\n"; } ?>
Top Ad
banner ad

அன்றாடம்

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

மாசி  2015  இல்  வெளிவந்து,  இன்றுவரை  உலகெங்கிலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும்  “என்னை அறிந்தால்” திரைப்படத்தை திரையில் பார்த்து இரசித்த எனது சுய அனுபவத்தை, இங்கு பரிமாறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். வழமைபோல இங்கும் திரையின் கதையை விவரிக்காமல் அதே நேரத்தில்  திரைப்படத்தில் உள்ள குறை நிறைகளை எந்தவித பாரபட்சம் இல்லாமல் எனது சுய கருத்தை, குறிப்பாக இரசித்த காட்சிகளை,  இங்கே சுருக்கமாக கூற விரும்புகிறேன். பொதுவாக ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரையில் பங்கு பெறும் […]

Continue Reading »

மொந்தன் வாழைக்காய்ச் சம்பல் (Ash Plantain Coconut Salad)

Filed in அன்றாடம், சமையல் by on February 28, 2015 0 Comments
மொந்தன் வாழைக்காய்ச் சம்பல் (Ash Plantain Coconut Salad)

இலங்கை யாழ்ப்பாணத்தில் கறி வாழைக்காய் அல்லது சமைக்கும் வாழைக்காய், சாம்பல் மொந்தன் எனும் வகை வாழைக்காய்களைப் பல வகையான சம்பல் மற்றும் பச்சடிகளிற்கும் பாவிப்பர். இதனை  இந்தோனேசிய மற்றும் மத்திய ஆப்பிரிக்க மக்களும் சமையலில் உபயோகிப்பர். வாழைக்காயானது உருளைக்கிழங்கு, கோதுமை போன்றவற்றை விடக் குறைந்த சக்கரையைக் (low glycemic index) கொண்டது. ஆயினும் அதன் உயிர்ச் சத்து (vitamin C) உயர்ந்ததாகவே காணப்படும். மொந்தன் வாழைக் காய்ச் சம்பல் மதிய  உணவுடன் சேர்த்துக் கொள்ளச் சிறந்த பக்க […]

Continue Reading »

பொய்க்கால் குதிரை ஆட்டம்

பொய்க்கால் குதிரை ஆட்டம்

கடந்த வருடம் அலுவலகப் பணி காரணமாக தமிழகத்திற்கு பயணப்பட வேண்டி இருந்தது. அமெரிக்காவிலிருக்கும் எங்கள் கணிப்பொறிக் குழுவின் தலைவரிடம் பேசிப் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய, மல்லிகைக்குப் பெயர் பெற்ற, தூங்கா நகர் என்று புகழ் பெற்ற, தமிழிற்குச் சங்கம் வைத்து வளர்த்த,  நான் பிறந்த (இது முக்கியம்) பெருமைமிகு ஊரான மதுரையில் இருந்து பணி செய்யும் ஒரு வாய்ப்பினைப் பெற்றேன். தினமும் கிடைத்த காலை நேர வேளையில் ஏதேனும் ஒரு தமிழர் கலையை நமது ஊரிலேயே பயின்றால் […]

Continue Reading »

சங்கீதமே என் பிராண வாயு – திருமதி. நிர்மலா ராஜசேகர் பேட்டி

சங்கீதமே என் பிராண வாயு  – திருமதி. நிர்மலா ராஜசேகர் பேட்டி

கர்நாடக சங்கீத சூப்பர் ஸ்டார் திரு. பால முரளி கிருஷ்ணாவின் கையால் சங்கீத விபன்ஷி என்ற விருது பெற்றவர். எம். எஸ். சுப்புலக்‌ஷ்மி அம்மாவின் கையால் தொடங்கி வைக்கப்பட்ட, கல்லூரிக் கால கர்நாடக சங்கீத அமைப்பு ஒன்றின் தொடக்க கால உறுப்பினர், திரையிசை மற்றும் கர்நாடக இசையில் இன்றும் கொடிகட்டிப் பறக்கும் பல சங்கீத மாமேதைகளுடன் நட்புக் கொண்டுள்ள இனிய தோழி, திருமதி. கற்பகம் சுவாமிநாதன், திரு. டி.ஆர். சுப்பிரமணியம், வீணை காயத்ரியின் தாயார் திருமதி. கமலா […]

Continue Reading »

ஐ பட விமர்சனம்

ஐ பட விமர்சனம்

ஷங்கர் இயக்கத்தில் உருவான, திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ஐ படத்தை திரையில் பார்த்த எனது அனுபவத்தை இங்கு பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். “யானை வரும் பின்னே ;மணியோசை கேட்கும் முன்னே” என்பதற்கிணங்க, சங்கரின் திரைப்படமாகிய ஐ வெளிவருவதற்கு முன்பே பரபரப்புகளும் பேட்டிகளும் படக்காட்சிகளும் இணையத்தளத்தில், வலம் வர தொடங்கி விட்டன. இது மேலும் எனது ஆவலைப் பெருமளவில் தூண்டிவிட்டது என்னமோ உண்மைதான். திரைப்படம் வெளிவரும் நாளும், தமிழர் தைப்பொங்கல் நாளும் ஒன்றாக அமைந்துவிட நாட்களை எண்ணத் […]

Continue Reading »

போண்டா தயாரிக்கும் முறை

Filed in சமையல் by on January 22, 2015 0 Comments
போண்டா தயாரிக்கும் முறை

1 lb உருளைக்கிழங்கு 1 இருவிரல் பிடியளவு மஞ்சள்தூள் (pinch) ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள் ½ தேக்கரண்டி உப்பு ½ தேக்கரண்டி சீரகத்தூள் (fennel) 1 தேக்கரண்டி கடுகு   போண்டாவின் உள்ளிருக்கும் கலவைக்கு   1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் 10 நறுக்கிய பச்சை மிளகாய் 1/4 கோப்பையளவு சிறிதாக வெட்டிய சின்ன வெங்காயம் 1 சின்னவிரல் அளவு நறுக்கிய இஞ்சி 1 சிறு கறிவேப்பிலைக் கொத்து   போண்டா பொரிக்கத் தோய்த்து எடுக்கும் போண்டா […]

Continue Reading »

மனையடி மரபுகள்

மனையடி மரபுகள்

தமிழர்  பண்டைய பிறப்பிடங்களில் குடிமனை கட்டுவதற்கு சான்றோர் பல  வரையறைகளைத் தந்துள்ளனர். இவை மக்களின் அடிப்படை நடைமுறைகளை வைத்து அமைந்திருப்பினும் ஒருகாலத்தில் கடவுளர் வழிப்பாட்டைக் கொண்டு அமைந்தது என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் நாம் மனையடி மரபுகள் யாவை, முடிந்தளவு அவற்றிற்கான விளக்கங்கள்   என்னவென்று பார்ப்போம். தமிழர் வாழ்ந்த இடங்கள் இடைவெப்பப் பிரதேசங்கள், வட அமெரிக்க வாழ்மக்கள் குளிர் பிரதேங்களில் வாழுகின்றனர். எனவே சில வரையறுப்புகளை நேரடியாக உபயோகிக்க முடியாமலும் போகலாம். எனினும் அவற்றின் பொதுவான […]

Continue Reading »

பண்டானா சதுக்கப் புகையிரத நூதனசாலை

பண்டானா சதுக்கப் புகையிரத நூதனசாலை

மினசோட்டா மாநிலத்தில் பிள்ளைகளும், ஆர்வமிக்க பெற்றோரும் சேர்ந்து மகிழ இயங்கும் மாதிரி உருவகப் புகையிரத நுதனசாலை ஒன்று உண்டு. இவ்விடத்தில் மூன்று தலைமுறைகள் வந்து போவது சகசமான விடயம். பாட்டன், பாட்டி தொட்டு, அப்பா, அம்மா குழந்தைகள் குழுவினர் பலரை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இது செயின்பால் (St Paul) நகரில் உள்ள 1880களில் கட்டப் பட்டு மீண்டும் பழமை பேணி மீள் சீரமைக்கப்பட்ட பண்டானா சதுக்கத்தில் (Bandana Square) இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது. இந்த நூதனச் […]

Continue Reading »

டுவின் சிட்டீஸ் தமிழர் திருவிழா

டுவின் சிட்டீஸ் தமிழர் திருவிழா

சனவரி மாதம் 17ம் திகதி சனிக்கிழமை மதியத்திலிருந்து மாலைவரை டுவின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் Twin Cities Tamil Association (TCTA) தைப்பொங்கல் தமிழர் திருவிழாவை தமிழன்பர்களுடன் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி ரிச் ஃபீல்ட் நடுநிலைப் பள்ளியில் Rich Field Middle School நடைபெற்றது. தமிழர் திருவிழாவில் பள்ளி செல்லும் பாலகர்களிலிருந்து துள்ளி விளையாடும் சிறுவர் சிறுமியர் தொட்டு பெரியவர்கள் வரை யாவரும் மேடையிலும் அவையிலும் பங்குபெற்று சிறப்பு சேர்த்தனர். தமிழர் திருவிழாவானது தமிழ்த்தாய் வாழ்த்தின் பின்னர் திரு […]

Continue Reading »

சாண்டாலாந்து … (மேசிஸ் கிறிஸ்துமஸ் கோலாகலம்)

சாண்டாலாந்து  … (மேசிஸ் கிறிஸ்துமஸ்  கோலாகலம்)

சாண்டாலாந்து  … (மேசிஸ் கிறிஸ்துமஸ்  கோலாகலம்) குளிரும் இருள் சாரலும் அதிகமாகும் மார்கழிப்பனியிலே யாவரையும் குழந்தைகளாக்கி மனதார அனுபவிக்க வைக்கும் ஒளி மயமான கோலாகலமே மினசோட்டா மாநில மேசிஸ் அலங்காரம். இம்முறை சாண்டாவின் உதவியாளர்களாகிய எல்வ்ஸ் எனும் கற்பனை மனிதர்களின் வாழ்க்கை அடிப்படையில் அலங்காரக் கண்காட்சி அமைக்கபெற்றது. இதற்காக  சாண்டா,  அவரது பாரியார், மேலும் 76 எல்வ்ஸ்களின்   அசையும் உருவகங்கள்  அமைக்கப்பட்டதாம். மினியோப்பொலிஸ் நகரி்ல் 52 வருடங்களாக டெயிட்டன் மார்ஷல் ஃபீல்ட் தாபனங்கள் (தற்போதைய மேஸிஸ் நிறுவனம்) […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad