நிகழ்வுகள்
சூப்பர் போல் எப்படி இருந்தது?

கடந்த ஞாயிறன்று (பிப்ரவரி 7ஆம் தேதி) நடைபெற்ற சூப்பர் போல் கால்பந்து விளையாட்டு இறுதிப்போட்டியைப் பற்றி மதுசூதனன் அவர்களும், சரவணகுமரன் அவர்களும் பேசிய அரட்டை.
சூப்பர் போல் (Super Bowl) அரட்டை

அமெரிக்காவில் நடந்து வரும் NFL விளையாட்டு தொடரின் இறுதி போட்டியான சூப்பர் போல் (Super Bowl) குறித்து மதுசூதனன் அவர்களும், சரவணகுமரன் அவர்களும் நடத்திய அரட்டை.
வர்ணத்தில் கிறிஸ்துமஸ்

இருண்ட பனிக்கால விடியலின் சூரியோதயம். சோகமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அரை விழித்த பறவைகளின் ஆரவாரம், இன்னும் இரை தேடியபடி. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் கூட வீட்டில் இருந்த படியே நடைபெறுவதால், கடந்த பத்து மாதங்களாகப் பிள்ளைகளுக்கு வீடு கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல மாறியிருந்தது. வீட்டுச் சிறையில் இருந்து அவர்களுக்கு ஒரு சிறிய விடுதலை கிடைப்பதையிட்டுப் பிள்ளைகள் இருவரும் காலையிலிருந்தே பெரும் ஆரவாரமாக இருந்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் பணம் […]
செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

வட அமெரிக்காவில், மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேபிள் குரோவ்லில் வசிக்கும் பாஸ்கர் மற்றும் பானு கோபாலனின் மகள் செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் 15ம் தேதி மினசோட்டாவில் மேபிள் குரோவ் நகரிலுள்ள ஹிந்து கோவிலில் நடைபெற்றது.அவரின் நடன ஆசிரியை திருமதி. சுஜாதா ஆகுறட்டி (Guru Smt.Sujatha Akurati) அவர்களிடம் கடந்த 12 வருடமாக நடனம் கற்று, இப்பொழுது அரங்கேற்றம் நடைபெற்றது. விழா நிகழ்ச்சியை பாஸ்கர், பானு கோபாலனின் குடும்பத்தினரும் மற்றும் அவரது நண்பர்களும் இணைந்து ஏற்பாடு […]
அயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர்

ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம், அமெரிக்கா, அமெரிக்கத் தமிழ் வானொலி, ஒருதுளிக்கவிதை, புதுச்சேரி, உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் இணைந்து, மகாகவி ஈரோடு தமிழன்பன் 87ஆம் பிறந்த நாள் விழா இணையவழியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, எப்பொழுதும் மகாகவிக்காகத் தங்களுடைய பங்களிப்பைத் […]
பொம்மைத் தொலைக்காட்சி

நவராத்திரிப் பண்டிகை வந்துவிட்டால் எங்கள் ஊர் மினியாபொலிஸ் மாநகரம் வண்ணம் பூசினாற்போல இருக்கும். இது தமிழ்ப் பெண்டிர் கொண்டாடும் பண்டிகை என்பதால், தமிழ்ப் பெண்கள் கலர் கலராகத் தமிழ் பாரம்பரியப் புடவை அணிந்து உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் வைத்திருக்கும் கொலுவைப் பார்த்துவிட்டு, அங்கு ஓரிரு தேவி பாடல்களைப் பாடிக் கொண்டாடுவார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் அவர்கள் இதற்காக செய்த சுண்டல் போன்ற தின்பண்டங்களும் வழங்கப்படும். அந்த நேரங்களில்,இவர்களின் கணவன்மார்கள் படும்பாட்டைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த […]
ரத ஆலயம் (Gundicha Mandir)

வட அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் மேப்பிள் குரோவில் உள்ள இந்துக் கோவிலில் தேர் நிறுத்துவதற்கு என்று தனியிடம் அமைத்து அதற்குண்டான கோபுர வழிபாடுகள் சென்ற மாதம் ஆகஸ்ட் 22ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று விழாவாக நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த பின்பு சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கோவில் நிர்வாகம் ஒருங்கிணைத்த இந்த விழாவில், டாக்டர் டேஷ், தலைமையில் கலசத்திற்குச் சிறப்பு பூஜை நடைபெற்றது. வழிபாடுகள் முடிவடைந்து டாக்டர் டேஷ் அவர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. கோபுரக் […]
மினசோட்டாவில் 74வது இந்திய சுதந்திர தின விழா

இந்தியாவின் 74வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடத்தினர். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்த வருடம் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. கொடியேற்றம் மட்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்றது அமெரிக்க, இந்தியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு இருநாட்டு தேசிய கீதங்களும் பாடப்பட்டன. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக […]
இந்தியச் சுதந்திரம் – சில வாதங்களும் விளக்கங்களும்

பனிப்பூக்கள் வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் இந்தியச் சுதந்திர நாள் வாழ்த்துக்கள். இன்றைய தினத்தில் இந்தியச் சுதந்திரம் குறித்து பொதுத்தளத்தில் வைக்கப்படும் சில வாதங்கள் குறித்து இந்த வலையொலி பகுதியில் திரு. மதுசூதனன் அவர்கள் தனது பார்வையை முன்வைத்துள்ளார். வாசகர்கள் தங்களது கருத்தினை பின்னூட்டப் பகுதியில் வெளிப்படுத்தலாம். தொகுப்பு – சரவணகுமரன்.
கனடாவில் சுருதி பாலமுரளி இசை

Sruthi Balamurali will be doing an online live performance on Sunday, August 16th from 11am to 12.30pm EST in support of the establishment of a Chair in Tamil Studies at the University of Toronto. This is a very historical and noble initiative for Tamils around the world and requires everyone’s involvement and support. It would […]