Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 3

Filed in கதை, வார வெளியீடு by on October 27, 2019 0 Comments

 

பகுதி 2 

த்துவானக் காட்டுக்கு மத்தியில், அழகாக அமைக்கப்பட்டிருந்த இரயில் நிலையம். சுற்றி கண்ணுக்கெட்டும் தொலைவு வரையில் கும்மிருட்டு. அந்த இரயில் நிலையத்திலும், அதன் உள்ளிருந்த ஒரு ரெஸ்ட்டாரண்டிலும் ஒளி மயமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அவைதவிர எந்தவித வெளிச்சமும் எங்கும் காணப்படவில்லை. ஆனால் இரவு நேரமதிகமாகிவிட்டதால், அந்த ரெஸ்டாரண்ட் மூடப்பட்டு, ஓரிரு விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன.

இரயில் நின்று, கதவு திறந்தவுடன் கணேஷ் மெல்லமாகத் தலையை எட்டிப் பார்த்தான்; மனது முழுதும் யாரேனும் மனிதர்கள் கண்ணில் தென்பட வேண்டுமே என்ற ஆதங்கம், பயம் என்றும் சொல்லலாம். மெதுவாகத் திரும்பிப் பார்த்து லக்‌ஷ்மியையும் குழந்தைகளையும் இறங்குமாறு சைகை செய்தான். அந்த இரயில் பெட்டியில், ஏன் அந்த மொத்த இரயிலிலும் இவர்கள் மட்டுமே இருந்தனர் என்று அப்பொழுது விளங்கியது. முதலில் மனைவியை இறங்கச் சொல்லிவிட்டு, பின்னர் குழந்தைகளை இறக்கி அவளின் அருகில் வைத்துவிட்டு, ஒவ்வொரு பெட்டியாக இறக்க ஆரம்பித்தான். அனைத்தையும் இறக்கி ஒரு இடத்தில் வைப்பதற்கு, ஒரு பத்து நிமிடம் பிடித்தது. கடைசி நிறுத்தம் என்பதால் அவனுக்குப் போதுமான நேரமிருந்தது. அனைத்தையும் இறக்கிவிட்டு இரண்டு நிமிடங்களில், அந்த இரயில் புறப்படத் தொடங்கியது. இரயில் புறப்பட்ட பின்னரே அவர்களுக்கு விளங்கியது, அங்கு இருந்த மனிதர்கள் அவர்கள் நால்வர் மட்டுமே.

ரத்தம் உறைய நின்று கொண்டிருந்த ஜேனைச் சற்று ரசித்துப் பார்த்துக் கொண்டே மூன்றாவது ரௌண்ட் ஜின்னை உள்ளே இறக்கிக் கொண்டிருந்தாள் ஜேக்குலின். “வாட் டியர், எனி ப்ராப்ளம்” என்று ஏளனமாய்க் கேட்க, என்ன சொல்வதென்றே தெரியாமல், உதடுகள் உலர்ந்து நின்று கொண்டிருந்த ஜேனுக்கு உடல் சற்று நடுங்கத் தொடங்கியது. “ஆர் யூ ஆல்ரைட் டியர்?” மீண்டும் ஜேக்குலின். “யெஸ் மேம்…” அதைத்தவிர வார்த்தைகள் ஏதும் அவளால் பேச முடியவில்லை. “ஹியர் இஸ் த டீல்… யூ ஆர் கோயிங் டு டிரைவ் த கார் டு த ஸ்டேஷன் நௌ; அண்ட் ஐம் கோயிங் டு ஸிட் வித் யூ…. ஸின்ஸ் ஐம் ட்ரங்க்…. தட் ஸ்டுபிட் இண்டியன் ஃபேமிலி இஸ் கமிங் வித் செவரல் லக்கேஜஸ் இட் ஸீம்ஸ்… வெல், ஐ ஹோப் த லக்கேஜஸ் ஹேவ் ஸம்திங் யூஸ்ஃபுல் ஃபார் மி… ஆஃப்டர் ஆல் தே ஆர் நாட் கோயிங் டு நீட் தெம் எனிமோர்…” சொல்லிவிட்டு வில்லத்தனமாய்ப் புன்னகை புரிந்தாள் ஜேக்குலின். ஜேனின் சப்த நாடியும் ஒடுங்கிவிட, மிகவும் கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “மே… மேம்… மேம்… மே ஐ… நோ வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்…?” என்று மென்று விழுங்கிக் கேட்டு முடித்தாள். “ஹா, ஹா…. ஐ அப்ரிஷியேட் யுவர் க்யூரியாஸிடி… ஐ மைட் ஈவன் லெட் யூ இன் டு மை ஸீக்ரெட்… பட்….” என்று சற்று நிறுத்தி விட்டு, இன்னொரு மடக் ஜின்னை குடித்து முடித்தாள். “பிஃபோர் ஐ எக்ஸ்ப்ளெய்ன்.. வி மஸ்ட் கோ.. அண்ட் கெட் தெம்… அதர்வைஸ் தே மைட் டை அவுட் ஆஃப் ஃபியர் இன் தட் டார்க் சரவுண்டிங்..” என்று எழுந்தாள். வேறு வழி ஏதுமில்லாமல் நடுங்கும் இதயத்துடன் ஜேக்குலின் பின்னால் நாய்க்குட்டி போல் தொடர்ந்தாள் ஜேன். சற்றுத் தடுமாற்றத்துடன் வெளியில் வந்து, படிகளில் இறங்கி, காரை நோக்கி நடந்த ஜேக்குலினின் பின்புறத்தைப் பார்த்துக் கொண்டே ஜேன் பின்னால் நடந்து வந்தாள். ஐம்பதுகளின் மத்தியிலிருந்தாலும், இருபத்து மூன்று வயதான மகன் ஒருவன் இருந்தாலும், ஜாக்குலின் தனது உடலை மிகவும் நன்றாகவே மெயிண்டெய்ன் செய்து வருகிறாள் என்பது அவளது பின்புறத்தைப் பார்த்துக் கொண்டே நடந்துவந்த ஜேனுக்குத் தோன்றியது. மறு நொடியே, சீ சீ.. என்ன உணர்வு இது, இன்னும் சில மணித்துளிகளுக்குப் பின்னர் உயிருடன் இருப்போமாவென்றே தெரியவில்லை, இந்த நேரத்தில் என்ன உணர்வு; அதுவும் இன்னொரு பெண்ணைப்பற்றி; அதுவும் தன்னைப் போல் இரண்டு மடங்கு வயது கொண்டவளைப் பற்றி… என்று அந்த நினைவை மாற்றிக் கொண்டாள்.

படியில் இறங்கி, க்ராவல் வால்க்வேயில் நடந்து, மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷெவி ப்ளேசரை நோக்கி நடந்து கொண்டே, எப்படித் தப்பிக்கலாம் என யோசிக்க ஆரம்பித்தாள். உடனடியாக வேகம் பிடித்து ஓட ஆரம்பிக்கலாம், ஆனால் எங்கு பார்த்தாலும் கும்மிருட்டு, அடர்ந்த காடு, மரியாவைக் கோடரியால் கொத்தியெடுத்த ஜார்ஜ் அந்த கும்மிருட்டில்தான் எங்கோ இருக்கிறான். இன்னும் வெளியில் வந்ததாகத் தெரியவில்லை. அவனுக்கு இந்தக் காடு முழுவதும் அத்துபடி. அவனிடமிருந்து தப்ப முடியுமா? நினைக்க நினைக்க அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். ஜேக்குலினின் காரைத் தானே ஓட்டப் போகிறோம், ஐந்து நிமிடத்தில் இரயில் நிலையத்தை அடைந்து விடலாம்;  ஜேக்குலின் சற்று நிதானம் தவறிய நிலையிலிருக்கிறாள். மே பி அந்த ஐந்து நிமிடத்தில் அவளின் தலையில் ஒரே போடு, போட்டு, காரை ஓட்டிக் கொண்டு நகரம் நோக்கிச் சென்று விடலாம். அது பெட்டர் ப்ளான் என்று தோன்ற ஆரம்பித்தது; அந்த எண்ணத்துடன், க்ராவலின்மேல் விழுந்திருந்த ஷவலை மெதுவாகக் கையில் எடுத்துக் கொண்டாள். ஜேக்குலின் பார்ப்பதற்குள் காருக்குள் வைத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நடக்க, சடாரெனத் திரும்பிய ஜேக்குலினைப் பார்த்து ஸ்தம்பித்து விட்டாள் ஜேன்.

வாட் த ஹெக்….”  பிக்கப் செய்ய யாரும் வரவில்லை என்பதைப் பார்த்தவுடன் அவனையுமறியாமல் வெளிவந்த வார்த்தை… கும்மிருட்டு, லேசான குளிர் காற்று, அத்துவான அமைதி, மத்தியில் மெதுவாக தூரத்திலிருந்து கேட்கும் நாயின் குரைத்தல் ஒலி… ஏதோ ஒரு ஹாலிவுட் ஹாரர் மூவி பார்ப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. எந்த ரிஸர்ச்சும் செய்யாமல் புக் செய்த லக்‌ஷ்மியின் மேல் அடக்க முடியாத கோபம். ஜ்யூரிச் விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்து பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா? நினைக்க நினைக்கக் கோபம் அதிகரித்துக் கொண்டே செல்ல, “எல்லாம் என் தலைல எழுத்து, நானே ஆயிரம் ஜோலிகளுக்கு மத்தில இதையும் செஞ்சுருக்கணும்” என்றவனை ஒரு முறை முறைத்து விட்டு, “சரி சரி, சண்டை போட்றதுக்கு இது இடமுமில்லை, நேரமுமில்லை.. அடுத்து என்ன செய்யலாம்னு பாருங்கோ” என்றாள். சாதாரணமாக அவளும் கோபத்துடன் கத்தியிருப்பாள், ஆனால் இந்த அத்துவானக் காட்டில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, சற்று அடக்கி வாசித்தாள். அதே அவசியத்தை உணர்ந்த அவனும் அடக்கி வாசிக்க முடிவு செய்தான்.

”இந்த எளவு ரிஸார்ட் பீப்பிள்… ஹௌ கேன் தே நாட் பி ஹியர்… வாட் கைண்ட் ஆஃப் அ ஃப்…….” என்று தொடங்கி விட்டு, குழந்தைகள் இருப்பதை உணர்ந்து அந்த வார்த்தையைப் பாதியிலேயே முழுங்கினான் கணேஷ். தனது ஃபோனை எடுத்து, திரும்பவும் கால் செய்யலாமென்று நினைத்தால் அதில் மருந்துக்குக்கூட ஸிக்னல் இல்லை. இதுவரை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாவது ஸிக்னல் இருந்தது லக்‌ஷ்மியின் ஃபோனில்தான். அந்தக் களேபரத்திலும், ”இதுக்குத்தான் ஐஃபோன் வேஸ்ட்னு சொல்றேன்” என்று தனது சாம்ஸங்க் ஃபோன் பெருமையைப் பேச அவள் தவறவில்லை. ”சரி அந்த இடியட்ஸ்க்கு இன்னொரு வாட்டி ஃபோன் பண்ணி எங்க இருக்கான்னு கேளு” என்றவுடன், லக்‌ஷ்மி தனது ஃபோனை எடுத்து டைரக்டரியைப் பார்க்கத் தொடங்கினாள். “ஐயோ…. ஏன்னா… ஃபோன்ல அஞ்சு பர்ஸெண்ட்தான் பேட்டரி இருக்கு” என்று தயங்கித் தயங்கிச் சொன்னவளைப் பார்த்து, ”இதுக்குத்தான் சொன்னேன் சாம்ஸங்க் வேஸ்ட்னு” என்று அனிச்சையாகச் சொல்ல… “போறுமே, பதிலுக்குப் பதில் சொல்ல ரொம்பச் சரியான நேரந்தான்…” என்றாள்.

இவர்களின் இம்மெச்சூர்ட் கூத்துக்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவள், “பேரண்டல் ஃபிகர்ஸ்…. கேன் யூ ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் அண்ட் ஃபிகர் அவுட் வாட் டு டூ…. வி ஆர் டயர்ட், ஹங்க்ரி அண்ட் மோர் தேன் தட் ஸ்கேர்ட் டு டெத்..” எனச் சொல்ல, நிலைமையை மறுபடி உணர்ந்தவனாக, “லெட்ஸ் ஜஸ்ட் கிவ் இட் அ ஷாட் வித்தின் தோஸ் ஃபைவ் மினிட்ஸ் பேட்டரி அண்ட் ஹோப்ஃபுல்லி டாக் டு சம் ஒன்” என்றான். அவளும் சரியெனத் தலையாட்டிவிட்டு, நம்பர் டயல் செய்யலானாள்.

திர்பாராத நேரத்தில் திரும்பிய ஜாக்குலின், இருட்டில் ஜேனின் கையில் இருந்த ஷவலைப் பார்க்கவில்லை. பின்புறமாக மறைத்து வைத்திருந்ததாலும், அவ்வளவாகப் பெரியதாக இல்லாது இருந்ததும் வசதியாகப் போய்விட்டது. திரும்பிய ஜாக்குலின், “ஹே… குட் யூ வாக் அப் ஃபாஸ்ட்… வி டோண்ட் வாண்ட் தோஸ் இண்டியன்ஸ் டு டை அவுட் ஆஃப் ஃபியர்….” என்று சொல்லி, சில விநாடிகள் பாஸ் செய்து, பிறகு “தே கேன் ஒன்லி டை அவுட் ஆஃப் மை எஃபர்ட்ஸ்” என்று சொல்லி அட்டகாஸமாகச் சிரித்தாள்.

பேசிக் கொண்டே இருக்கையில், வீட்டுக்குள் அடிக்கும் தொலைபேசியின் ஒலி, திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழியே இவர்கள் காதில் விழுந்தது. “லுக்ஸ் லைக் த ஃபிஷ் இஸ் காலிங் த ஃபிஷர்மேன்” என்று கூறிவிட்டு, மிகவும் க்ரியேட்டிவாகப் பேசிவிட்டதாக நினைத்து, உரக்கச் சிரித்தாள் ஜேக்குலின்.

அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே, இந்த சந்தர்ப்பத்தில் பின்னால் பிடித்திருந்த ஷவலை, மண்ணோக்கி நழுவ விட்டாள் ஜேன். ஒன்றும் பதில் பேசாமல் காரை நெருங்க, ஜேக்குலின் கார் சாவியை நீட்ட, அதனை வாங்கிக் கொண்டு, டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்தாள் ஜேன். காரை உடனடியாக ஸ்டார்ட் செய்தவளுக்கு, ஒரு நொடி, ஜேக்குலின் காரில் ஏறுவதற்குள் அவசரமாகக் காரைக் கிளப்பிவிடலாம் என்று தோன்ற உடனே செயல்படுத்தத் தொடங்கினாள். இஞ்சின் ஸ்டார்ட் செய்து, காரின் ஹெட் லைட்டை ஆன் செய்தவுடன், பளிச்சென்று ரோட் தெரிய, ஐந்தடி தூரத்தில் ஒரு உருவம் பாதையில் நின்று கொண்டிருந்தது. கையில் அதே கோடாரி…. நின்று கொண்டிருந்தது ஜார்ஜ்; உறுதி, நிதானம் ஆனால் ஒரு குரூரம் அவனது பார்வையில். அந்த உறுதியையும், பதைபதைப்பு அடையாத நிலைப்பாட்டையும் பார்த்தது, பயம் இன்னும் அதிகரித்தது ஜேனுக்கு. மூளை, காரை ஓட்டு, அவனை மொதிவிட்டுச் செல் என்று இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுத்தாலும், கால் ஆக்ஸலரேட்டரை அழுத்த மறுக்கிறது. அந்த இரண்டு மூன்று நிமிடங்களே அவர்களுக்குத் தேவைப்பட்டது; ஜேக்குலின் முன் சீட்டில் வந்து அமர்வதற்கு. வந்து அமர்ந்தவள் நிதானமாக ஜேனைப் பார்த்து, “ஆங்.. ஆஹ்.. யூ திங்க் ஐ டோண்ட் நோ டியர்?… ஐ எஞ்சாய் எவரிதிங்க் சம் ஒன் ட்ரைய்ஸ் டு ஸேவ் தெய்ர் லைஃப்… இட்ஸ் ஃபன் டூ வாட்ச் தட் ஸ்ட்ரக்கிள்… ஐல் டெல் யூ ட்ரை எவரிதிங்க் யூ குட் ஹனீ….” சொல்லிக் கொண்டே சைகை செய்ய, ஜார்ஜ் வழியைவிட்டு அகன்றான்.

“ஐ வுட் ஹேவ் ஆஸ்க்ட் ஹிம் டு ஜாயின் அஸ்… பட் தட் ஃபேமிலி நீட் ஸ்பேஸ் இன் த கார்… பிஸைட்ஸ்… ஜார்ஜ் ஹேஸ் ஸோ மச் டு கெட் ஸெட்டப் அட் ஹோம்… ஹீ ஸீம்ஸ் டு பீ ஸோ எக்ஸைடட் அபவுட் ப்ரௌன் ஸ்கின்….” என்று சொல்லி, கண்ணைச் சிமிட்டினாள் ஜேக்குலின்.

வேறு ஏதேதோ ப்ளான் இருக்கும் போலவென்று உணர்ந்து, பயம் இன்னும் அதிகரிக்க, எப்படியாவது அந்த இந்தியக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமெனத் தோன்றியது ஜேனுக்கு. “எப்படி, எப்படி… யோசி… யோசி” என்று மூளை துரிதப்படுத்த, சற்று செயலற்று இருந்தவளை, தோளில் உணர்ந்த குளிரான மெட்டல் டச் தற்கால நினைவுக்குக் கொண்டுவந்தது. ஜேக்குலின் கையில் புதிதாக முளைத்திருந்த ரிவால்வர் அது… “ம்ம்….. ஸ்டார்ட் த கார்” என்ற ஸ்டெர்னான வாய்ஸைத் தொடர்ந்து, கார் நகர்ந்தது.

மை காட்…. நோ ஒன் இஸ் பிக்கிங்க் அப்….” லக்‌ஷ்மியின் புலம்பல் அனைவரின் பயத்தையும் அதிகரித்தது. உடனடியாகத் தனது ஃபோனைப் பார்த்தவள், இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் ஐந்து பர்ஸெண்ட் என்று காட்டிய பேட்டரி, திடீரென முழுவதும் இழந்துபட, சற்று சிறு வட்டங்களிட்டுத் தனது உயிரைத் தற்காலிகமாக மாய்த்துக் கொண்டது.

கணேஷ் முகத்திலும் அழுத்தமான பயம் தொற்றிக் கொண்டது. அந்நிய தேசம், அறியாத மொழி, தெரியாத இடம், கும்மிருட்டு, பேட்டரி இருக்கும் ஃபோன் வேலை செய்யவில்லை, வேலை செய்யும் ஃபோனில் பேட்டரி இல்லை, மனைவி, இரண்டு குழந்தைகள், பத்து சூட்கேஸ்…. இவை அவன் அறிந்த ரிஸ்க்ஸ்… அறியாத ரிஸ்க் ஒன்று கொலைவெறியுடன் காரில் வந்து கொண்டிருக்கிறது.

தப்பிக்குமா கணேஷின் குடும்பம்…

      மதுசூதனன்

 

(தொடரும்).

Tags:

Leave a Reply

Your email address will not be published.

banner ad
Bottom Sml Ad