\n"; } ?>
Top Ad
banner ad

அன்றாடம்

தமிழ்த் தலைநகரத் தெருவிழா 2017

Filed in நிகழ்வுகள் by on September 24, 2017 0 Comments
தமிழ்த் தலைநகரத் தெருவிழா 2017

எமது வாசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பனிப்பூக்கள் சஞ்சிகை வட அமெரிக்கத் தமிழ்த் தலைநகராகிய டொரண்டோ மாநகரத் தமிழர் திருவிழாப் படத் தொகுப்பைத் தருகிறோம். படங்களை வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப, பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளோம் படத்தொகுப்பு – பனிப்பூக்கள் சிறப்புக் கனேடியப் படப்பிடிப்பாளர்

Continue Reading »

சிந்திய சிந்து

சிந்திய சிந்து

  காட்டிலும் மேட்டிலும் களைப்புடன் உழைத்திட்ட காளையும் கன்னியும் கண்ணயர்ந்து சுவைத்திட காதலும் கடவுளும் கருத்தினில் படைத்திட்ட, காரிருள் நீக்கியே கவிபுனைந்த கதிரோன்! சாவதின் பயமது சங்கடமாய்த் துரத்திட சாரமாய் வாழ்க்கையின் சங்கதி உணர்த்திட சாரதியாய் வந்திட்ட கண்ணனைப் பணிந்திட சாயுங்கால சொர்க்கமாய்க் குளிர்ந்திட்ட நிலவவன் !!! தாயகம் முழுவதும் தருக்கரால் பிடிபட தானமும் தவங்களும் தழைக்காது மிதிபட தாயவள் தளையறுக்கத் தலைமகனாய் உதித்திட்ட, தாங்கொணா வெப்பமாய்த் தகித்திட்ட தலைவனவன் !!! நாவினில் கலைமகளை நலமுறவே அமர்த்திட […]

Continue Reading »

காற்றினில் உலவும் கீதங்கள் – Top 5

காற்றினில் உலவும் கீதங்கள் – Top 5

கடந்த சில வாரங்களில் நிறைய படங்களின் பாடல்கள் வெளியாகிவுள்ளன. ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர், ப்ரிமீயர் ஷோ, ரிலீஸ் என பட வெளியீட்டு ப்ராசஸ் மாறிப் போனதைப்போல், முன்பு, ஒருநாளில் நிகழும் பாடல் வெளியீட்டு ப்ரோட்டோக்கால், இன்று சிங்கிள் ரிலீஸ், டபுள் ரிலீஸ், பிஜிஎம் ரிலீஸ் என்று மாதக்கணக்கில், வருடக்கணக்கில் நிகழுகின்றது. அப்படி சமீபத்தில் வெளிவந்த பாடல்கள் பல குறிப்பிடத்தக்க வகையில் இருந்தாலும், நாம் இங்கு தொடர்ந்து பார்ப்பது வெளிவந்த படங்களை மட்டும் தான். […]

Continue Reading »

மின்னியோப்பா நீர்வீழ்ச்சியும் மீன் குழம்பும்

மின்னியோப்பா நீர்வீழ்ச்சியும் மீன் குழம்பும்

கோடை வாரயிறுதி என்றால் இயற்கை விரும்பிகளுக்கு மின்னசோட்டாவில் ஜாலி தான். இருக்கவே இருக்கிறது, ஊர் முழுக்க ஏரிகள். அது போரடித்து விட்டால், அக்கம்பக்கம் உள்ள ஸ்டேட் பார்க், அருவி, நடைப்பயிற்சிப் பாதைகள் என உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. அப்படி ட்வின் சிட்டிஸில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் சென்று வரக் கூடிய தொலைவில் உள்ளது மின்னியோப்பா நீர்வீழ்ச்சி (Minneopa Falls). மின்னியோப்பா ஓடை, இங்கு இரு இடங்களில் நீர் வீழ்ச்சியாக விழுகிறது. அதுவே, மின்னியோப்பா என்ற காரணப் பெயராக […]

Continue Reading »

மினசோட்டா மாநிலச் சந்தை 2017

Filed in நிகழ்வுகள் by on September 4, 2017 0 Comments
மினசோட்டா மாநிலச் சந்தை 2017

மாநில அந்தஸ்தைப் பெற்ற ஆண்டான 1859 துவங்கி, மினசோட்டாவில்  ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பெருவிழா மினசோட்டா மாநிலச் சந்தை. அடிப்படையில் மினசோட்டா வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டு வளர்ந்த மாநிலம்.  விளைபொருட்கள், கால்நடைகள் போன்ற வேளாண்மை அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், விற்கவும் உருவான சந்தை இது. துவக்கத்தில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தச் சந்தை,பின்னர் மினியாபொலிஸ், செயிண்ட் பால் என இரு நகரங்கள் சந்திக்கும்  ஸ்நெல்லிங் அவென்யூவில் நிரந்தரமாக நடைபெற, சுமார் 320 ஏக்கர் பரப்பளவில் […]

Continue Reading »

அஷ்டவிநாயகா பிரதிஷ்டை

Filed in நிகழ்வுகள் by on September 4, 2017 0 Comments
அஷ்டவிநாயகா பிரதிஷ்டை

ஹரி ஓம் வாசகர்களே! மின்னசோட்டாவில், சாஸ்கா நகரில் உள்ள சின்மயா மிஷன் நிறுவனத்தின் பெயர் சின்மய கணபதி. பெயருக்கேற்ப இந்த அமைப்பின் பிரதானக் கடவுள் கணபதி ஆகும். ஒவ்வோர் ஆண்டும் இங்கே ஹிந்துப் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இங்கே பால விஹார் என்னும் குழந்தைகளுக்கான ஹிந்து கல்விக் கூடமும் இருக்கிறது. அந்தக் குழந்தைகளும் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் பங்கேற்பர். இந்தப் பள்ளி கோடை விடுமுறை முடிந்து, செப்டெம்பர் மாதத்தில் துவங்கும். விநாயகர்ச் சதுர்த்திக் கொண்டாட்டங்களுடன் தொடங்கி வைப்பர். இந்த ஆண்டு […]

Continue Reading »

ஒரே ஒரு சந்திரன் – பாகம் 3

ஒரே ஒரு சந்திரன் – பாகம் 3

(பாகம் 2) ராஜகுமாரி திரைப்படத்திற்கு முன்னரே, ராமச்சந்திரனுக்கு ,  நந்தலால் என்பவர் இயக்கிய  ‘சாயா’  திரைப்படத்தில் கதாநாயகனாக  நடிக்க வாய்ப்பு கிடைத்தது . படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே அவரது மனைவி பார்வதி உடல்நலம் குன்றி இறந்துவிட, ஊருக்குச் சென்றதால் ஹீரோ வாய்ப்பை அவர் இழக்க நேர்ந்தது. மனைவி இறந்தது ஒரு பக்கம், கதாநாயகன் வாய்ப்பு பறிபோனது ஒரு பக்கமென துயரங்கள் தாக்கிய போது ராமச்சந்திரன் ராணுவத்தில் சேர்ந்து விட விரும்பினார். அவரது மனதை மாற்றி திரைப்படங்களில் […]

Continue Reading »

வட அமெரிக்கத் தமிழ்த் தெருவிழா (Tamil Fest-Scarborough’s largest street festival)

வட அமெரிக்கத் தமிழ்த் தெருவிழா (Tamil Fest-Scarborough’s largest street festival)

நடுத்தெருவில் குத்தாட்டம் வேண்டுமா, கொம்பனாட்டம் வேண்டுமா, இல்லை சிலம்பாட்டம் வேண்டுமா?  அல்லது பாட்டுக் கேட்டு ஆடணுமா, மெட்டுப்பாட்டு முணுமுணுக்கணுமா எல்லாமே உண்டு இந்தத் தமிழர் தெருத் திருவிழாவில். கனேடியத்  தமிழ் மக்களின் தரமே வட அமெரிக்காவில் ஒரு தனி விசேடம். ஏறத்தாழ 300,000 இற்கும் மேற்பட்ட தமிழர் வாழும் ரொன்ரோ மாநகரில் ஸ்கார்பரோ பகுதியில் மூன்றாவது வருடமாக நடைபெறும் கனேடியப் பண்டிகை இது. இந்தப் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஊர்க் கோயில் […]

Continue Reading »

பகுத்தறிவு – பகுதி 7

பகுத்தறிவு – பகுதி 7

(பகுதி 6) சென்ற இதழில் ரமணர் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வில் நடந்த பல சிறிய, ஆனால் அரிய நிகழ்வுகளையும், அவை காட்டும் பகுத்தறிவையும் தொடர்ந்து பார்ப்போம். ரமணர் குகையில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்று ஏற்கனவே பார்த்தோம். அவரின் அதீத ஞானத்தைச் சிறிது சிறிதாக உணரத் தொடங்கிய கிராம மக்கள் அவரைத் தினமும் வந்து பார்க்கத் தொடங்கினர். தினமும் வந்து பார்க்கத் தொடங்கியவர்கள், அவருக்கு உணவு, உடை எனக் கொடுத்துப் பாதுகாக்கத் தொடங்கினர். அவரின் பாதுகாப்பிற்காக […]

Continue Reading »

இந்தியா ஃபெஸ்ட் 2017 (India Fest)

இந்தியா ஃபெஸ்ட் 2017 (India Fest)

  இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) வருடம் தோறும் இந்தியச் சுதந்திரத் தினத்தையொட்டி மினசோட்டாவில் வசிக்கும் இந்தியர்களையும், இந்திய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மினசோட்டா ஸ்டேட் கேப்பிடல் (State Capitol) மைதானத்தில் நடத்தும் இந்தியா ஃபெஸ்ட் (India Fest) நிகழ்வு, இந்தாண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று வெகு விமரிசையாக நடந்தது. அன்றைய தினம் வெளிப்புற நடமாட்டத்திற்கு ஏற்ற தட்பவெப்பம் அமைந்திருந்தது, இந்த நிகழ்வுக்குச் சாதகமாக இருந்தது. காலை பதினொரு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாமன்றக் கட்டிடத்தின் முன்பாக மேடை […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad