\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

தமிழ்த் திருவிழா 2019

தமிழ்த் திருவிழா 2019

மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளிக்கூடத்தில் கடந்த ஃபிப்ரவரி 23ஆம் தேதி  ‘தமிழ்த் திருவிழா 2019’ நடைபெற்றது. இங்கு பயிலும் குழந்தைகள் வெவ்வேறு தலைப்புகளில் விளக்கப்படங்கள், மாதிரி அமைப்புகள் செய்து, பார்வையாளர்களுக்கு அவை  குறித்த விளக்கமும் அளித்தனர். பழங்காலத் தமிழ்ப் புலவர்கள், புராணங்கள், அரசர்கள், தமிழக நகரங்கள் போன்றவற்றை அறிந்து, அவை குறித்த தகவல்கள், புகைப்படங்களைச் சேகரித்து அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.  மாதிரிப் படங்கள் மற்றும் முப்பரிமாண மாதிரி அமைப்புகள் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அரசர்கள், புலவர்கள் மற்றும் நகரங்களின் […]

Continue Reading »

2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி

2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி,  ஃபிப்ரவரி 23ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் வெஸ்ட் ஜூனியர் பள்ளி வளாகத்தில் இளையோருக்கான பேச்சுப் போட்டியை மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி நடத்தியது. இந்தப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, கொடுக்கப்பட்டிருந்த தலைப்புகளில் அழகாகப் பேசினார்கள். ஒவ்வொரு வருடமும் இதில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அதில் ஆங்கிலக் கலப்பு பெருமளவு குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் இறுதியில் அறிவிக்கப்பட்டனர். கூடவே, இதற்கு […]

Continue Reading »

துணுக்குத் தொகுப்பு

துணுக்குத் தொகுப்பு

ஜப்பான் உலகின் பல நாடுகள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் வேளையில் புதிய தினத்தினை அறிவிக்கும் வகையில் புலர்ந்திடும் கதிரவனை முதலில் கண்டு எதிர்கொள்ளும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அதன் காரணமாகவே மேற்கத்தியர்களால் இந்நாடு ‘உதய சூரியன் நாடு’ (Land of Rising Sun) என்று அழைக்கப்படுகிறது. மற்ற நாடுகளால் ஜப்பான் என்று அறியப்பட்டாலும், ஜப்பானியர்கள் தங்கள் நாட்டை ‘நிப்பான்’ அல்லது ‘நிஹோன்’   என்றே குறிப்பிடுகிறார்கள். சீனர்கள், சூரியன் (‘நிச்சி’ ) பிறக்குமிடம் (‘ஹோன்’ ) என்பதைக் குறிக்க ‘நிஹோன்’ […]

Continue Reading »

காவியக் காதல் – பகுதி 2

காவியக் காதல் – பகுதி 2

பகுதி 1: சோஃபாவில் அயர்ந்து உட்கார்ந்திருந்தான் சித்தார்த். மயங்கி விழுந்த அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து ஹாலில் உட்கார்த்தி வைத்திருந்தாள். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துவந்து குடிக்கச் செய்து, ஆசுவாசப்படுத்தினாள். “ஏன்னா, என்ன ஆச்சு? என்ன பண்றது? தல சுத்தறதா? ஜூஸ் பண்ணித் தரவா?….” பதறிப் போய்விட்டாள் அமுதா.. “நேக்கு ஒண்ணுமில்லடி… ஒரு பெரிய கனவு… எப்டிச் சொல்றதுன்னுகூடப் புரியல… அப்டியே தத்ரூபமா இருந்துதுடி… அந்தக் கனவுல நானே இருந்தேன்… நீ காமிச்சியே அந்த ஆன்க்ளெட் அத……. […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 14

அழகிய ஐரோப்பா – 14

(அழகிய ஐரோப்பா – 13/போகும் வழியில்) வாவ்… டிஸ்னி! டிஸ்னி லேண்டின் நுழை வாசல் மிகவும் அழகிய தோற்றத்தில் எங்களை வரவேற்றது. நுழைவாசலைக் கண்டதுதான் தாமதம் கனவுலகை நிஜமாக கண் முன்னே கண்ட ஆவலில் என் பிள்ளைகள் வாவ்… டிஸ்னி என்று துள்ளிக் குதித்தனர். சந்தோஷம் மிகுந்து கண்களில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்துடன் என் முன்னே வந்து சிரித்தாள் என் மகள். அவளின் கனவுலகம் இன்று அவள் முன்னே பரந்து விரிந்து கிடக்கிறது. அழகிய தேவதைகள் போல் […]

Continue Reading »

சங்கமம் 2019

சங்கமம் 2019

தைப்பொங்கலையொட்டி ஆண்டுதோறும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கொண்டாட்ட நிகழ்வான சங்கமம், இந்தாண்டு செயிண்ட் பால் ஹார்டிங் பள்ளியில் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மினசோட்டாவைச் சேர்ந்த பல்வேறு குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தின் சார்பில் கண்கவர் கிராமிய இசை மற்றும் நடனக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை பதினொரு மணியளவில் நிகழ்ச்சிக்காக மக்கள் குழுமத் தொடங்கினர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் […]

Continue Reading »

நிறம் தீட்டுக

நிறம் தீட்டுக

Continue Reading »

நான் நானில்லை

Filed in கவிதை, வார வெளியீடு by on February 18, 2019 0 Comments
நான் நானில்லை

நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்! வரிக்கிறீர்களே என்னைப்பற்றி அதுவல்ல நான்! வசப்பட்டதில் வசித்துக்கொண்டிருக்கிறேனே அதுவுமல்ல நான்! என் சிறகுகளை பார்த்திருக்க முடியாது நீங்கள். ஏனெனில் அவை முழுமையாய் விரிக்கப்பட விடவேயில்லை! ஒருவேளை கட்டுக்களை விடுவித்து என் சிறகுகளை விரித்திருந்தால் நான் யாரென பாதியாவது தெரிந்திருக்கும்! நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்! – ருக்மணி

Continue Reading »

வாட்ஸ்அப் தசாப்தம்

வாட்ஸ்அப் தசாப்தம்

வாட்ஸ்அப் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. யாஹு நிறுவனத்தில் இருந்து விலகிய ப்ரையனும், ஜேனும் 2019 ஜனவரியில் ஆப்பிள் ஆப்ஸ்டோரில் மெசெஜிங் செயலிக்கு இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, வாட்ஸ்அப் கொண்டு வந்தனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு ஃபிப்ரவரியில், சரியாகச் சொல்வதென்றால் 2009 பிப்ரவரி 24ஆம் தேதியன்று கலிஃபோர்னியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் அவர்களது செயலி ரொம்பவே மக்கர் செய்தது. அடிக்கடி நின்று போகும். இருந்தாலும், இடைவிடாமல் முயன்று அதை […]

Continue Reading »

துணுக்குத் தொகுப்பு

துணுக்குத் தொகுப்பு

வட, தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய  ‘ஹம்மிங் பேர்ட்’ எனும் ரீங்காரச் சிட்டு, பளபளக்கும், வண்ணச், சிறகுகளுடைய சிறிய பறவை. நொடிக்கு ஏறத்தாழ 80 முறை சிறகை அடிக்கும் திறனைப் பெற்ற இந்த அபூர்வப் பறவை, சிறகடிக்கும்பொழுது ஏற்படுத்தும் விர்ரென்ற ரீங்கார (ஹம்மிங்) ஒலியால் இப்பெயர் பெற்றது. இப்பறவையின் மெல்லிய கீச்சொலியைக் கேட்பது மிகவும் அரிது. ஒசனிச் சிட்டு, ஞிமிர்சிட்டு, முரல் சிட்டு என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் பறவையின் அறிவியல் பெயர் ‘Trochilidae’. […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad