அன்றாடம்
ஃபெட்னா பேரவைத் தமிழ் விழா 2017
ஃபெட்னாவின் 2017 பேரவைத் தமிழ் விழா, மினியாபொலிஸில் எம்சிசி (MCC) என்றழைக்கப்படும் பிரமாண்ட கன்வென்ஷன் சென்டரில் (Minneapolis Convention Center) ஜூலை 1, 2 மற்றும் 3 ஆம் தினங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு அமெரிக்கா, இந்தியா, கனடா, சிங்கப்பூர் என உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் வந்து கலந்துகொண்டனர். முன்னதாக, 31 ஆம் தேதி வெள்ளியன்று மாலை, வந்திருந்த விருந்தினர்களைச் சந்தித்து, அவர்களுடன் உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நட்சத்திர இரவு’ நிகழ்ச்சி செயிண்ட் பாலில் […]
ஜெகத்காரணி
அகம் குளிர்ந்திடவே “ஜெகத்காரணி” எனும் தெய்வீக ஆடற் கதை, அழகுறு சக்தி வடிவங்களாய் , ‘நிருத்திய கலாசேக்ஷ்தினரால்’ சித்தரிக்கப்பட்டு, 2017 ஆனி மாதம் 17ஆம் நாள் சனிக்கிழமையன்று, வண்ணமுற வழங்கப்பட்டது. மினசோட்டாவில் அமைந்திருக்கும் மகிமைமிகு இந்து ஆலயத்தில், ‘நவ சந்தி’ எனும் மாபெரும் ஹோமம் நிகழ்ந்து , 11ஆவது வருட விழாவாகிக் கனிந்திடவே, ஜெகம் புகழுறு “ஜெகத்காரணி”யின் அருட்பிரசாதமாய், இக்கலை நிகழ்ச்சி, இனிதாய் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடற்கதையினை வடிவமைத்து நெறிப்படுத்தியவர் , “நிருத்திய கலாசேஷ்திர […]
ஃபெட்னா பேரவை விழா – தயாராகும் மின்னசோட்டா
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னாவின் (FETNA) பேரவை விழா, இந்த ஆண்டு மின்னசோட்டாவில் மினியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரில் (Minneapolis Convention Center) நடைபெறவுள்ளது. இதற்காக அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் ட்வின் சிட்டீஸிற்கு ஜூலை முதல் வாரம் (July 1st and 2nd) வருகை தர உள்ளனர். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக, கயானா நாட்டின் பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, இலினாய் மாநிலத்தின் கீழவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் […]
மரபிசைக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு – பாகம் 2
(பாகம் 1) கேள்வி (சிலம்பரசன்): உங்களுக்குப் பல கருவிகள் வாசிக்கத் தெரியும் என்று கூறினீர்கள். ஒரு கருவி கற்றுக் கொண்டால் மற்ற கருவிகள் வாசிக்க கற்றுக்கொள்வது சுலபமா? சிலம்பரசன்: சொல்கட்டு எடுத்து கொண்டால், லயம் சம்பந்தப்பட்ட எல்லாக் கருவிகளுக்கும் “தா தீ தம் நம் தகிட” போன்று சொல்கட்டுகள் அமைந்திருக்கும். ட்ரம்ஸ் போன்ற கருவிகள் மேற்கத்தியக் கருவிகள். அதன் வாசிப்பு முறையே வேறு. அதற்கும் வாத்தியத்துக்கும் சம்பந்தம் இல்லை. ட்ரம்ஸ் கருவிக்கு வெஸ்டர்ன் நோட்ஸ், நான் பயன்படுத்துவது […]
மால் ஆஃப் அமெரிக்கா
மினசோட்டாவின் பெருமைகளில் ஒன்றான மால் ஆஃப் அமெரிக்காவிற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அப்படியென்ன பெருமை என்றால், அமெரிக்காவின் மிகப் பெரிய அங்காடி வளாகம் என்ற பெயரைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சூடிக் கொண்டு நிற்கிறதே. மினியாபொலிஸ் வாசிகளுக்கு இந்த மால் மேல் எந்தளவு க்ரேஸ் இருக்கிறதோ தெரியாது, இங்கு வரும் வெளியூர் விருந்தினர்களுக்கு இதன் மேல் பெரும் ஆர்வம் இருக்கும். மினியாபொலிஸில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னும் லிஸ்டில் இது கண்டிப்பாக இருக்கும். இதன் […]
வொண்டர் வுமன் – திரை விமர்சனம்
மேற்கத்தியத் திரைப்படங்களில் அதிசய சக்தி வாய்ந்த ஹீரோக்களைப் படைப்பதில் மார்வெல் மற்றும் டீசி காமிக்ஸ் மிகப் பிரபலமான நிறுவனங்கள். டீசி காமிக்ஸின் படைப்பு தான் வொண்டர் வுமன். இந்தப் படத்தைப் பட்டி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். மிஸ் இஸ்ரேல் பட்டம் வாங்கிய கால் கடாட் வொண்டர் வுமனாக நடித்துள்ளார். கதாபாத்திரத்துக்குப் பொருந்தும் வகையில் இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி கண்டுள்ளது. ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த அதிசய மனிதர்களில் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ளார் வொண்டர் வுமன். சிலந்தி […]
23 வது கற்பாலக்கொண்டாட்டம் (Stone Arch Bridge Festival)
ஸ்டோன் ஆர்ச் ஃபெஸ்டிவல் என்பது மினியாப்பொலிஸ் நகரில் செயின்ட் ஆந்தனி நீர்வீழ்ச்சிக்கருகே மிசிசிப்பி ஆற்றைக் கடக்க உதவும் பண்டைய கற்பாலத்தில் கொண்டாடப்படும் கோடைக்கால விழாவாகும். இது வெள்ளிக் கிழமை ஜூன் 16இல் இருந்து ஞாயிற்றுக் கிழமை ஜூன் 18 வரை நடைபெற்றது. வானம் முகில் பிளந்து மழை பொழிவேன் என மிரட்டினும் மழையினால் கொண்டாட்டங்களிற்குப் பாதிப்பில்லை. இம்முறை மினசோட்டாக் கோடை வெய்யில் உக்கிரம் இல்லாமல் யாவும் இதமான கால நிலை விழாவாக அமைந்தது. இது மிசிசிப்பி […]
கர்நாடக இசை நிகழ்ச்சி
மினசோட்டா மாநிலத்தின் மேப்பிள்க்ரோவ் நகரில் அமைந்துள்ள ஹிந்து தேவாலயத்தில், ஜூன் மாதம் 10ஆம் திகதி கர்நாடக இசைக்கச்சேரி விமரிசையாக நடைபெற்றது. இதில், பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ஸ்ரீசாய் ஸ்ரீனிவாசன், ஸ்ரீ சங்கரன் நம்பூதிரி மற்றும் வயலின் வித்வான் பகல ஜெயப்பிரகாஷ், புல்லாங்குழல் வித்வான் கோ. நடராஜ் மற்றும் தவில் வித்வான் கணேஷன் கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில வாசகர்களின் பார்வைக்கு: – புகைப்படம்: இராஜேஷ் கோவிந்தராஜன்.
மினியாப்பொலிஸ் அரங்கு அருகாமை உணவகங்கள்
மினியாப்பொலிஸ் நகர விருந்தாளிகள் மற்றும் தமிழ் விழாவிற்கு வரும் அன்பர்களும் யாவரும் இந்திய உணவை வேண்டினால் வான்பாதை இணைப்பு முலம் இலகுவாகச் சென்று அடையக் கூடிய உணவகங்கள்: 1 Dancing Ganesha 2 Bombay Bistro 820 S Marquette Ave, Minneapolis, MN 55402 (612) 312-2800 3 Kadai Indian Kitchen 601 S Marquette Ave #200, Minneapolis, MN 55402 (256) 472-2545 4 Bombay Palace 11 […]






