காந்தி ஜெயந்தி நினைவூட்டல்
பன்முறை படித்துக்கூறினாய் 
வன்முறை வழி ஆகாதென்று 
உன்னுயிர் போனது 
வன்முறை பேயதானால் 
முதன்முறை மானுடம் மறைந்தது
உன்னுயிரை பறித்தெடுத்து
பல்லுயிர் பறித்துக்கொண்டு 
இன்னுமேன் ரத்தவெறி இந்த 
இனவெறி ஜாதிவெறி மதவெறி 
கொண்ட நெறியர்கள் போர்வையில் 
வெறியர்களுக்கு
மற்றவெறிகளை பின்னுக்குத்தள்ளி 
மதவெறிதனை முன்னிறுத்தும் 
ரத்தவெறி காட்டேரிகள் உன்வழி
உன் பாதை பயணிக்கும் நாள்தனை 
எதிர்பார்த்து ஏங்குகிறோம்
காந்தி எனும் சரித்திரசகாப்தம் 
என்றும் எம் நினைவில் ஏந்தி 
காந்தி கண்ட சாம்ராஜ்யம் 
என்று வருமென மனம் ஏங்கி 
காந்தி ஜெயந்தி நினைவூட்டல்!
-வெ. மீனாட்சி சுந்தரம்
Tags: Gandhi Jayanthi, காந்தி ஜெயந்தி







	