நிகழ்வுகள்
IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022

வட அமெரிக்காவில் உள்ள மின்சோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் மற்றும் உள்ளூரில் உள்ள அமைந்துள்ள மற்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதியை அகிம்சை வாரத்தின் கடைசி நாளாகக் கொண்டாடியது. இந்த விழா மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள செயின்ட் பால் நகரில் அமைந்துள்ள மினசோட்டா வரலாற்று மையத்தில் (Minnesota History Center) நடைபெற்றது. அக்டோபர் இரண்டாம் தேதி என்றால் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தி அவர்களது […]
அமெரிக்க கொலு 2022

இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் இன்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொரோனா என்ற காலகட்டத்தைத் தாண்டி இப்பொழுது வழக்கமான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கையில், நவராத்திரி கொலு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் மினசோட்டாவிலும் மற்ற வட அமெரிக்க மாநிலங்களிலும் உள்ள குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடினர். தங்கள் வீட்டு கொலு பொம்மைகளின் […]
உட்பெரி டேஸ் 2022 (Woodbury Days)

வட அமெரிக்காவில் கோடை காலம் வந்து விட்டால் போதும் மக்கள் தங்களுக்கும் சிறப்பான கொண்டாட்டங்கள், விழாக்கள் என பலவிதமான விழாக்களை சிறப்பாக கொண்டாடுவார்கள். வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள உட்பரி நகரில் ஆண்டு தோறும் உட்பெரி டேஸ் என்ற பெயரில் பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு மத்தியில், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், […]
மினியாபொலிஸில் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியை நேரில் பார்க்க வேண்டும் என்பது ஒரு பெரும் ஆசையாக ஒரு காலத்தில் இருந்தது. 2015 ஆம் ஆண்டு, சிகாகோ சென்று அந்த ஆசையைப் பூர்த்திச் செய்தாகிவிட்டது. 2020 ஆம் ஆண்டுத் திட்டமிடப்பட்டிருந்த ஏ.ஆர். ரஹ்மானின் அமெரிக்கா இசை பயணத்தில் மினியாபொலிஸ் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சியை அளித்தது. கச்சேரிக்கு என்று வேறு ஊருக்குப் பயணம் செல்ல வேண்டாம் என்பது இதிலுள்ள உபரி மகிழ்ச்சி செய்தி. கொரோனா காரணமாக அப்பயணம் ரத்துச் செய்யப்பட்டது. இப்போது கொரோனா நிலைமை […]
சாலைகளைத் தத்தெடுப்போம்

மினசோட்டாவின் சாலைகளில் பயணிக்கும் போது கவனித்திருப்பீர்கள்!! இந்தச் சாலையைத் தத்தெடுத்திருப்பது என்று ஒரு நபரின் பெயரோ, நிறுவனத்தின் பெயரோ அல்லது அமைப்பின் பெயரோ குறிப்பிடப்பட்டிருக்கும். சாலையைத் தத்து எடுப்பது என்றால் என்ன? பொதுவாக, சாலைகளை அமைப்பது, பழுது பார்ப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை அரசு எடுத்து செய்யும். இதில் சுத்தம் செய்து பராமரிக்கும் வேலையில் பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வாய்ப்பு அளிப்பதே, இந்தத் திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின்படி மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளி […]
மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2022

இந்தியாவின் 75வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் சங்கங்களும் […]
உட்பெரி கிரிக்கெட் கோப்பை 2022

இந்தியர்களுக்கு கிரிக்கெட் என்றாலே பிடித்த விளையாட்டு என்றே கூறலாம். இந்தியாவில் அனைத்து கிராமம் முதல் நகரம் வரை, சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த விளையாட்டு சிறப்பாக விளையாடப்படுகிறது. இதேபோல் இப்பொழுது அமெரிக்காவிலும் இந்த விளையாட்டு மிகவும் பிரபலம் பெற்று வருகிறது. ஒவ்வொரு நகரிலும் அதற்கென்றே தனிப்பட்ட பயிற்சிப் பள்ளிகளும் மற்றும் நகரின் ஒத்துழைப்பும் கூடி பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நகரங்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு, தனிப்பட்ட மைதானம் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வடஅமெரிக்காவில் […]
சிறுவர்களுக்கான ஓட்டம் மற்றும் சகதி விளையாட்டு விழா 2022

கோடை விடுமுறை என்றாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சந்தோஷம் பொங்கும். எங்கெல்லாம் விழாக்கள், கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன, எங்கு செல்வது என்று பலவிதமான திட்டமிடல்களுக்குப் பின் மகிழ்ச்சியாக அவற்றை செயல்படுத்துவார்கள். சிறுவர்களுக்கான இந்த புதுமையான விளையாட்டு போட்டியில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஓடிச் சென்று பின்பு அங்கிருக்கும் சிறு சகதிக் குட்டையில் எந்தளவுக்கு மூழ்க முடியுமோ மூழ்கி எழுந்து வருவது தான் இலக்கு. இந்த நூதனமான விளையாட்டுப் போட்டி மினசோட்டா மாநிலத்திலுள்ள காட்டேஜ் குரோவ் என்ற […]
தாய்லாந்து நாட்டின் புது வருட தினம் 2022 (SONGKRAN)

ஐக்கிய அமெரிக்காவில் பல்வேறு நாடுகளின் மக்கள் குடியேறி உள்ளனர். பல தரப்பு மக்கள் தங்களது கலாச்சாரம் சார்ந்த சிறப்புப் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் அனைத்தையும் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இன்றைய தினம் நாம் பார்க்க இருப்பது தாய்லாந்து மக்களின் புது வருட விழாக் கொண்டாட்டம். மினசோட்டா மாநிலத்தில் செயின்ட் பால் மாநகரில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாய் மக்களின் கலாச்சாரம் சார்ந்த உணவு வகைகள், பாரம்பரிய நடனங்கள் , இசை என அனைத்தும் மைதானத்தை அலங்கரித்தது. தாய்லாந்துக்கு […]
போர் வீரர்களின் நினைவு நாள் கொண்டாட்டம் 2022

அமெரிக்காவில் மே மாதம் கடைசி திங்களன்று ஒவ்வொரு வருடமும் போர் வீரர்களின் நினைவாக அவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாக (Memorial Day) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தந்த நகரில் இதை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து நகரங்களிலும் போர் வீரர்களின் நினைவு இடங்களை அலங்கரித்து அன்றைய தினம் குடும்பத்தினர் சென்று அவர்களுடைய சமாதியில் மலர் வைத்து நினைவுகூர்ந்து அவர்களுடைய வீரதீரச் செயல்களைப் பிறருக்குத் தெரிவிப்பார்கள். மினசோட்டா மாநிலத்தில் உள்ள உட்பரி […]