அன்றாடம்
மெர்சல்
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அட்லீயின் ஸ்டைல், ஏற்கனவே ஹிட்டான ஒரு படத்தைத் தற்போதைய ட்ரெண்டிற்கு மீள் – உருவாக்கம் செய்வது. மௌனராகம், சத்ரியன் என முதல் இரண்டு படங்களில் மணிரத்னத்தை ஃபாலோ செய்தவர், மூன்றாம் படமான மெர்சலில் அபூர்வ சகோதரர்கள் சாயல் கதையை, தனது குருநாதர் ஷங்கர் பட பாணியில் படமாக்கியிருக்கிறார். முதல் முறையாக, மூன்று வேடங்களில் விஜய். பத்து வேடங்களில் நடித்தாலும், விஜய் வித்தியாசம் காட்ட மாட்டார் என்று தெரியும். அவரென்ன வச்சுக்கிட்டா […]
அஹிம்சை தினம் 2017
மினசோட்டா மாநிலத்தில், இந்திய அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா மஹாத்மா காந்தியின் பிறந்த தினத்தை ஒட்டி, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி. அஹிம்சை தினம் (NON-VIOLENCE DAY) கொண்டாடினர். சென்ற ஆண்டைத் தொடர்ந்து, இரண்டாம் முறையாக் கொண்டாடப்பட்ட இந்த தினம், மினசோட்டா மாநிலத்தின் தலை நகரக் கட்டிட அரங்கில் நடைபெற்றது. புருஷ் கோரி இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கினார். மினசோட்டா கவர்னர் மார்க் டேட்டன் கையெழுத்திட்ட, மாநிலச் சான்றிதழ் வழங்கப்பட்டு இந்திய அசோசியேஷன் […]
ஆப்பிள் டோநட் பணியாரம்
வட அமெரிக்காவில் இலையுதிர் காலம் வந்து விட்டது. இதனால் இவ்விடம் இலை தழைகள் நிறம் மாறுவது ஒரு புறம்; சுவையான பழ அறுவடைகள் மறுபுறம். தமிழர் பிறந்த நிலங்களில் கறுவாப்பட்டை, ஏலக்காய் வாசம் இயல்பாகவே உள்ளது. ஆயினும், அமெரிக்காவுக்கு வருகை தந்த ஐரோப்பியக் குடிகள் கொண்டுவந்து அறிமுகப்படுத்திய ஆப்பிள் பழச் சோலைகளின் பாரம்பரியமோ தனி வகை. மென்மையான ஆப்பிள் பழ நறுமணம் கறுவாப்பட்டையுடன் கலந்து மூக்கை மொய்த்து வயிற்றையும் நாக்கையும் ஊற வைக்கும் வாசம், வட அமெரிக்காவில் […]
மின்னசோட்டாவில் இலையுதிர் வர்ண ஜாலம்
இயற்கையின் கால மாற்றங்களில் இலையுதிர் காலமானது மிகவும் ரம்மியமானது. மரங்களுக்கான உணவைச் சூரிய ஒளியில் இருந்தும், காற்றில் இருந்தும் இலைகள் தயாரிக்கும் போது, இந்தச் சமையலில் ஈடுபடும் க்ளோரொஃபில் (Chlorophyll) எனும் ரசாயனம், இலைகளுக்குப் பச்சை நிறத்தை, சூரியன் அதிக நேரம் இருக்கும் வசந்தக் காலத்திலும், கோடை காலத்திலும் கொடுக்கிறது. இது போல், தாவரங்களில் இருக்கும் பிற வகை ரசாயனங்கள், மற்ற வண்ணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. கரோடெனாய்ட்ஸ் (Carotenoids) என்பது மஞ்சள், ஆரஞ்சு போன்ற வண்ணங்களை வாழைப்பழம், […]
ஸ்டஃப்டு குடைமிளகாய் (Stuffed Capsicum)
சில மெக்சிகன் ரெஸ்டாரண்ட்களில் ஸ்டஃப்டு குடைமிளகாய் உணவு பதார்த்தங்களைப் பார்த்திருக்கலாம், சுவைத்திருக்கலாம். அதை நம்மூர் சுவையில் எப்படிச் செய்யலாம் என்று இங்கே காணலாம். தேவையான பொருட்கள் குடைமிளகாய் – 2 காலிஃப்ளவர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு பனீர் – துருவியது ஒரு கைப்பிடி அளவு சீஸ் – அரைக் கப் வெங்காயம் – பாதி பச்சை மிளகாய் – 1 இஞ்சிப் பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் […]
ஈரல் பிரட்டல் கறி
இலையுதிர் காலம் வட அமெரிக்காவிற்கு வந்துவிட்டது, குளிர் பருவம் ஆரம்பிக்க இனி கொழுப்பு, புரத உணவுகளைஇயல்பாக மனம் நாடும். இந்தத் தருணத்தில் அருமையான புரதம், மற்றும் அரிய கொழுப்பு, மற்றும் உயிர் சத்துக்கள்தரும் ஈரல் பிரட்டல் அருமையானது, ஈரல் கறி சாப்பிடுவது சம்பிரதாயமாக அறிமுகமாக வேண்டியது. இதன் உருகி, வாசம் போன்றவை புதிதாகச்சுவைப்பவர்கள் சாதாரணக் கறி உணவுகள் போன்றதல்ல. எனவே சுடச் சட சோற்றுடன் சேர்த்துச் சுவைப்பது சிறந்தது. தேவையானவை ½ இறாத்தல் […]
மர்மக் குகை (Mystery Cave)
பேரைக் கேட்டால் ஏதோ பலான ஆங்கில டப்பிங் படம் போல் தெரிந்தாலும், இந்தப் பெயரில் மினசோட்டாவில் ஒரு குகை இருக்கிறது. பயப்படத் தேவையில்லை. குழந்தை குட்டிகளோடு குடும்பமாகச் சென்று வரக் கூடிய இடம் தான். மினசோட்டா ஒரு விசித்திரமான பிரதேசம்தான். மேலே பல ஏரிகளால் சூழப்பட்டிருக்கிறது என்றால், மண்ணுக்குள்ளும் பல அதிசயங்களை வைத்திருக்கிறது. முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், பூமியின் அடியில் அருவியும், ஏரி போன்ற நீர்நிலையும் உள்ள பிரதேசம் இது. நயாகரா குகையில் அருவியும், இந்த […]
குரங்கு பொம்மை
தமிழ் சினிமாவின் போக்கும், வளர்ச்சியும் அந்தந்தக் காலக்கட்ட இயக்குனர்களின் வரவைப் பொறுத்தே அமைந்துள்ளது. மேடை நாடகப் பின்னணியில் இருந்த வந்த இயக்குனர்கள், இலக்கியத் துறையில் இருந்து வந்த இயக்குனர்கள், ஃப்லிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்து வந்த இயக்குனர்கள், பிரபல இயக்குனர்களிடம் பாடம் பயின்ற இயக்குனர்கள் எனப் பலவகை இயக்குனர்களிடம் இருந்து பலவகைச் சினிமாக்களை நாம் கண்டிருக்கிறோம். தற்சமயம் நாம் காண்பது சின்னத்திரை குறும்படப் போட்டியில் ஜொலித்த யூ-ட்யூப் இயக்குனர்களின் படைப்புகளை. இவர்களிடம் பெரிய நடிகர்கள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு […]
பகுத்தறிவு – 8
(பாகம் 7) மந்திரங்கள் ஓதுவதாலோ, சடங்குகளை முறையாகச் செய்வதினாலோ எல்லா விளைவுகளும் மாறி அமைந்துவிடுமா என்றால், அமையாது என்பதே பதிலாகும். இதனைச் சொல்லக் கேட்கையில், ஒரு நாத்திகரின் வாதம்போல் இருக்கிறதல்லவா? இதுவரை அப்படித் தெரிந்தாலும், நாத்திகர்களால் ஒரு செயலின் விளைவு எதிர்பார்த்தபடி இல்லாததன் காரணமென்ன என்றால் அறிவுபூர்வமாக விளக்க இயலாது. ஆனால், அதனையும் தொடர்ந்து அறிவியல் நோக்கோடு விளக்குவதே ரமணரை மகரிஷி நிலைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு கட்டிடத்தின் மாடிக்குச் செல்வதற்காகத்தான் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் யாரேனும் […]






