\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மாடர்ன் மதர் !

Filed in கதை, வார வெளியீடு by on May 14, 2019 1 Comment

ங்கிய விளக்கொளி…. சிறியதான மேடை… அந்த மேடையின்மேல் இரண்டு மூன்று சிறிய இரும்புக் கம்பங்கள் பொருத்தப் பட்டிருந்தன. மேடையைச் சுற்றி நிறைய நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. அவற்றில் சில ஆண்கள் அமர்ந்திருந்தனர். மேடையிலிருந்து சில அடிகளில் தொடங்கி, அந்த அரங்கம் முழுவதும் பல டேபிள்களும், சேர்களும் அமைக்கப்பட்டு அவற்றில் பெரும்பாலானவற்றில் மனிதர்கள் அமர்ந்திருந்தனர். தொண்ணுத்தி ஒன்பது சதவிகிதம் ஆண்களும், ஒன்றிரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர்.

பல வெய்ட்டர்களும், சர்வர்களும் சுற்றிச் சுற்றி வந்து அனைவரையும் ‘கவனித்துக்’ கொண்டிருக்க, சாராயக் கடலே அங்கே ஓடிக் கொண்டிருந்தது எனலாம். ‘பாவங்களின் நகரம்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த நகரத்தில் மட்டும், பல விதி விலக்குகள். அவற்றில் ஒன்று, எங்கு வேண்டுமானாலும் சிகரெட் பிடிக்கலாமென்பதும். போடப்பட்டிருந்த டேபிள் நாற்காலிகள் ஒன்றில், மூலையில் ஒருவனாய் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டே மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தான் வெங்கட்.

கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்களுக்குப் பிறகு ஒன்று கூடியிருந்தனர். ஏழெட்டு நண்பர்கள் சேர்ந்துதான் இங்கு வந்திருந்தனர். ஆனாலும், இந்த இடத்தில் மட்டும், வெவ்வேறு டேபிள்களில் அமர்வதுதான் மேனர்ஸ் என்ற காரணத்தால் தனித்தனியே அமர்ந்திருந்தனர். காரில் வரும்பொழுது அவரவர்களின் வக்ர ஆசைகளை, நண்பர்கள் என்ற காரணத்தால், வெட்கமில்லாது பகிர்ந்து கொண்டிருந்தனர். வெங்கட்டின் முறை வந்தபொழுது அவன் சொன்னது, ‘மச்சி, திங்க் அபட் அன் இண்டியன் வுமன் கோயிங்க் அப் த ஸ்டேஜ்?’ அவ்வளவு எளிதாக நடக்காத செயலாக இருந்ததால் ஆண்களுக்கு அது ஒரு ‘டேபூ’.

தொடர்ந்து புகை விட்டுக் கொண்டே மேடையைக் கண்களாலும், மியூஸிக்கைக் காதுகளாலும் விழுங்கிக் கொண்டிருந்த வெங்கட், அடுத்ததாக மேடையேறிய பதுமையைப் பார்த்ததும் அதிர்ச்சியால் வாய் பிளக்கத் தொடங்கினான். கரிய கூந்தலுடன், எலுமிச்சை நிறமாய், உடற்பயிற்சி ஏதுமில்லாவிட்டாலும் வளைவுகளால் ஆண்களின் அஸ்திவாரம் அசைக்கும் இந்திய அழகு அது. மங்கிய விளக்கொளியிலும் அவளின் நேஷனாலிட்டியைத் துல்லியமாய்க் கண்டுபிடித்த வெங்கட்டின் முதுகுத் தண்டு தொடங்கி உச்சந்தலை வரை ஒரு எக்ஸைட்மெண்ட் சிலிர்த்தேறியது. உடனே பாதிகூட பிடித்து முடித்திராத சிகரெட்டை அணைத்து விட்டு, பர்ஸிலிருந்து டாலர் பில்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, மேடையினருகே இருந்த சேரில் சென்று அமர்ந்து கொண்டான்.

சுழன்று சுழன்று கதகதப்பேற்றிக் கொண்டிருந்த நங்கை, டாலர் பில்களை வெளியில் எடுத்து வைத்த ஒவ்வொருவரின் அருகிலும் சென்று சொர்க்கத்தின் கதவுகளைச் சற்றே அருகாமையில் காட்டிவிட்டு நகர்ந்து சென்றாள். ஆண்மையின் உந்துதலைச் சமாளிக்க முடியாதவனாகிய வெங்கட், நான்கைந்து ஒரு டாலர் பில்களை வெளியில் எடுத்து வைத்து, சொர்க்கத் தூதுப் பெண் அருகில் வருவதற்காகக் காத்திருந்தான். கடந்த சில நிமிடங்களை யுகங்களாக உணர்ந்த அவனின் ஆசைக்கும் விடையளிப்பது போன்று அவனருகில் அமர்ந்து கொண்டாள் அவள். எழுத்தால் விவரிக்க இயலாத நடன அசைவுகளை அவள் காட்ட, அவற்றை ரசித்துக் கொண்டிருந்த வெங்கட் திடீரென அவள் முகம் பார்க்க, அதிர்ச்சியில் உயிர் உரைவதாக உணர்ந்தான். மீண்டும் மீண்டும் பார்த்து உறுதி செய்து கொண்டான்… ஆம், அது பூஜாவேதான்.

டியர், ஒய் டு யூ திங்க் ஐம் நாட் ஃபிட் ஃபார் யூ?” பரந்து விரிந்த கல்லூரி வளாகத்திலிருந்த நூற்றுக் கணக்கான புன்னை மரங்களில் ஒன்றின் அடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் வெங்கட், பூஜாவைப் பார்த்துக் கேட்ட கேள்வி. “வெங்கட், ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட்…. யூ ஆர் அ க்ரேட் கய்… நல்லா படிப்ப, நல்ல புத்திசாலி… பட் வெரி கன்சர்வேட்டிவ்.. நான் அப்டி இல்ல… டிகிரி முடிச்ச உடனேயே அமெரிக்கா போணும்… செல்ஃப் ஸ்பார்ன்ஸர் முடியலன்னா அமெரிக்க மாப்பிள்ளை… இது ஒத்து வராது வெங்கட்… ப்ளீஸ் பி ப்ராக்டிகல்”

ந்த வார்த்தைகளே காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது வெங்கட்டிற்கு இப்போது. பணத்தை மட்டுமே பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அவளுக்கும், ஏதோவொரு உணர்வு ஏற்பட, வெங்கட்டை ஏறெடுத்து முகம் பார்த்தாள். “இஸ் தட் யூ, பூஜா?” கேட்ட வெங்கட்டைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்ட பூஜா, அதிர்ச்சியின் உச்சத்தையே அடைந்தாள். பல வருடங்களாய், பலர் முன்னிலையில், பல கோலங்களில் நின்ற அவள் இந்த ஒரு கணத்தில் உணர்ந்த சங்கோஜத்தை விவரிக்க இயலாது. அடக்க இயலாத வெட்கம் சூழ்ந்து கொள்ள, படக்கென்று இரு கைகளை அரணாக்கி, திரைமறைவிற்கு ஓடத் தொடங்கினாள். பாடல் இன்னும் முழுதாக முடிவடையாத போது ஆடும் பெண் ஓடுவதை அனைவரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஓடும் பூஜாவைப் பின்னிருந்து பார்க்கையில் அவளின் முழு பின்னழகைவிட அவள் அழுவதாகப் பின்புறம் பார்த்ததிலிருந்தே உணர்ந்தான் வெங்கட்.

”ஐம் ப்ரெட்டி ஷ்யூர் இட்ஸ் ஹெர் டா… நான் பூஜான்னதுமே அவ ஓடினதே அதுக்கு ப்ரூஃப்” வேனில் ஹோட்டலுக்குத் திரும்பும் வழியிலெல்லாம் வெங்கட் புலம்பிய ஒரே வரி அதுதான். “டேய்… லீவ் இட் டா… என்ன ப்ராப்ளமோ.. டோண்ட் அனலைஸ் மச்சி..” வெங்கட்டின் கவலையை மறப்பதற்காகக் கரிசனமாய்ப் பேசினான் நண்பன் ஒருவன். முழுவதும் ப்ராக்டிகல் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதற்குக் கவலைப்படாத இன்னொரு நண்பன், “நேத்து அடிச்ச கஞ்சா மச்சி… பாத்தவளெல்லாம் பழைய காதலியாத் தெரியுது.. யூ ரிமெம்பர் ஹவ் ஹி வாஸ் புலம்பிஃபையிங்க்…” சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தான். தொடர்ந்து, “காத்துல பறந்தானே… சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னானே.. ஒரு தலை ராகம் பாடினானே… “ தொடர்ந்து கொண்டே சென்றான், பலத்த சிரிப்புடன். அவன் மட்டுமே சிரித்து மற்றவர்கள் எதுவும் சொல்லாமலிருந்தது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்த, வெங்கட்டிற்கு அதுவே சற்று சமாதனமாக இருந்தது. முதலில் பேசிய நல்லவன், கிண்டல் செய்பவனைத் தடுத்து, வெங்கட்டைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

“ஐம் ஹண்ட்ரெட் பெர்செண்ட் ஷ்யூர்… அது அவளேதாண்டா.. என்ன பர்ஸனாலிட்டி.. எவ்வளவு ஆம்பிஷன்ஸ்.. எவ்வளவு ஸ்மார்ட்டா அவ… ஒய்… ஒய் ஷுட் ஷி டு திஸ்…” வெட்கமில்லாமல் அனைத்துப் பெண்களையும் ரசிக்கும் ஆண்குலம் அதுவே தங்களுக்குத் தெரிந்தவர் என்று வருகையில் படும் கரிசனத்திற்கு அளவே இல்லை. அதாவது, தெரியாதவர்களாக இருந்தால் ரசிப்பதும், தெரிந்தவராக இருந்தால் இந்தத் தொழிலுக்கு ஏன் வந்தார்கள் என்று நினைப்பதுமே ஆண்களின் வழக்கம்.

அன்று இரவு முழுவதும் வெங்கட்டிற்கு உறக்கமே இல்லை. நண்பர்களுடனும் பேசவில்லை. வெகேஷன், கெட் டுகெதர் என அனைத்தும் இரண்டாம் பட்சமாக மாறிவிட, பூஜாவைத் தேடுவதிலேயே குறியாக இருந்தான் வெங்கட். அதே பாருக்குக் காலை நேரத்தில் சென்றான். நேற்று இரவு அவ்வளவு அல்லோகல்லோலப்பட்ட அந்த இடம், மனிதர்கள் யாருமின்றி வெறிச்சோடி இருந்தது. இரண்டு மூன்று வேலையாட்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, மேனேஜர் டேவிட்டை அணுகிப் பேசத் தொடங்கினான் வெங்கட். ”ஐ ஸா ஒன் ஆஃப் மை சைல்ட்ஹுட் ஃப்ரெண்ட்ஸ் யெஸ்டர்டே.. மீட்டிங்க் ஆஃப்டர் அ லாங்க் டைம்..” விளக்கிச் சொல்ல, டேவிட் அனைத்தையும் கேட்டுவிட்டு, “ஐ பிலிவ் ஐ நோ ஹு யூ ஆர் டாக்கிங்க் அபவுட்.. ஹவெவர், ட்யூ டு அவர் ப்ரைவஸி ப்ரொடக்‌ஷன், ஐ காண்ட் டெல் யூ எனி டிடய்ல்ஸ்… ஐ அண்டர்ஸ்டாண்ட் யுவர் சின்ஸியரிடி.. ஐ கேன் டு ஒன் திங்…” என்றவன் தொடர்ந்து, “இஃப் யூ வுட் லீவ் யுவர் நம்பர் வித் மி, ஐ கேன் கிவ் இட் டு ஹெர். இஃப் ஷி இஸ் இண்ட்ரஸ்டட் இன் காண்டாக்டிங்க் யூ, ஷி கேன் கால்.. ஹவ் டஸ் தட் சௌண்ட்?” என்ற டேவிட்டை நன்றியுடன் பார்த்து, “பெர்ஃபெக்ட்” என்றான் வெங்கட்.

நான்கு நாட்கள் உருண்டோடி விட்டன. ரியூனியனுக்கு வந்திருந்த அத்தனை நண்பர்களும் அவரவர் ஊர் திரும்பிவிட்டனர். தானும் ஊருக்குத் திரும்புவதாகப் பொய் சொல்லிவிட்டு, தனது ரிடர்ன் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு அங்கேயே தங்கினான் வெங்கட். பூஜாவைச் சந்தித்து, அவளின் நிலைக்கான காரணம் புரிந்து, அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வது என்ற உறுதியுடன் அங்கேயே தங்கி விட்டான்.

அன்றுடன் எட்டு தினங்கள். அந்த நடன அரங்குக்கு ஒவ்வொரு தினமும் வரலானான். ஒரு மூலையில் அமர்ந்து வந்து போகும் நங்கையரில் ப்ரௌன் ஸ்கின் தேடத் தொடங்கினான். ஒரு சில மங்கையற்கு, “யூ கேம் யெஸ்டர்டே, ரைட்?” என்று கேட்குமளவுக்குப் பரிச்சயமானான். ஆனால் மனதில் மட்டும், அவளைப் பார்க்காமல் செல்வதில்லை என்ற உறுதி. கல்யாணமாகாத ஒண்டிக் கட்டை என்பதால், அவன் ஊர் திரும்பாதது குறித்துக் கேள்வி கேட்க யாருமில்லை. சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள், தனது அலுவலகத்திற்கு ஒரு ஈமெயில் அனுப்பி, தன்னால் எப்பொழுது வருவேனென்று சொல்ல இயலாதென்றும், அவர்களால் காத்திருக்க இயலாதென்றால் வேலையிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அறிவித்திருந்தான். அந்த அளவுக்கு அவளைக் கண்டுபிடித்து, பேசி, அவளுக்கு உதவ வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தான் வெங்கட்.

ஒன்பதாம் நாள், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்திருந்தான். கிட்டத்தட்ட அரைப்பாக்கெட் சிகரெட்டை முடித்திருந்த அவன், இனிமேலும் வரமாட்டாள் என்று நினைத்து எழ எத்தனிக்கையில், மெதுவாய் அவனருகே வந்து அமர்ந்தாள் பூஜா. அணிந்திருந்த உடை அந்த இடத்திற்குப் பொருத்தமானது, ஆனால் இந்திய மங்கைகள் எவரையும் பொது இடத்தில் அப்படிப் பார்ப்பது இயலாது. நிதானமாய் அருகில் வந்தவள், உறுதியாய் அவன் முகம் பார்த்து, “என்ன வேணும் உனக்கு?” என்றாள். அந்தக் கேள்வியே அனைத்தையும் உணர்த்தும் வண்ணம் அமைந்தது.

“ஸோ… யூ ஹேவ் பீன் நோடிஸிங்க் மீ?” என்ற வெங்கட்டை இடை மறித்து, “ஐ அண்டர்ஸ்டேண்ட் வாட் யூ மைட் பி திங்கிங்க்…  பட் நோ…. நோ செண்டிமெண்ட்ஸ்..” என்றாள். “பூஜா… ப்ளீஸ்… ஒய் பூஜா, ஒய்” என்றான். “ஸ்டாப்.. ஐ டோண்ட் நீட் ஸிம்பதி.. ஐ ரெஸ்பெக்ட் அண்ட் எஞ்சாய் வாட் ஐம்… இத்தன வருஷத்துக்கு அப்புறமா வந்து, டோண்ட் ட்ரை டு மேக் மீ ஃபீல் கில்டி…” உறுதியான பதில்.

”இல்ல பூஜா… நான் உன்ன எவ்வளவு நேசிச்சேன்னு உனக்குத் தெரியும்…. சொன்னா நம்ப மாட்ட, அந்த லவ்ல கொஞ்சம் கூட இன்னமும் குறையல.. இப்பக்கூட அப்டியேதான் இருக்கு” என்றவனைத் தீர்க்கமாகப் பார்த்து, “இப்பக்கூடன்னா?” என்றாள். சற்றுத் திணறி, “இல்ல, இத்தன வருஷத்துக்கு அப்புறமும்…” பூஜா அவன் கண்களில் கண் பதித்து, “இந்தத் தொழில நான் செய்றேன்னு தெரிஞ்சதுக்கப்புறமும், ரைட்?” என்றாள். “நோ நோ, நான் அப்டிச் சொல்லல”….

”பின்ன, எப்படி? இந்த மாதிரி இடத்துக்கு வந்து இந்த மாதிரிப் பொண்ணுங்கள எஞ்சாய் பண்றது ஆம்பளங்களுக்கு ஒகே.. ஆனா, இந்த மாதிரிப் பொண்ண இப்பவும் நேசிக்கிறது பெரிய தியாகம், ரைட்?” என்றாள்.

வெங்கட்டிற்கு நிஜமாகவே என்ன சொல்வதென்று புரியவில்லை. அவளின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது, அவன் பக்குவப்பட்டவனாக இருப்பதால். என்ன சொல்வதென்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவளே தொடர்ந்தாள்.

“சாரி, உன் மேலே நான் ஆத்திரப்படுறது சரியில்லை… ஐ ஹேவ் பிகம் அவெர்ஸ்ட் ஆஃப் மென்… உனக்குத் தெரியுமில்லயா, நான் படிக்கும்போது அமெரிக்கா போணுங்கற வெறியில இருந்தேன்னு… அப்பா அம்மா பாத்த மாப்பிள்ளைதான். அமெரிக்காவில இருக்கார்னு… இருக்கார் என்ன இருக்கான்னு.. ஒரே காரணத்துக்காகக் கேள்வி கேட்காம கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. படிப்பையும் பாதியில விட்டுட்டு இங்க வந்துட்டேன்.. பல பேருக்கு, ஏன் உனக்கே கூட நான் சென்னைக்கு மாறி வந்து படிக்கிறேன்னு சொல்லிட்டுத்தான் வந்துருந்தேன்…” சொல்லத் தொடங்குகையில், விழியோரம் சற்று நீர் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. அந்தத் தொழிலுக்கே உரித்தான நளினத்தோடு, நீளமான அழகான நகமிருக்கும் கட்டை விரலை மட்டும் வைத்து கண்ணீர் கீழிறங்கி மேக்கப்பைக் கலைக்கும் முன்னர் துடைத்துக் கொண்டாள்.

“எனிவே…. வித்தின் ஃப்யூ மந்த்ஸ் ஆஃப் யு.எஸ் லைஃப், ஹி ஸ்டார்ட்டட் ஹேட்டிங்க் மீ…. யூ நோ ஒய்… ஐ குட்ண்ட் பீ வாட் ஹி எக்ஸ்பெக்டட் ஆஃப் அ வுமன்… கன்ஸர்வேட்டிவ் மீ வாஸ் இம்பாஸிபிள் ஃபார் ஹிம்… இன்ஃபிடாலிட்டி ஸ்டார்ட்டட்… இட் கண்டின்யூட் ஈவன் வென் ஐ வாஸ் ப்ரெக்னண்ட்… ஒன்ஸ் ஹி கேம் டு நோ ஐ நியூ, ரொம்ப வெளிப்படையாவே கண்டினியூ ஆச்சு.. ஜஸ்ட் காண்ட் எக்ஸ்ப்ளெய்ன்.. ஜஸ்ட் குட்ண்ட் டேக் இட்… ஐ லெஃப்ட் ஹிம் வித் அ டு மந்த்ஸ் ஓல்ட் சைல்ட்…”

வெங்கட் மெதுவாக அவளின் கரம் பற்றி, சற்றே அழுத்தினான். அவன் இதயத்தில் ஏற்பட்ட வலி அவனாலேயே வெளிப்படுத்த இயலாது. கண்ணீர் ஆண்களுக்குப் பெரும்பாலான நேரங்களில் துணை வருவதில்லை.

“வீ காட் டிவோர்ஸ்ட் லீகலி… ஐ ரோட் அ காண்ட்ராக்ட் டு ஃபோர்கோ ஆல் தெ அலிமொனி மணி…..” என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தான் வெங்கட். “என்னை மதிக்காதவனோட பணம் எனக்குத் தேவையில்லனு முடிவு பண்ணினேன். கடவுள் எனக்குக் கொஞ்சம் அழகையும், ஆம்பளங்களுக்கு நிறைய சபலத்தையும் கொடுத்தது, ஐம் ஏபிள் டு ரன் த ஃபேமிலி ராதர் குட்….. கோர்ட் அலிமொனி மணி வாங்கிக்கச் சொல்லி எவ்வளவோ அட்வைஸ் பண்ணியும் ஐ வாஸ் க்ளியர். கோர்ட்கிட்ட நான் கேட்டுக்கிட்டதெல்லாம் அவனோட நிழல்கூட என் அபூர்வா மேல விழக்கூடாதுங்குறதுதான்…..”

அந்தப் பெயரைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது வெங்கட்டிற்கு. பூஜாவை ஒருதலையாய்க் காதலித்த கணங்களிலெல்லாம், நமக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும், அதற்கு அபூர்வா என்று பெயர் வைக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு. கிடைத்த ஓரிரண்டு சந்தர்ப்பங்களில் அவளிடம் அதனைப் பகிர்ந்து கொண்டுள்ளான். அந்த நாட்களிலெல்லாம் அவனை ஒரு பொருட்டாகவே அவள் மதித்ததில்லை…. ஆனால் அவன் சொன்ன பெயரையே தனது சொந்த மகளுக்கு வைத்திருந்தாள் என்றால்?

பூஜாவே தொடர்ந்தாள்; “யெஸ்… இட் வாஸ் யுவர் டிஸயர்… நீ வைக்கணும்னு நெனச்ச பேரு… ஆனா, அதுனால உன்ன நான் மனசுல காதலிச்சேன்னு தப்புக் கணக்குப் போட்டுடாத… நான் உன்ன எவ்வளவு உதாசீனப்படுத்தி இருக்கேன்? அதுக்கு, கடவுள் தந்த படிப்பினைதான் என் எக்ஸ் ஹஸ்பண்ட் என்ன உதாசீனப்படுத்தினதுன்னு நிறைய முறை நினைச்சுருக்கேன்…. அந்த கனெக்‌ஷன்ல வச்ச பேரு அவ்வளவுதான்….”

”பூஜா…. நான் ஒண்ணு சொல்லட்டுமா?” வெங்கட்.

“வேண்டாம் வெங்கட்… ஐ ஹேவ் அ ப்ரெட்டி குட் கெஸ்…” பூஜா.

“ப்ளீஸ் பூஜா… எங்கூட வந்துடு… யூ, அபூர்வா அண்ட் மீ…. சந்தோஷமா குடும்பம் நடத்தலாம். அபூர்வா என் மக…” என்ற வெங்கட்டை இடைமறித்து, “மை ஃபேமிலி இஸ் ஒன்லி அபூர்வா அண்ட் மீ… நான் என்ன வேலை பாத்தாலும், ஐ ஹேவ் பீன் அ குட் மதர் டு ஹெர்” என்று சொல்லி, சற்றே பெருமூச்சு விட்டுவிட்டு, “ஐ டோட்டலி எக்ஸ்பெக்டட் திஸ் ஃப்ரம் யூ… ஐ ரிக்வயர்ட் டைம் டு ப்ரிபேர் மைஸெல்ஃப்… நீ இதைத்தான் சொல்லுவேன்னு எதிர்பார்த்து, நானே என்ன தயார்ப்படுத்திக்கத் தான் ஒம்போது நாள் உன்ன இங்க தினமும் பாத்தும் அவாய்ட் பண்ணினேன்… நீயும் விடுறதா இல்ல” பூஜாவின் பேச்சைக் கேட்க, சற்று புருவம் உயர்த்தி, அவளின் ’யெஸ்’க்காகக் காத்திருந்தான் வெங்கட்.

“சாரி வெங்கட்.. இட்ஸ் அ வெரி க்ளியர் நோ ஃப்ரம் மீ… ஆம்பளங்க மேல எனக்கு இருக்குற ஒப்பினியனெல்லாம் வெறும் ஆர்ட்டிஃபிஷியல் ஸ்மைல் அண்ட் ஜஸ்ட் கோயிங்க் அபவுட் மை பிஸினஸ் டு மேக் மணி… பட்… மை பிஸினஸ் ஸ்டாப்ஸ் வித் ஜஸ்ட் திஸ் ப்ளேஸ்… ஐ ஹேவ் அ வெரி க்ளியர் லைன்… பிலிவ் மீ.. நானும் கண்ணகிதான்… “ சொல்லிவிட்டு வெறுமையாய்ச் சிரித்தாள்.

”பூஜாம்மா… எதுக்கு இப்ப இந்த விளக்கமெல்லாம். ஐ ட்ரூலி லவ் யூ… ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட்… ஐ ரியலி வாண்ட் டு மேக் இட் அப் டு யூ” என்று வெங்கட் சொன்னதைக் கேட்டவுடன் பளிச்சென்று,

“அப்டின்னா…. லெட் மீ டு மை ஜாப்… வாண்ட் டு கோ? ஒரு சாங்க் ட்வெண்டி டாலர்ஸ்…. த்ரீ சாங்க்ஸ் ஹேஸ் அ டிஸ்கவுண்ட்.. ஒன்லி ஃபிஃப்ட்டி டாலர்ஸ்… ஒகே?” என்று சொல்லிக் கண்ணடிக்க, அதே நேரத்தில் அவளது செல்ஃபோன் சிணுங்கியது. பூஜா எடுத்துப் பேச, மறுமுனையில் அபூர்வா,

“மாமி, ஹேப்பி மதர்ஸ் டே” !!

வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. M K Rammohan says:

    Ellame avan seyalgal

Leave a Reply to M K Rammohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad