நிகழ்வுகள்
அமெரிக்காவில் ஆடி மாதத்தில் அம்மனுக்குத் திருவிளக்குப்பூஜை

தமிழ்நாட்டில் பொதுவாகக் கோவில்களில்தான் விளக்குப்பூஜை செய்வார்கள். 2002-ஆம் ஆண்டில், இங்கு அமெரிக்காவில், செயிண்ட்லூயிஸில், ஒரே அடுக்கு மாடி இல்லங்களில் (apartment homes) இருந்த தோழிகள் நாங்கள் சேர்ந்து வீட்டில் விளக்குப்பூஜை செய்யலாம் என்று பேசினோம். அதன்படி, விநாயகர் துதியில் ஆரம்பித்து, ஹனுமான் சாலீசா, கந்தசஷ்டி கவசம், அஷ்டலஷ்மி ஸ்லோகம், மஹிஸாசுர மர்த்தினி (தமிழில் ‘உலகினைப் படைத்து’ என ஆரம்பிக்கும்), அதன் பிறகு 108 அம்மன் போற்றி, பிறகு மங்களம் என ஸ்லோகம் பட்டியல் தயார் செய்தோம். ஆரம்பத்தில் […]
எங்கே போகலாம்? மினசோட்டாவில் கோடை கால நிகழ்வுகள் 2020

மினசோட்டா மக்கள் விரும்பும் குதூகலக் காலம் கோடைகாலம். இம் முறை நாம் சர்வ தேச பரவல் COVID-19 தொற்று நோய் காரணமாக சுகாதாரப் பாதுகாப்புக்களை, சமூக இடைவெளிகளைப் பேணிக் கொண்டு தான் அனுபவிக்க வேண்டும். இதோ நீங்கள் இன்புற்றுற கீழே சில இலுகுவான இடங்கள். என்ன? எங்கே? எப்போது? Burnsville Farmers Market இரண்டு இடங்களில் வெவ்வேறு நாட்கள், நேரங்களில் 333 Cliff Road 200 Burnsville Parkway வியாழன் 11:30 – 4:30 சனி 8 […]
பேரிடர் காலத்தில் தமிழால் இணையும் அட்லாண்டாத் தமிழர்கள்

படுப்பினும் படாது, தீயர் பன்னாளும் முன்னேற்றத்தைத் தடுப்பினும், தமிழர் தங்கள் தலைமுறை தலைமுறைவந்து அடுக்கின்ற தமிழே! பின்னர் அகத்தியர் காப்பியர்கள் கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கிளைதொத்தும் கிளியே வாழி! -பாரதிதாசன் மேற்கூறிய பாரதிதாசனாரின் பாடலுக்கிணங்க அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம் இனி வரும் தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கும் வகையில் பாடுபடுகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது! ஆமாம்,தமிழே! அமுதே! என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒருவர் படித்த புத்தகத்தின் […]
தேர்த் திருவிழா

தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் நகரில் திருக்காளகத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான திருத்தலமாகும். இங்கு,மார்ச் எட்டாம் தேதி அன்று மாசிமகத் தேரோட்டம் நடைபெற்றது. பத்து தினங்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவை ஃபிப்ரவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் பல்வேறு சமுதாயம் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் கடவுளர்களும்,அம்மனும் வீதி உலா வர,திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த […]
உழைப்பாளர் தின உரையாடல் – திரு. மதுசூதனன்

உலகமெங்கும் உழைப்பாளர் தினம் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்படுவது ஏன்? உலகமெங்கும் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டாலும், இதற்கு காரணமாக இருக்கும் அமெரிக்காவில் ஏன் மே 1 அன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது இல்லை? அமெரிக்காவில் மே தினத்திற்கு வேறு அர்த்தம். என்ன அது? வாருங்கள்.. கேட்போம்.. அறிவோம்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
தன்னார்வலர்களின் முகக் கவசத் தயாரிப்பு

இன்றைய தினம் உலகையே ஸ்தம்பிக்கச் செய்து மனிதர்களைப் பயமுறுத்தி, வீட்டில் அடைப்பட்டிருக்கச் செய்த, கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. அவசியக் காரணங்களுக்காகக் கூட வெளியில் செல்வதற்கு மிகவும் பயந்து போய் உள்ளனர். இந்த நோய் எப்படி பரவுகிறது என்று தெரியாத சூழ்நிலையில் மக்கள் வெளியே செல்வதற்கு முகக் கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகக் கவசத் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும் அனைத்து தொழிலாளிகளும் பணிக்கு வர முடியாத நிலையில், பல நிறுவனங்களில் […]
ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்

ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான் உரையாடியவர் – சரவணகுமரன்.
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழி சார்ந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள், பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஈடன் ப்ரெய்ரியில் இருக்கும் PiM Arts High School இல் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளியில் தமிழ் பயிலும் மாணவர்கள் வெவ்வெறு தலைப்பில் காட்சிப்பொருட்கள் செய்து, அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர். கீழடி, கல்லணை, தமிழ் மன்னர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் கவிஞர்கள், தமிழ்நாட்டு மாவட்டங்கள், ஊர்கள், ஆறுகள், விளையாட்டுகள், கலைகளின் சிறப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். பின்னர், […]
சமூக அக்கறைக்குப் புத்தக வாசிப்பே அடித்தளமிடும்

வந்தவாசி, அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘குக்கூவென…’ ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “அன்றாடம் செய்தித்தாளையும் புத்தகங்களையும் படிப்பதே ஒரு மனிதனின் சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்” என்று குறிப்பிட்டார். வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டமும் வந்தவாசி ரோட்டரி சங்கமும் இணைந்து நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ‘குக்கூவென…’ எனும் […]
அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாள்

அட்லாண்டா உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பு சார்பில், திருவள்ளுவர் தினமான தை இரண்டாம் நாள், உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாளாகச் சிறப்புடனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. சனவரி 19, 2020, ஞாயிறன்று அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பின் தொடக்க நிகழ்வும் உலகத்தமிழ்க் கவிஞர்கள் நாளும் ஒருசேர நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ராஜி ராமச்சந்திரனின் வரவேற்புரைக்குப் பிறகு உறுப்பினர் பிரதீபா பிரேம் வரவேற்புக் கவிதை வாசிக்க, நிகழ்வு களைகட்டியது. மூத்த தமிழ் அறிஞரும், கவிஞருமான ந. குமரேசன் தமது சிறப்புரையில் […]