அன்றாடம்
மாதுளைப் பழத்தின் மகிமை
பார்த்தாலே மனதைப் பூரிக்க வைக்கும் பளிங்குச் செம்பு போன்ற பழம். அதன் சிவப்பு வர்ணஜாலமோ தனி. மஞ்சள், செம்மஞ்சள், இளச் சிவப்பு, கடும்சிவப்பு என வர்ணங்களின் கலவையோடு எண்ணெய் தேய்த்து மினுக்கியது போன்றதொரு கொள்ளையழகு. மரத்திலிருந்து பறிக்கும்போது ஒரு இதமான நறுமணத்தைக் கொண்டு பார்ப்பவர்களையெல்லாம் ஈர்க்கும் குணாதிசயம் உடையது மாதுளைப்பழம். மாதுளையை மெதுவாகப் பிரித்தால் உள்ளே திறக்கும் இளமஞ்சள் சுவர்கள், சுளைகள் கூடிய பொக்கிஷ அறைகள். இவை ஒவ்வொன்றிலும் மாணிக்கக் கற்கள் போன்று மினுங்கும் சாறினால் போர்த்தப்பட்ட […]
மின்னேசோட்டா பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்
மின்னேசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம் அட்வான்செட் (Advanced) எனப்படும் கல்விக்கான மிக உயரிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மினசோட்டா தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முழு பரிந்துரையை அண்மையில் வழங்கியிருக்கிறது. அட்வான்செட் (www.advanc-ed.org) எனும் இந்நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும் உலகளாவிய நிறுவனம் ஆகும். இதுவரையில் இந்நிறுவனம் உலகம் முழுதும், ஏறக்குறைய 20 மில்லியன் மாணாக்கர் பயிலும், 32,000 கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் […]
ரோசா இதழ் பழப்பாகு (Rose-petal jam)
சின்னச் சின்ன ரோசா, ரோசாவே என் ராசாவே என்றெல்லாம் தமிழகச் சினிமாவில் பலரக நறுமணம் மிக்கச் செடிகளூடு பூங்காக்களில் ஓடியாடும் காதல் பாட்டுக் கேட்டிருக்கிறோம். இந்த அழகிய பூக்களை வாழ்க்கையில் பரிமாறியிருக்கிறோம். அதே சமயம் இந்த இதழ்களை எவ்வாறுதான் பலூடா பானம் தவிர்த்துச் சுவைக்கலாம் என்று சிந்தித்திருப்பீர்களா?. இதோ உங்கள் ஆர்வத்துக்கு ஒரு பழப்பாகு சமையல் குறிப்பு. வேண்டியவை; 8 ounce உடன் மலர்ந்த ரோசா இதழ்கள் (Fresh Petals) 1 மேசைக்கரண்டி எலுமிச்சைப் பழச்சாறு (Lemon […]
வருடாந்திர மாநில பொருட்காட்சி
மினசோட்டா மாநிலம் விவசாயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்த சமூகம். இவ்விடம் கோடைக் கால வருடாந்திர மாநிலப் பெருப் பொருட்காட்சி குழந்தைகளில் இருந்து கொடுக்குப் பல் இல்லாத கொள்ளுத்தாத்தா வரை யாவரும் விரும்பி்ப் போகும் ஒரு திருவிழா. வருடாந்திரப் பொருட்காட்சி 1265 Snelling Ave North நிரந்தரச் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.மினசோட்டா மாநிலச் சந்தை அமெரிக்காவில் நடத்தப்படும் கோடைகாலப் பெருஞ் சந்தைகளில் ஒன்று. இந்த மைதானம் 320 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. வழக்கம் போலப் பஞ்சு மிட்டாய், பல […]
சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்
துர் நாற்றத்தைத் துரத்தியடிப்போம் மேல் நாடுகளில் வாழும் தமிழர் யாவரும் அறிந்த விடயம் சமையல் செய்து சாப்பிடுவதிலும், மற்றவர்களுக்குப் பகிர்வதிலும் நம்மில் பலர் மகிழ்ச்சியடைவர் என்பதே. ஆயினும் முந்தைய நாள் சமைத்தது முக்கால் மைல் வரை துர் நாற்றமாக மணப்பது பல்வித கலாச்சார அயலவர்களோடு அடுத்தடுத்து வாழும் போது தர்ம சங்கடமாகக் கூடிய ஒருவிடயமே. இந்த வாசனையைப் போக்குவதற்காக ஊதுபத்தி பாவிப்பதற்கு நம்மவர் பலர் முனைவர். ஊது பத்தியானது துர்நாற்றத்தை உடன் ஓரளவு குறைக்கலாம், எனினும் […]
உன்னி கிருஷ்ணன் – நேர்காணல்
தேனினும் இனிய பாவம். திரையிசைப் பாடல்களில் முழுவதுமாய் ஊறிப்போய் பாரம்பர்ய சங்கீதத்தின் முழு அம்சங்களும் அவ்வளாக விளங்கிடாத சாதாரண ரசிகரையும் கட்டிப்போடும் வசீகரக் குரல். திரைத்துறையில் நுழைந்தாலேயே பெருமளவு மதிப்புத் தராத சபாக்கள் அனைத்தும் வரிசையில் நின்று தேதி கேட்கும் அளவு திறமையும் புகழும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு சில பாடகர்களில் ஒருவர திரு. உன்னி கிருஷ்ணன். சமீபத்தில் திரு. உன்னிகிருஷ்ணன் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் முகமாக மினியாபோலீஸ் வந்திருந்தார். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் […]
மினசோட்டாவில் இந்தியத் திருவிழா – 2014 (IndiaFest)
மினசோட்டா மாநில இந்தியக் குழுமியம் கோலாகலமாக 2014ஆம் ஆண்டுக்கானபண்டிகையைக் கொண்டாடினார்கள். இந்தக் கொண்டாட்டம் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி சனிக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மினசோட்டா மாநிலத் தலைமையக மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழா மினசோட்டா மாநில ஆளுனர் மதிப்புக்குரிய மார்க் டெய்ட்ன் (Mark Dayton) அவர்களின் அனுசரணையுடன், விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஏறத்தாழ 10,000 மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. வருகை தந்தவர்கட்கு நல்லெண்ணத்தைப் பகிரும் வகையில் […]






