வார வெளியீடு
மினசோட்டா பன்னாட்டு கலாச்சார திருவிழா
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம், பன்முகத்தன்மை கொண்ட கலை மற்றும் கலாச்சாரங்களின் மையமாகத் திகழ்கிறது. அந்தப் பெருமையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில், மினசோட்டாவின் புகழ்பெற்ற ‘சர்வதேச கலாச்சாரத் திருவிழா’ (International Festival of Minnesota – IFest-MN) சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, புதிய பொலிவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செயின்ட் பால் நகரின் ‘ரிவர்சென்டர்’ (Saint Paul RiverCentre) […]
மினசோட்டா யூனிவர்சிட்டியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
மினசோட்டா பல்கலைக்கழகத்தில் (University of Minnesota) பயிலும் தமிழ் மாணவர்கள், “தமிழ் ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன்” (Tamil Students Organization) எனும் அமைப்பின் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதியன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ‘காஃப்மேன் மெமோரியல் யூனியன் கிரேட் ஹால்’ (Coffman Memorial Union Great Hall) அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு […]
நீலக்கடலும் மாயன் நாகரிகமும்
அமெரிக்காவிற்கு அருகிலேயே இருந்தும் ஒரு புதிய தேசத்திற்குச் சென்ற உணர்வைத் தரும் மெக்சிகோவின் கான்கன் (Cancun) நகரம், ஒவ்வொரு பயணப் பிரியரின் பட்டியலிலும் இருக்க வேண்டிய இடம். சமீபத்தில் எனது மகளின் ‘I-94’ ஆவணத்தைப் புதுப்பிப்பதற்காக ஒரு பயணத்தைத் திட்டமிட்டோம். ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம், ஆவணங்களுக்கான கடமையைச் செய்து முடித்ததுடன், ஒரு அற்புதமான குடும்பச் சுற்றுலாவாகவும் அமைந்தது. அமெரிக்காவில் H1-B அல்லது H4 போன்ற விசாக்களில் இருப்பவர்கள் மெக்சிகோ செல்வதற்குத் தனியாக மெக்சிகன் விசா […]
நாட்டிய நிகழ்வு!!
தரங்கிணி நாட்டிய பள்ளியின் முக்கிய நிகழ்வாக நிதி திரட்டுதல் (Fundraising) ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதன் நோக்கம் உயரியது . இதில் பங்கு கொள்வதும், நம்மால் இயன்ற சிறிய தொகையை வழங்குவதும், கடலில், சிறு துளியாய் நாமும் கலப்பது போன்றே! ஓக் பாயிண்ட் தொடக்கப்பள்ளியில் (Oak Point PTO) உள்ள பெற்றோர் ஆசிரியர் அமைப்பிற்கு ஆதரவளித்து அவர்களை கைத்தூக்கி விடும் ஒரு சிறு முயற்சியே! பெற்றோர் ஆசிரியர் அமைப்பின் மாநாடுகள் அல்லது கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம், கல்வியாண்டு […]
அமெரிக்காவில் தலையெடுக்கும் ‘புனிதப் போர்’
நவீன அமெரிக்க அரசியல் இன்று ஒரு வினோதமான திருப்பத்தில் வந்து நிற்கிறது. தனிமனித நம்பிக்கையாக இருக்க வேண்டிய மதம், அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளையும், போர் முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறி வருவதைப் பார்க்க முடிகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான தற்போதைய ஆட்சியில், ‘கிரிஸ்துவ தேசியவாதம்’ (Christian Nationalism) என்ற சித்தாந்தம் வலுப்பெறுவதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். கூடவே இந்த சித்தாந்த நகர்வு உள்நாட்டு அரசியல் கருவியாக மட்டுமல்லாமல், ஒரு சர்வதேச ஆயுதமாகவும் பரிணமித்து வருவது […]
உங்கள் தொழில் வாழ்க்கை என்பது உங்கள் வாழ்க்கையின் எட்டில் ஒரு பங்கு மட்டுமே
பொருளாதாரம், உளவியல் மற்றும் சிறிதளவு இருப்பியல் கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஐந்து தொழில் ஆலோசனைகள். தொழில் ஆலோசனை என்ற வகையிலேயே அது சரிசெய்ய முடியாத அளவுக்குக் குறைபாடுடையது. நூற்றுக்கணக்கான தொழில்துறைகளில், ஆயிரக்கணக்கான பணிகளில் 16 கோடி அமெரிக்கப் பணியாளர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் எதையாவது சொல்வது நடைமுறையில் சாத்தியமற்றது. மிகவும் பொதுவான அறிவுரைகள் பெரும்பாலும் பரவலாகப் பொருந்தாத அளவுக்கு மிகவும் தனிப்பட்டவையாகவே இருக்கின்றன. வெற்றிகரமான மனிதர்கள், “நான் செய்த இந்த மூன்று […]
யுத்த இருளில் தடுமாறும் உலகப் பொருளாதாரம்
ஈரான் மீதான ராணுவத் தாக்குதலில் முதல் வெடிகுண்டின் எதிரொலி ஓய்வதற்கு முன்பே, அதன் பொருளாதார அதிர்வலைகள் உலகெங்கும் உள்ள சாமானிய மக்களின் வீடுகளைச் சென்றடைந்துவிட்டன. நவீன உலகம் எவ்வளவுதான் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்தாலும், ஒரு சிறிய பிராந்தியப் போர் ஒட்டுமொத்த உலகத்தையும் எப்படி முடக்க முடியும் என்பதற்கு 2026-ன் இந்தப் போரே சாட்சி. அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கை என அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) தாக்குதல், […]
அமெரிக்க பரிசோதனையின் 250 ஆண்டுகள்
1796 ஆம் ஆண்டில், தனது ஜனாதிபதி பதவிக் காலம் முடியும் மாதங்களில், ஜார்ஜ் வாஷிங்டன் பென்சில்வேனியாவின் ஜெர்மன்டவுனுக்குச் சென்று, கலைஞர் கில்பர்ட் ஸ்டூவர்ட்டின் உருவப்படத்தைப் பார்க்கச் சென்றார். ஸ்டூவர்ட் இதற்கு முன்பு ஜனாதிபதியை வரைந்திருந்தார், இதன் விளைவாக மார்த்தா வாஷிங்டன் மிகவும் ஈர்க்கப்பட்டார், இறுதியில் முடிக்கப்பட்ட படைப்பை சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்ற நிபந்தனையின் பேரில், தனது கணவரை மீண்டும் அவருக்காக போஸ் கொடுக்கும்படி வற்புறுத்தினார். ஸ்டூவர்ட் தனது வாக்குறுதியை ஒருபோதும் நிறைவேற்றவில்லை: உருவப்படத்தின் நகல்களை விற்று […]
21 நூற்றாண்டில் கண்ணுக்குத் தெரியாத மிரட்டல்
கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் ஒலித்த ஒரே குரல் “மக்கள்தொகை வெடிப்பு” (Population Explosion). “இப்படியே போனால் பூமி தாங்காது, உண்ண உணவிருக்காது” என்று அஞ்சினோம். இக்காலக்கட்டத்தில் உலக நாடுகள் பலவும் மிகக் கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொண்டன. இந்தியாவில் 1970-களின் இறுதியில் சிறிய குடும்பத்தை ஊக்குவிக்க “Hum Do, Hamare Do” (நாம் இருவர் நமக்கு இருவர்) போன்ற பிரச்சாரங்கள் தொடங்கின. 1980-களின் மத்தியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் அப்போதைய ஆந்திரப் பிரதேச […]
நுண்ணியல் படைப்பாற்றல் கொண்டதா?
படைப்பாற்றல் என்பது வற்றாத ஊற்று அல்ல; அது அனுபவங்கள், சுய தேடல் மற்றும் தொடர் வாசிப்பு மூலம் புத்துயிர் பெற வேண்டிய ஒரு கலை என்று பாரதிதாசன், ஜெயமோகன் போன்ற ஆளுமைகளும், ஈழத்து இலக்கியத்தின் முன்னோடியான செங்கை ஆழியானும் வழிமொழிந்துள்ளனர். ஒரு எழுத்தாளன் ‘படைப்புத் தடை’யை எதிர்கொள்ளும் போது, இன்றைய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அவருக்கு ஒரு உந்துசக்தியாக மாற முடியுமா? ‘பெரிய மொழி மாதிரிகள்‘ (LLMs) இலக்கியத் திறன் மற்றும் கவிதை வெளிப்பாட்டுத் தன்மையை […]






