வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் செயிண்ட்பால் நகரில் புகழ்பெற்ற ‘மினசோட்டா வரலாற்றுச் சங்கத்தின்’ கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் மினசோட்டா மாநில வரலாறு குறித்த அனைத்து தகவலும் சேகரிக்கப்பட்டு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.  மேலும் விவரங்களை https://www.mnhs.org/ இணையதளத்தில் காணலாம். டாக்டர் எஸ். கே. டேஷ் (Dr.S.K Dash, Sita Kantha Dash – Scientist & Founder of Probiotics), அவர்கள் மினசோட்டா மட்டுமல்லாது, அமெரிக்காவில் உள்ள அனேகத் தன்னார்வத் தொண்டு  நிறுவனங்களுக்கும்,   இந்தியாவில் செயல்படும் […]

Continue Reading »

IAMன் GOLF 2022

IAMன் GOLF 2022

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கால்ஃப் (GOLF) விளையாட்டுப் போட்டியைச்  சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் அதேபோல், அக்டோபர் ஒன்றாம் தேதி ஹேமல் (Hamel) நகரில் உள்ள ‘பேக்கர் நேஷனல் கால்ஃப் கோர்ஸ்’ இல் (Baker National Golf Course) போட்டி நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென இரு பிரிவுகளில் இந்த விளையாட்டு இடம்பெற்றது.  பலர் இந்தப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad