அன்றாடம்
வேலைக்காரன்
தனி ஒருவன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜாவும், ரெமோ படத்திற்குப் பிறகு சிவகார்த்தி்கேயனும் இந்த வேலைக்காரனில் கைகோர்த்திருக்கிறார்கள். தங்கள் முந்தையப் படங்களில் வெற்றிப் பெற்ற இயக்குனரும் நாயகனும் தரும் அடுத்தப் படம் என்பதால் இயல்பாகவே இப்படத்தின் மீது ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திச் செய்ததா எனப் பார்ப்போம். கொலைகாரக் குப்பத்தில், குப்பத்து மக்களுக்கெனப் பிரத்யேக ஃஎப்.எம். சர்விஸ் தொடங்குகிறார், அம்மக்களுக்கான அக்கறையுடன் அங்கிருக்கும் படித்த வேலையில்லாத இளைஞரான சிவகார்த்திகேயன். அந்த வானொலிக்கான […]
அமெரிக்காவில் விடுமுறை 2017 கொண்டாட்டங்கள்
அமெரிக்காவில் டிசம்பர் மாதம் என்றாலே நினைவுக்கு வருவது விடுமுறை கொண்டாட்டங்கள், நத்தார் (Christmas) தினக் கொண்டாட்டம் மற்றும் சிறப்பு விருந்துகள் ஆகியவையே ஆகும். இந்தக் கொண்டாட்டங்களின்போது வண்ண வண்ண அலங்கார விளக்குகள் பலவற்றை அலங்கரித்துச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு மையக் கருத்தை வைத்து அலங்காரம் செய்வார்கள். அதுபோன்ற அலங்காரங்களிலும், கொண்டாட்டங்களிலும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக:
தெய்வத் தமிழிசை
“மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் பகவான் கிருஷ்ணரே கூறி இருப்பதை நாம் அறிவோம். மார்கழி என்றாலே , அதிகாலை நேரம், கோயில் மணிகள், வண்ண வண்ணக் கோலங்கள், சூடான பொங்கல், மெல்லிய பனி, கச்சேரிகளோடு காற்றில் கலந்த சங்கீதம்மற்றும் பக்தி இவைதான் நமக்கு நினைவில் வருவது. மினசோட்டாவின் இந்த ஆண்டு மார்கழியும் அது போலவே. முழுப் பனி, சூடான பொங்கல், காற்றில் கலந்த சங்கீதம் மற்றும் பக்தியே. லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி […]
2017 டாப் 10 சாங்ஸ்
இந்த வருடம் நாம் அவ்வப்போது பார்த்து வந்த டாப் சாங்ஸ் வரிசைகளைப் பின்வரும் இணைப்புகளில் காணலாம். ஃபிப்ரவரி 2017 ஏப்ரல் 2017 ஜூலை 2017 செப்டம்பர் 2017 நவம்பர் 2017 கீழ் வருபவை அனைத்தும் இவ்வருடம் இதுவரை வெளியான படங்களில் உள்ள பாடல்கள். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘2.0’ போன்ற படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகி இருந்தாலும், படங்கள் இன்னும் வெளியாகாததால் அவற்றை இவ்வரிசையில் சேர்க்கவில்லை. பத்து பாடல்கள் தான் என்று ஒரு […]
நம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது…….
டிசம்பர் மாதம் என்றாலே குளிர்காலம் வந்துவிட்டது என்பதை அறிவோம். நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். இந்த விடுமுறை, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் அன்பான நேரங்களைக் கொண்டது. டிசம்பர் 25ம் தேதி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நீங்கள் எல்லாரும் இறைமகன் இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன், மரியாள் என்ற ஒரு […]
அருவி – திரை விமர்சனம்
தவிர்க்கவே முடியாத, தவிர்க்க கூடாத ஒரு சினிமா தமிழில் வந்திருக்கிறது. போஸ்டர் டிசைன், டீஸர், ட்ரைலர், பாடல்கள் என ஏகத்துக்கும் எகிறிவிட்ட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா இந்த அருவி என்றால், நிச்சயமாகச் செய்திருக்கிறது, சொல்லப் போனால் எல்லா எதிர்பார்ப்பையும் மீறி இருக்கிறது இந்தப் படம். ஜோக்கர், தீரன் இப்போது அருவி போன்ற நல்ல படங்களைக் கொடுக்கும் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாராட்டுகள். இப்படி ஒரு கதையையும் காட்சியமைப்பையும் யோசித்த இயக்குனருக்கு அன்பின் முத்தங்கள்.. சரி படத்துல […]
நன்றி நவிலும் நந்நாள் ஓட்டப் பந்தயம்
ஓவ்வொரு ஆண்டும் நன்றி நவிலும் நந்நாளன்று (Thanksgiving Day) காட்டேஜ் குரோவ் நகரத்தில் 5 மைல் ஓட்டம் நடைபெறும். உள்ளூரிலிருந்து பெருமளவு மக்கள் இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்வர். இந்த வருடம், இந்த ஓட்டப் பந்தயத்தில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். இதில் வசூலாகும் தொகையை உள்ளுரில் உள்ள சில தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினர். இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு முத்திரை பதித்த மேற்சட்டை வழங்கப்பட்டது. சீருடை போல் இதனை […]
தீரன் அதிகாரம் ஒன்று
விதவிதமான போலீஸ் கதைகள் பார்த்திருக்கிறோம். முழுக்க சினிமாத்தனமான போலீஸ் கதைகள், தினசரிக் குற்றங்களைப் பதிவு செய்த கதைகள், பிரபலக் கொலை வழக்குகள் சார்ந்த கதைகள் என வந்துகொண்டே தான் இருக்கின்றன. போலீஸ் கதை என்றால் நன்றாகக் கதை விடலாம் என்ற அதிகாரம் இயக்குனர்களுக்கு வந்துவிடும். அதிலும் தெரிந்த உண்மைக் கதைகள் என்றால் அதைப் பார்ப்பதில் ரசிகர்களுக்கும் ஒரு ஆர்வம் வந்துவிடும். தொண்ணூறுகளில் இந்த ஜானரில் செல்வமணி நட்சத்திர இயக்குனராக மிளிர்ந்தார். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய […]
பக்த விஜயம்
ஒவ்வொரு யுகங்களுக்கும் ஒவ்வொரு பக்தி முறை உண்டென்பது சாஸ்திரம் வகுத்த விதிமுறை. அந்த வழியே கலியுகத்தில் இறைவனை உணர நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது. கலியின் ப்ரவாகத்தில் கரை சேர வழி உண்டென்றால் அது நாம சங்கீர்த்தனம் என்ற கயிறே. “சங்கீத ஞானமு பக்தி வினா” என்று த்யாகப்ரஹ்மமும், “காயன பாடிதவா ஹரி மூர்த்தி நோடிதவா ” என்ற புரந்தர தாஸரின் பாடல் வரிகளும் மனதில் வந்து போயின. ‘க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி மினசோட்டா’ (Global […]






