\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019

அமெரிக்க மாகாணங்களில் நடத்தப்படும் மாநிலக் கண்காட்சிகள்  (State fair) ஊர்த் திருவிழாவாகவே காட்சியளிப்பவவை. மினசோட்டா மாநிலக் கண்காட்சி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்து செப்டம்பர் முதல் வாரத்தில் வரும் தொழிலாளர் தினம் வரை 12 நாட்கள் நடைபெறும். ‘மினசோட்டாவின் ஒன்று கூடல்’ என்ற செல்லப்பெயரிடப்படும் இவ்விழா  வருகையாளர்களின் தினசரி எண்ணிக்கை அடிப்படையில் நாட்டிலேயே முதன்மையானதாகவும், மொத்த வருகையாளர் எண்ணிக்கை அடிப்படையில் டெக்சாசுக்கு அடுத்து இரண்டாவதாகவும் கருதப்படுகிறது

இவ்விழாவுக்கான நுழைவுக் கட்டணம், வயதைப் பொறுத்து  $13 – 15 வரை இருக்கும். வார நாட்களைப்  பொறுத்து கட்டணத் தள்ளுபடிகளும் உண்டு.

கண்காட்சியின் முக்கிய அம்சமாகப் பலரும் கருதுவது, அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள்தான். பிரத்யேக வகையான உணவுகளுடன் , வழக்கமாக கிடைக்கும் உணவு வகைகளும், சில இங்கு உணவுப் பிரியர்களை அழைத்து வந்து விடும். 

இங்குள்ள அரங்கங்களில் புகழ்பெற்ற கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண தனிக் கட்டணச் சீட்டுகள் வாங்க வேண்டும். 

2016ம் ஆண்டு நிகழ்வின் தொகுப்புகளை எங்களது  பனிப்பூக்கள் களஞ்சியத்தில் காண https://www.panippookkal.com/ithazh/archives/9680 இணைப்பினை சொடுக்கவும்.

இந்தாண்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக

  • ராஜேஷ் கோவிந்தராஜன் 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad