திரைப்படம்
சாமி ஸ்கொயர்
தமிழின் தலை சிறந்த இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் போன்றோர் கூட ஆங்கிலப் படங்கள் பார்த்து இன்ஸ்பையர் ஆவதுண்டு. உள்ளூர் சரக்கோடு மட்டுமே படம் எடுத்து கமர்ஷியல் ஹிட் கொடுத்துக் கொண்டிருப்பவர் இயக்குனர் ஹரி. அவ்வப்போது, கூடவே கொஞ்சம் தலைவலியும் கொடுப்பார். 2003 இல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன சாமி படத்தின் இரண்டாம் பாகத்துடன் இப்போது களம் இறங்கியிருக்கிறார். சிங்கத்தின் மூன்று பாகங்களை இயக்கியவருக்கு சாமியின் அடுத்த பாகத்தை எடுக்க ஆசை வராதா? நமக்கும் தான். விக்ரமின் […]
கமலின் விஸ்வரூபம்
பலமுறை பலராலும் பலவிதமாகப் பாராட்டப்பட்டது கமலஹாசனின் கடின உழைப்பு, விடா முயற்சி, படைக்கும் கலையின்மீது அவர் கொண்டுள்ள மாறாக் காதல், எல்லாவற்றையும் செய்யத் துடிக்கும் அவரின் ஆர்வம் – சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படமும் அவரின் இக்குணாதிசயங்களைக் காட்டுவதில் விதி விலக்கல்ல. விஸ்வரூபம் முதல் பகுதி வெளிவந்த தினத்திலேயே கமல் சொன்னதாக வெளிவந்த செய்தி, பகுதி இரண்டுக்குத் தேவையான அளவுக்கு பல காட்சிகளும் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது என்பதாக நினைவு. 2014ஆம் ஆண்டிலேயே வெளிவரும் என்றும் […]
தமிழ்ப் படம் 2.0
இன்னமும் தமிழ் சினிமா சார்ந்த மேடைகளில் பிற நடிகர்களையோ, படங்களையோ பற்றி விமர்சனம் செய்து கருத்துக் கூறுவது அரிது. எதற்கு மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவது, கண்ணாடி வீட்டில் கல்லெறிவது என்று காரணம் கூறுவார்கள். நிலைமை அப்படி இருக்கும் போது, பிற படங்களைக் கிண்டல் செய்து எடுக்கப்படும் ஸ்பூஃப் வகைத் திரைப்படங்கள் தமிழில் சாத்தியமா என்ற கேள்வி நெடுநாட்களுக்கு இருந்தது. அதற்கு விடையாக 2010 இல் “தமிழ்ப்படம்” வந்தது. அச்சமயம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றியடைந்து நல்ல […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018)
ஏப்ரலில் சினிமா ஸ்ட்ரைக் முடிய, காத்திருந்த படங்கள் எல்லாம் கடந்த இரு மாதங்களாக வர தொடங்கியது. அதனால், ஏற்கனவே வெளிவந்து ஹிட்டாகி இருந்த பாடல்களை, திரையில் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு அமைந்தது. இரும்புத்திரை – முதல் முறை விஷாலுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைந்த ஹிட் திரைப்படம். டிஜிட்டல் இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசிய திரைப்படம். யுவன் பாடல்களை விட, படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருந்தார். இந்த ‘முதல் முறை’ அவருடைய டிபிக்கல் சாங் […]
காலா!!
வாரணம் பொருத மார்பு.. வரையினை எடுத்த தோள்கள் … நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா… தாரணி மௌலி பத்து, சங்கரன் கொடுத்த வாள், வீரம் …. இவையெல்லாம் கவிச்சக்ரவர்த்தி கம்பன் வில்லன் ராவணன் குறித்துப் புகழ்ந்து எழுதியவை. இவை தவிர, தனது கம்பராமாயாணத்திலே இன்னும் சொல்லலங்காரமாய் ராவணனைப் புகழ்ந்து – திரும்பவும் படிக்கவும், புகழப்பட்டது ராமனல்ல, ராவணன் – கம்பன் எழுதி எழுதி மாய்ந்துள்ளான். அவ்வளவு சிறப்புகள் மிக்கவன் ராவணன் என்பதில் கவிச்சக்கரவர்த்திக்கு எந்தச் சந்தேகமும் […]
காலா சொல்லும் பத்துப் பாடங்கள்
இது காலா படத்தில் சொன்ன பாடங்கள் அல்ல. காலாவைச் சுற்றி நடப்பதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள், தெரியாத விஷயங்களில் தலையை நுழைக்காதே – இந்தப் படத்திற்காகத் தான் ரஜினி தூத்துக்குடி சென்றிருப்பாரென்றால் அது முட்டாள்த்தனமான முடிவு என்று ரஜினியே இப்போது அறிந்திருப்பார். அதனால் இருந்த இமேஜும் டேமேஜ் ஆனது தான் மிச்சம். சினிமாவும் ரியலும் வேறு – இது ரஜினி ஒத்துக்கொண்ட விஷயம். ரஜினி படத்தில் பேசுவதை அவர் கருத்து என்று எடுக்கக் […]
இரும்புத்திரை
ஒரே மாதிரி கதைக்களம் இல்லாமல் படம் எடுப்பது சிறப்பு, அதையும் பார்க்கும்படி எடுப்பது மேலும் சிறப்பு, அதில் ஒரு கருத்தைச் சொல்லி, பார்ப்பவர்களை அது குறித்து யோசிக்கச் செய்வது பெரும் சிறப்பு. இந்தச் சிறப்பினைச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மித்ரன் அவர்கள். இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் உலகின் பாதகங்களைச் சீரியஸாக அலசியிருக்கிறார் மித்ரன். முதலில் அவருக்கு நம் பாராட்டுகள். ராணுவப் பயிற்சி அளிக்கும் அதிகாரியாக வரும் விஷால், அடிக்கடி அதிகம் கோபம் அடைவதால், பணி நீக்கம் செய்யப்பட்டு […]
அமெரிக்கத் தியேட்டர்கள் எப்படி?
தயாரிப்பாளர்கள், தியேட்டர் ஓனர்கள் மற்றும் டிஜிட்டல் விநியோகிப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையேயான முட்டல் மோதலினால் 47 நாட்களாக நீடித்து வந்த தமிழ் திரையுலகின் போராட்டம் ஒருவழியாகக் கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. திரையிடலுக்கான கட்டணத்தைக் குறைக்கச் சொன்னது தயாரிப்பாளர்கள் சங்கம். திரையிடல் கட்டணத்தைக் குறைப்பதைவிட, நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கட்டும் என்பது திரையரங்குகள் வாதம். முதலில் கட்டணத்தைக் குறைக்க மறுத்து, அதற்குரியக் காரணத்தைக் கூறிய க்யூப் நிறுவனம், தற்போது கட்டணத்தைச் சில காலத்திற்கு ஒரளவுக்குக் குறைத்து அறிவித்துள்ளது. திரையரங்கு […]
ப்ளாக் பேந்தர் (Black Panther)
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. சூப்பர் ஹீரோ படங்களில் ரசிகர்கள் சலிப்புறாமல் இருக்க இவற்றை வெவ்வேறு வகையிலும், புதுப் புதுப் பரிமாணத்திலும் காட்டப் பிரயத்தனப்படுகிறார்கள். சூப்பர் ஹீரோ எல்லையில்லா சக்தி கொண்டவன் என்பதில் இருந்து இறங்கி, அவனும் அல்லது அவளும் நம்மைப் போல ஆசாபாசம் கொண்டவர்கள் தான் என்றும், அவ்வப்போது அடியும் வாங்குவார்கள் என்றும் கடந்த சில வருடங்களாக இவர்களின் கதாபாத்திரங்கள் இந்திய செண்டிமெண்ட் படங்களுக்குக் குறைவில்லாமல் படைக்கப்படுகின்றன. ஏன் சூப்பர் ஹீரோ […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2018)
2018 தொடங்கியதில் இருந்து வெளி வந்த படங்களில் உள்ள சிறந்த பாடல்கள் என்று கணக்கிட்டால் குறைவு தான். முன்னணி இசையமைப்பாளர்கள் படங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி வரவில்லை. தவிர, கடந்த இரு வாரங்களாகப் படங்கள் எதுவுமே ஸ்ட்ரைக்கால் வெளிவரவில்லை. பார்ப்போம், போகப் போக எப்படிப் போகிறது என்று. தானா சேர்ந்த கூட்டம் – சொடக்கு மேல சொடக்கு அனிருத் இசையில் இந்த வருடம் வந்த முதல் படமான இதில் இருந்த பாடல்கள் நன்றாக ஹிட்டடித்தது. முக்கியமாக, இந்த […]






