\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சொற்சதுக்கம் 9

கீழே கட்டத்துக்குள் இருக்கும்  பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!

தி த்
ர் ந்
ம் ங்
ட் சு
  1.     தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் இரு _____ _____ _____ கூப்பி வாக்கு சேகரிப்பார்கள்
  2.                அரச குடும்பத்தினர் போருக்கும் பிற இடங்களுக்கும் செல்லப் பயன்படுத்திய குதிரைகள் பூட்டிய வாகனம் _____ _____ _____
  3.                வானரங்கள் கனி கொடுத்து _____ _____ _____ எனப்படும் பெண் குரங்குகளைக் கொஞ்சுவதாக குற்றாலக் குறவஞ்சியில் பாடல் உண்டு.
  4.     ஒரு காலத்தில் அவசரத் தகவல் பரிமாற்றத்துக்காகப் பயன்பட்ட 163 ஆண்டு கால  _____ _____ _____ சேவையை இந்திய அஞ்சலகத்துறை 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தோடு நிறுத்திவிட்டது.
  5.     அவலமான விஷயம் என்பதைக் குறிப்பிட  “_____ _____ _____ சிரித்துவிட்டது” என்று சொல்வதுண்டு.
  6.     ஒளி என்பதைக் குறிப்பிடும் மூன்றெழுத்துச் சொல். பாரதியார் தனது பாடல் ஒன்றில் “சுட்டும் விழிச் _____ _____ _____” என்று பாடியுள்ளார்.
  7.     சூரியன் தரும் ஒளியை இப்படிச் சொல்வார்கள். கைபேசியிலிருந்து வெளியாகும் _____ _____ _____ வீச்சு உடலுக்குத் தீங்கு விளைவிக்குமாம்.
  8.     _____ _____ _____ என்பது ஒருவகையான நாட்டியம். அழகு, பெருமை என்பதைக் குறிப்பிடவும் இச்சொல் பயன்படுகிறது.
  9.     கடவுள் தனது பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்ற _____ _____ _____ வழங்குவதாக நம்பப்படுகிறது.
  10.   கையால் நூற்ற நூலிழைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் துணிவகை. கக்கன், காமராஜ் போன்ற தலைவர்கள் பலர் ஆங்கிலேயரின் பொருளாதாரத்தை வீழ்த்தும் வகை _____ _____ _____ ஆடைகள் மட்டுமே அணிந்து வந்தனர்.
  11.   எல்லையைப் பாதுகாக்க _____ _____ _____ கட்டவேண்டும் என்பதைத் தனது குறிக்கோளாகக் கொண்டு வலியுறுத்திவருகிறார் அமெரிக்க அதிபர்.
  12.   யுத்தம், போர் எனும் பொருள் தரும் மூன்றெழுத்துச் சொல் _____ _____ _____.
  13.   _____ _____ _____ என்பது பொன், செல்வம் என்பதைக் குறிக்கும்.
  14.   காடு, கானகம் என்பதற்கு மறுசொல் _____ _____ _____.
  15.   அக்கால முனிவர், ஆன்மிக நாட்டத்தால் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தத் தன்னந்தனியே காடுகளில் _____ _____ _____ மேற்கொள்வர்.
  16.   ஆபரணங்கள் செய்ய உதவும் இந்த உலோகத்துக்கு காஞ்சனம், சொர்ணம் எனப் பலபெயர்கள் உண்டு. _____ _____ _____ _____.
  17.   இறக்குமதி, ஏற்றுமதிகளுக்கு செலுத்தப்படும் வரி _____ _____ _____ _____. இவ்வரியினை வசூலிக்கத் தனியாக அரசுத்துறையே உள்ளது.
  18.   தமிழை வளர்க்கும் பொருட்டு அரசர்கள், புலவர்கள் உண்டாக்கிய ஒரு கூட்டமைப்பு _____ _____ _____ _____
  19.   இந்தியாவில், கிழக்குப் பகுதி என்று ஒன்று இல்லாதபோதும் மேற்கு _____ _____ _____ _____ என்று ஒரு மாநிலப் பகுதி உள்ளது. இச்சொல்லுக்குப் படகு போன்று கடலில் பயணிக்கக்கூடிய நாவாய் என்ற விளக்கமும் உண்டு.
  20.   பன்னிரெண்டு ராசிகளில் ஒன்றான இதற்கு நண்டு தான் சின்னம் _____ _____ _____ _____
  21.   ஒரு விஷயத்தைச் செயலாக்கும் முன் அதன் வழிமுறைகளைச் சிந்திப்பதை _____ _____ _____ _____ தீட்டுதல் என்பர்.
  22.   _____ _____ _____ _____ என்பது 360 டிகிரிகள் கொண்ட, பக்கங்கள் இல்லாத ஒரு வடிவம். ஆளுமைக்காக பிரிக்கப்படும் நிலப்பகுதி ஒன்றும் இதே பெயரில் வழங்கப்படுகிறது.
  23.   நாற்கோணம் எனும் நான்கு பக்கங்களைக் கொண்ட வடிவம் _____ _____ _____ _____
  24.   உண்மையா பொய்யா என ஆராயப்படாமல் பரபரப்பாகப் பரவும் தகவல் _____ _____ _____ _____
  25.   கவனத்தைக் கவரும் உரையாடலை  _____ _____ _____ _____ என்பார்கள். இன்றும் இச்சொல்லுக்கு பராசக்தி திரைப்படத்தைத் தான் உதாரணமாகச் சொல்வார்கள்.
  26.   இறந்தவரின் உடலை எரிக்கும் முறையை _____ _____ _____ _____ என்பார்கள்.
  27.   முகத்தை இப்படியும் சொல்லலாம் _____ _____ _____ _____ எம்.கே. தியாகராஜர் ஒரு திரைப்படத்தில் ‘சந்திர பிம்பமோ’ என்று வியந்து பாடியது மிகப்பிரபலம்.
  28.   ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் இறந்த மாதத்தில். அதே திதியில் நடத்தப்படும் சடங்கு _____ _____ _____ _____ எனப்படுகிறது.
  29.   போருக்குச் செல்லும் போது பாதுகாப்புக்காக உடல் முழுதும் _____ _____ _____ _____ அணிவர். இன்று இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலையைப் பாதுகாக்கவும் இதை அணியச் சொல்கிறார்கள்.
  30.   ஒரு செயல், நடவடிக்கை இயல்பான வேகத்துடன் நடைபெறாமல் மெதுவாக நடைபெறுவதை _____ _____ _____ _____ ஆகி விட்டது என்பார்கள்.
  31.   யானையின் பல் _____ _____ _____ _____. பொதுவாக ஆண் யானைகளுக்கு மட்டுமே இவை காணப்படுகின்றன.
  32.   கவிதைகளில் காணப்படும் இசைநயம் _____ _____ _____ _____
  33.   மனிதர் உடலிலுள்ள நரம்புப் புள்ளிகளை _____ _____ _____ _____ என்பார்கள். இந்த நரம்புப் புள்ளிகளைக் கொண்டு உடல் குறைபாடுகளைச் சீர்படுத்தவும் முடியும், சீரழிக்கவும் முடியும்.   
  34.   இரண்டு நபர்களிடையே வியாபாரம், ஒப்பந்தம் போன்ற விவகாரங்களைச் சுலபமாக சிக்கலின்றித் தீர்த்து வைப்பவர் _____ _____ _____ _____
  35.   அனைத்தும், மொத்தம், முழுதும் என்பதைக் குறிக்க உதவும் சொல் _____ _____ _____ _____
  36.   ஆட்டின் தலையையும், மீனின் உடலையும் கொண்ட ஒரு கடல்வாழ் உயிரனமாக உருவகிக்கப்பட்டு 12 ராசிகள் ஒன்றின் அடையாளமாக விளங்கும் விலங்கு _____ _____ _____ _____
  37.   ஒரு பொருளின் நிலை திண்மம், வாயு அல்லது _____ _____ _____ _____ ஆகிய ஒன்றில் அடங்கும்.
  38.   பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் தங்கம் மற்றும் கனிமங்களைத் தோண்டியெடுக்கும் இடம் _____ _____ _____ _____ _____.
  39.   ஒரு காரியத்தைச் சாதிக்கப் பின்பற்றப்படும் சாமர்த்தியமான வழிமுறை _____ _____ _____ _____ _____ எனப்படும்.
  40.   இறைவனிடம், சில அனுகூலங்கள், ஆற்றலைப் பெற மனிதன் உச்சரிக்கும் சில சூத்திரம் மற்றும் உச்சாடனம் போன்றவை _____ _____ _____ _____ _____ என்றழைக்கப்படுகிறது;
  41.   அக்காலங்களில் நடந்து செல்லும் வழிப்போக்கர்கள் தங்கி ஓய்வெடுத்துச் செல்லக் கட்டப்பட்ட தங்குமிடம் _____ _____ _____ _____ _____.
  42.   மரத்திலிருந்து கிடைக்கும் சூட்டைத் தணிக்கும் குணமுடைய, நறுமணம் மிக்க ஒரு பொருள். _____ _____ _____ _____ _____.
  43.   மஞ்சள் நிறத் தனிமப் பொருள்; அமிலமாகவும் காணப்படும் இதனைப் புகை உண்டாக்கவும்,  துப்பாக்கி வெடிகுண்டுகளிலும் சேர்க்கிறார்கள் _____ _____ _____ _____ _____.
  44.   குளிர்காலத்திற்கும், கோடை காலத்திற்கும் இடையில் வரக்கூடிய இளவேனிற்காலம் _____ _____ _____ _____ _____
  45.   _____ _____ _____ _____ _____ என்பது பச்சை நிற நவரத்தினம்.
  46.   முடிவெடுக்க முடியாமல் மனதில் ஏற்படும் நெருடல் அல்லது இக்கட்டான சூழலை _____ _____ _____ _____ _____ என்பார்கள். ‘தர்ம’ முன்னொட்டைச் சேர்த்தால் கூடுதல் நெருடல் என்று பொருள்.
  47.   _____ _____ _____ _____ _____ என்னும் சொல்லுக்கு ஒன்று சேர்தல் அல்லது கூடுமிடம் என்று பொருள். பொதுவாக நதிகள் கடலோடு சேருமிடத்தைக் குறிப்பிட இச்சொல்லை பயன்படுத்துவார்கள்.
  48.   சுகமான பரவச நிலையைத் தரும் நறுமணத்தை _____ _____ _____ _____ _____ என்பார்கள்.
  49.   விடுதலை என்பதன் மாற்றுச்சொல் _____ _____ _____ _____ _____ _____
  50.   தாவரங்களில், குறிப்பாக மலர்களில் இருக்கும் மலர்த்தாது அல்லது ஆண் பாலணுக்கள் _____ _____ _____ _____ _____ _____ எனப்படும். பட்டாம் பூச்சி, தேனீ, பறவைகள் மூலம் இவை பெண் பாலணுக்களுடன் சேர்க்கப்படுகின்றன.

விடைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad