Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2

Filed in கதை, வார வெளியீடு by on October 20, 2019 0 Comments

பகுதி 1

ந்த கரிய நிற மெஷின் கன்னைப் பார்த்தவுடன் சர்வ நாடியும் ஒடுங்கியது கணேஷிற்கு. உடனடியாகத் திரும்பி, அந்த ஜெர்மன் டிரைவரைப் பார்க்க, அவருக்கும் குண்டலினி தொடங்கி துரியம் வரை குளிர் ஜுரம் பற்றிக் கொள்ள, இதுவரை வெறுத்த இந்த ப்ரௌன் ஸ்கின் இண்டியனை ஒரு ஆதரவுடன் பார்த்தார். “டிரைவ்…. டிரைவ்….. கோ … கோ.. கோ… டோண்ட் ஸ்டாப்….” என்று சைகையுடன் ஆங்கிலத்தில் இன்ஸ்ட்ரக்‌ஷனஸ் கொடுத்துக் கொண்டிருக்க, அவரும் திடீரென் வின்ஸ்டன் சர்ச்சிலாக மாறி, அனைத்து ஆங்கில வார்த்தைகளையும் புரிந்து கொண்டு, முடிந்தமட்டும் விரைவாக அந்த வேனை ஓட்டிக் கொண்டு செல்லலானார்.

திடீரென அந்த ரோடில் வந்து கொண்டிருந்த வேன் வேகம் பிடித்து ஓடத் தொடங்கியதும், ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தான் அந்த வெள்ளையன். ஆனால், அவசர அவசரமாக பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த தனது ஆறு வயது மகளை நோக்கித் திரும்பிக் கத்தத் தொடங்கினான். வேகமாக வரும் வேனில் குழந்தை மாட்டிக் கொண்டு விடுமோ என்று அவனுக்கு பயம். “வாட் ஆன் இடியட்… டிரைவிங்க் திஸ் ஃபாஸ்ட் இன் அ ரெஸிடென்ஷியல் ஏரியா….” என்று வேனை நோக்கிக் கையைத் தூக்கிச் சைகை செய்ய, அப்பொழுதுதான் உணர்ந்தான் தனது கையிலிருக்கும் துப்பாக்கி அவர்களின் வேகத்திற்குக் காரணமாக இருக்குமென்று. உடனே, அதனை கீழே இறக்கி, மேகசீனைக் கழற்றி, அதிலிருப்பவை வெறும் பிளாஸ்டிக் அம்புகள் என்றும், அது தனது ஆறு வயது மகளின் குழந்தைத் துப்பாக்கி என்றும் சைகையிலேயே விளக்கத் தொடங்கினான்.

”அப்பா, தட்ஸ் ஜஸ்ட் அ டாய் கன்…..”, பெரியவர்களுக்கு முன்னர் தனது பழக்கப்பட்ட கண்களால் விளையாட்டுப் பொருட்களை அடையாளம் கண்டு கொண்ட சிறியவள் தந்தையிடம் அவசர அவசரமாக விளக்கிக் கொண்டிருந்தாள். மகளின் வார்த்தைகளையும், வெளியில் நிற்கும் வெள்ளையனின் கெஸ்ச்சரையும், அவன் பின்னே ஓடி வரும் சிறுமியையும் பார்த்தவுடன் சற்று தைரியம் வந்தவனான கணேஷ், ஜெர்மன் டிரைவனின் தோள்மீது மெதுவாகக் கை வைத்தான். இத்தனையையும் சிறிது சிறிதாக விளங்கிக் கொண்ட டிரைவர் என்ன செய்யலாமென்பது போல் விழித்துக் கொண்டே, வேனைச் சற்று ஸ்லோ டௌன் செய்தார். அதே சமயத்தில், சற்று எச்சரிக்கை உணர்வுடன் வேனை ஓட்டிச் செல்ல, சற்று ஸ்லோவாக அவர்களை க்ராஸ் செய்ய, மிக அருகில் பார்த்தவுடன் அது டாய் கன் என்பதை  முழுவதுமாகப் புரிந்து கொண்டார்கள்.

கணேஷ் எதுவும் சொல்லாமலேயே, டிரைவர் வேனை நிறுத்தினார். பய உணர்வு குறைந்தவுடன், அவர் தனது மொழியிலேயே கணேஷைப் பார்த்து ஏதோ சொல்கிறார். காண்டெக்ஸ்ட் வைத்துக் கொண்டு என்ன சொல்கிறார் என்பதை விளங்கிக் கொண்டான். அங்கே நிறுத்தி அந்த வெள்ளைக் காரனிடம் வழி கேட்பது மட்டுந்தான் இப்பொழுது செய்யக் கூடிய ஒரே காரியம் என்பதை உணர்ந்து கொண்ட அவன், “சரி” என்று தலையாட்ட, வேனை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டு அவனருகில் வரத் தொடங்கினார்கள்.

ஹௌ மெனி டைம்ஸ் ஐ ஷுட் ட்ரை டு கால் திஸ் ஸ்டுபிட் இண்டியன் லேடி”, பல முறை ரிங் ஆகி யாருக்கும் எடுக்காததால், ஃபோனைப் படாரென அடித்துக் கீழே வைத்து விட்டுப் புலம்பினாள் ஜேக்குலின். ஜேக்குலினின் பேச்சில், நடத்தையில் என்று அனைத்திலும் பணக்காரத்தனம் தொனிக்க, அதனுடன் சேர்ந்து “ஒய்ட் சுப்ரிமஸி”யும் தெளிவாய்த் தலை தூக்கிக் கொண்டிருந்தது. அவள் ஸ்டுபிட் என்று திட்டியது, கணேஷின் மனைவி லக்‌ஷ்மியைத்தான். தன் முன்னே, கிச்சனில்  உதவி செய்து கொண்டிருந்த ஜேனைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருந்தாள். ஜேன் ஜாக்குலினின் சொந்த கிராமத்தில் பக்கத்துத் தெருவில் வசித்துக் கொண்டிருந்த ஒரு வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவள். புத்திசாலி, பார்ப்போரைக் கிறங்கடிக்குமளவுக்கு அழகான இளம்பெண். அந்த அழகு மிக அமைதியானதாகவும், பார்ப்போரின் மரியாதையை ஈர்க்கும் வண்ணமும் அமைந்திருப்பது அவளின் சிறப்பு. ஜூரிச் நகரிலிருந்த உயர்தரக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைத்தபோது, அவளுக்கு அங்கு படிப்பதற்கான தைரியத்தையும், சற்றுப் பண உதவிகளையும் செய்து கொடுத்தது ஜேக்குலின். அந்த நன்றிக்காக அவளது வீட்டிற்கு வந்து அவ்வப்போது உதவிகள் செய்வாள் ஜேன். அந்த வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் ஏதோவொரு அமானுஷ்யம் நடமாடுவதுபோலவும், ஏதோவொரு இல்லீகல் நிகழ்வு அங்கு நடப்பதாகவும் எப்பொழுதும் நினைத்துக் கொள்வாள் ஜேன். ஆனால் அவை குறித்துப் பேசுவதற்குப் பயம்.

ஜேக்குலினுக்குச் சொந்தமான அந்த பங்களாவில், மேல் மாடியில் அவள் வசித்துக் கொண்டிருந்தாள். கீழே இருந்த தளத்தை ப்ரைவேட் ரிஸார்ட் என வெகேஷன் வருபவர்களுக்கு வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். ஜேக்குலினின் மகன் ஜார்ஜ் அதனைப் பார்த்துக் கொள்வதற்குச் சற்று உதவியாக இருந்தாலும், ஜேக்குலின் மரியா எனும் ஹிஸ்பானிக் பெண்ணை வேலைக்கு வைத்திருந்தாள். அவள்தான் அனைத்து விதமான வேலைகளைச் செய்பவள். ஜேன் பக்குவமாகப் பேசுவதற்கும், ஜார்ஜ் கம்ப்யூட்டர் தொழிலில் இருப்பதால் அந்த ரிஸார்ட் குறித்துப் பெருமளவு ப்ராண்டிங்க் மற்றும் அட்வர்ட்டைஸிங்க் செய்வதற்கும் எனப் பயன்படுத்திக் கொண்ட ஜாக்குலின், மரியாவை அனைத்துவிதமான எடுபிடி வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டாள்.

ஜார்ஜின் அட்வர்ட்டைஸிங்க்கில் மயங்கி, அந்த ரிஸார்ட்டை என்னவென்னவெல்லாமோ கற்பனை செய்துகொண்டு, புக் செய்திருந்தாள் லக்‌ஷ்மி. அந்த ரிஸார்ட் ஒரு அத்துவானக்  காட்டின் மத்தியில் அமைந்திருக்கிறது என்பதும், கார் மற்றும் எந்த வித மோட்டார் வாகனங்களும் அங்கு வந்து சேர இயலாது என்பதால் அருகிலுள்ள இரயில் நிலையத்திலிருந்து நடந்து வரவேண்டும் என்பது லக்‌ஷ்மிக்குத் தெரிந்திருக்கவில்லை. ஜேக்குலின் அவளை ஃபோனில் அழைத்துப் பேச முயற்சி செய்வது அதற்காகத்தான். அந்த ஃபோன் காலை, ஸ்விட்சர்லாண்ட் நாட்டிற்குள் வேலை செய்யாத அமெரிக்க ஃபோன் ரிஸீவ் செய்யாதது லக்‌ஷ்மி குடும்பத்தின் துரதிர்ஷ்டம்.

வாட் டு யூ வாண்ட்?” டீஸண்ட்டான ஆங்கிலத்தில், வேனுக்குள் அமர்ந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த ப்ரௌன் ஃபேஸ் கணேஷைப் பார்த்துப் பொலைட்டாகக் கேட்டான் ஜோஹன்னஸ். அதுதான் அந்த விளையாட்டுத் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு, தனது மகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வெள்ளையனின் பெயர். அவனது குரலிலிருந்த கனிவையும், மொழியிலிருந்த டீஸன்ஸியையும் பார்த்தவுடன் கணேஷிற்கும், லக்‌ஷ்மிக்கும் தெம்பு வர, வேனிலிருந்து இறங்கினர். அருகில் சென்று, தங்களின் நிலை குறித்து விளக்க, அவனும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு, தனது கைபேசி எடுத்து அந்த ரிஸார்ட்டை மேப்பில் தேட ஆரம்பித்தான்.

பல மணித்துளிகளுக்குப் பின்னர், டிரைவரைப் பார்த்து வேகமாக ஜெர்மனின் பேசி முடித்துவிட்டு, கணேஷைப் பார்த்து, “அன்ஃபார்ச்சுனேட்லி, தெர் இஸ் நோ வே டு ரீச் திஸ் ப்ளேஸ் பை கார்… இட்ஸ் அ நோ கார் சோன்…. யூ ஹேவ் டு கோ டூ யூட்லி பெர்க் ட்ரெய்ன் ஸ்டேஷன் அண்ட் வாக்… ஆர் கால் த ரிஸார்ட் டு ஆஸ்க் தெம் டு கம் அண்ட் பிக்கப்…”

“ஓ….. ஹவ் டு ஐ கெட் டு யூட்.. வாட்ஸ் தட் ஸ்டேஷன் அகெய்ன்?” கணேஷ்..

“யூட்லி பெர்க்… யூ கேன் கோ டு யூடிகான் வால்டெக் ஸ்டேஷன் விச் இஸ் ஜஸ்ட் டென் மினிட்ஸ் ஃப்ரம் ஹியர்.. அண்ட் தென் டேக் தி லோகல் ட்ரெய்ன், டூ ஸ்டேஷன்ஸ் டௌன் இஸ் யூட்லிபெர்க்…” சொல்லிக் கொண்டே போக, கணேஷுக்கு எதுவும் விளங்கவில்லை. நன்கு இருட்டிவிட்ட நிலையில், பத்து சூட்கேஸ்களையும் சுமந்துகொண்டு, ட்ரெயின் பிடித்து எப்படிச் செல்வது… சரியான ஸ்டேஷன்தான் என்று பார்த்து இறங்குவது எவ்வாறு? இறங்கினாலும், இந்த இருட்டில் ரிஸார்ட்டுக்கு நடந்து செல்வது எவ்வாறு?” ஒன்றும் புரியவில்லை. பயம் அதிகரித்துக் கொண்டே செல்ல, வேறு வழி ஏதுமின்றி ஜோஹன்னஸை மேலும் உதவி கேட்பது என்று முடிவு செய்தான்.

“கேன் ஐ ஆஸ்க் யூ ஃபார் மோர் ஹெல்ப்? ஐ நோ இட்ஸ் டூ மச் டு ஆஸ்க்… பட் ஐ டோண்ட் ஹேவ் மச் சாய்ஸ்… தெ டிரைவர் டஸிண்ட் ஸ்பீக் இங்கிலீஷ்.. அண்ட், ஐ ஹேவ் நோ க்ளூ ஹவ் டு கெட் டு த ஸ்டேஷன், விச் ட்ரெய்ன் டு கேட்ச், ஹவ் டு கேரி ஆல் தீஸ் லக்கேஜஸ், விச் ஸ்டேஷன் டு கெட் டௌன் எட்ஸட்ரா எட்ஸட்ரா…” தொடர்ந்த கணேஷை, “ஸோ?” என்ற ரீதியில் பார்த்துக் கொண்டே நின்றான் ஜோஹன்னஸ். “இஃப் யூ டோண்ட் மைண்ட், குட் யூ ப்ளீஸ் கம் ஓவர் வித் மி இன் த வேன் அண்ட் ஷோ அஸ் தெ ஸ்டேஷன்? பெர்ஹாப்ஸ் கம் வித் அஸ் டூ யுட்… வாட் வாஸ் த டெஸ்டினேஷன் அகெய்ன்? சாரி…” என்றான்.

என்ன சொல்வதென்று விளங்காமல், அதே சமயத்தில் இந்தக் குடும்பத்திற்கு உதவ வேண்டுமென்ற நினைப்புடன் “ஒன் செகண்ட்” என்று சொல்லிவிட்டு, வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிவிட்டு, ஆறு வயது மகளையும் தூக்கிக் கொண்டு வேனில் வந்து அமர்ந்தான். ட்ரெயின் ஸ்டேஷன் போய்க்கொண்டு இருக்கும் வழியில், ட்ரெயின் குறித்து விளக்கிக் கொண்டிருந்தான் ஜோஹன்னஸ்.

மிஸ் ஜேக்குலின், ஒய் டோண்ட் வி ட்ரை டு கால் தட் இண்டியன் உமன் ஒன் மோர் டைம்” சற்றுக் கரிசனத்துடன் நல்ல மனதுடைய ஜேன், ஜாக்குலினைப் பார்த்துக் கேட்க, “யா, கால் தட் … யுவர்ஸெல்ஃப்” என்று கோபத்துடன் பதிலளித்துக் கொண்டே, தனது ஜின்னை ஊற்றிக் கொண்டு, டானிக் கலக்கத் தொடங்கினாள் ஜேக்குலின். தனது முதலாளியின் அனுமதி கிடைத்தவுடன், ஜன்னலுக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த தொலைபேசி அருகே சென்று, அதனைக் காதில் வைத்து, கையிலிருந்த துண்டுச் சீட்டில் எழுதியிருந்த லக்‌ஷ்மியின் கைபேசி எண்களை ஒவ்வொன்றாகச் சுழற்றத் தொடங்கினாள் ஜேன்.

சற்று நேரக் காத்திருத்தலுக்குப் பின்னர், தொலைபேசி எதிர் முனையில் மணி அடிக்கத் தொடங்கியது. சற்றுப் பொறுமையிழந்து லக்‌ஷ்மி ஃபோனை எடுப்பாளா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், ஜன்னல் வழியே சற்றுத் தொலைவில் தெரிந்த காட்சி ஜேனுக்கு ஆர்வத்தைக் கொடுத்தது. அந்தக் காட்சி என்னவென்று விளங்கவில்லை; சற்று அதனையே உற்றுப் பார்க்கத் தொடங்கினாள். மங்கிய நிலவொளியில், ஒரு மனிதனின் சில்ஹவுட் மட்டும் தெரிய, அவன் தரையில் கிடந்த எதனையோ பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. தரையில் கிடப்பது என்ன என்று தனது பார்வையை இடுக்கிக் கொண்டு பார்க்க முனைகையில், ஃபோனின் மறுபுறம் லக்‌ஷ்மி…

ட்ரிங்க்…… ட்ரிங்க்….” ஐஃபோனில் செட் செய்யப்பட்டிருந்த பழங்கால ஃபோன் போன்ற ரிங்க் டோன் அழைக்க, படக்கென்று எடுத்து காலர் ஐ.டி. பார்க்க லோகல் நம்பர் என்று அறிந்து கொண்டாள். உடனே அதிக அளவு எக்ஸைட்மெண்ட்டுடன், கணேஷையும் ஜோஹன்னஸையும் அமைதியாக இருக்குமாறு சைகை செய்துவிட்டு, ஃபோனை எடுத்து “ஹ… ஹ… ஹல்லோ…… ஹலோ..” என்ற லக்‌ஷ்மிக்கு, பதில் ஏதும் கேட்கவில்லை.

ஃபோனின் மறுமுனையில் குரல் கேட்டவுடன், ஜன்னல் வழியாகத் தெரிந்த காட்சியை அவ்வளவாகப் பொருட்படுத்தாது, ”ஹல்லோ… ஸ்பீக்கிங்க் ஃப்ரம் இம் சானன்புல்…” என்று ரிஸார்ட் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டாள் ஜேன். மறுமுனையில், லக்‌ஷ்மியின் எக்ஸைட்மெண்டை இவளால் உணர முடிந்தது. “மேம்.. வி ஹேவ் பீன் ட்ரையிங்க் டு கெட் ஹோல்ட் ஆஃப் யூ ஃபார் அ லாங்க் டைம்” என்று தொடங்கி எல்லாவற்றையும் விளக்க, ஹாலில் சோஃபாவில் உட்கார்ந்து இரண்டாம் ரௌண்ட் ஜின்னில் இறங்கியிருந்த ஜேக்குலின் ஒரு அலட்சியமான புன்னகை புரிந்தாள். லக்‌ஷ்மியின் குடும்பம் யூடிகான் வால்டெக் ஸ்டேஷனுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும், இன்னுமொரு இருபது நிமிடங்களில் யூட்லிபெர்க் ஸ்டேஷன் அடைந்திடுவார்கள் என்றும் எதிர்முனையில் சொல்லக் கேட்ட ஜேன் மகிழ்ச்சியடைந்தாள். லக்‌ஷ்மி, மறுமுனையில் ஜோஹன்னஸ் கையில் ஃபோனைக் கொடுத்து விளக்கம் சொல்லச் சொல்லி இருந்தாள்.

முழுவதும் சொல்லி முடித்துவிட்டு, ஃபோனை வைத்து எழுகையில் ஜேனின் பார்வை இருட்டுக்குள் தெரிந்த மனிதனின் சில்ஹவுட்டை மீண்டும் தேடத் தொடங்கியது. மழைவரும்போல் மிரட்டிக் கொண்டிருந்த மேகம் அப்பொழுது பார்த்து ஒரு பெரிய மின்னலை அனுப்பி வைக்க, ஜேனுக்குத்தான் பார்ப்பது என்னவென்று நன்றாக விளங்கியது. சில்ஹவுட்டாகத் தெரிந்து கொண்டிருந்தவன் ஜேக்குலின் மகன் ஜார்ஜ்… நீண்ட ஜடை முடியுடன், மூக்கில் போட்டிருந்த சில்வர் வளையம் அந்த மின்னலில் மின்னுவதைக் காண முடிந்தது. கையில் ஒரு மரம் வேட்டும் கோடரி வைத்துக் கொண்டிருந்தான். அந்தக் கோடரியை உயரமாக உயர்த்தி, பலம் கொண்ட மட்டும் கீழே கொண்டுவந்து வெட்ட, கீழே என்ன இருக்கிறதென்று அனிச்சையாய்க் கண்களை ஓட்டிய ஜேனின் தோளில் ஜாக்குலின் கை வைத்தாள்.

பயத்தில் சடாரெனத் திரும்பிப் பார்க்க, சற்று போதையேறிய நிலையில், ஜேன் அருகே நின்று இடது கையை அவளின் தோள்மீது வைத்து, வலது கையில் ஜின் ட்ரிங்க்கைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்த ஜாக்குலின், ஜேனின் பார்வை சென்ற திசைக்குத் தன் பார்வையையும் ஓட்டினாள். மீண்டும் அந்த திசையை நோக்கி ஜேனும் பார்க்க, ஜார்ஜ் பலங்கொண்ட மட்டும் கோடரி கொண்டு வெட்டும் தரையில் கிடப்பது இன்னொரு மனித உருவம் என்று விளங்குகிறது. நிலவின் ஒளியில் அதனைப் பார்க்க, தெரிந்த வளைவுகளைக் கொண்டு அது ஒரு பெண் என்பதை உணர்ந்து கொண்டாள் ஜேன். இரத்தம் முழுவதுமாக உறைந்த நிலையில், முகமெல்லாம் வியர்க்க, மெதுவாகத் திரும்பி ஜேக்குலினின் விழிகளைச் சந்தித்த ஜேன், அவளின் முகத்தில் இருந்த நகைப்பு, வெளியில் நடப்பது என்ன என்பதை அவள் முழுவதுமாக அறிந்திருக்கிறாள் என்று கட்டியங் கூறியது.

“டியர் ஜேன்… ஸம்திங்க் ஐ வாஸ் ஆல்வேஸ் வொண்டரிங்க் அபவுட்… தட் யூ ஷுட்ண்ட் கம் டூ நோ…. யுவர் பேட் டைம்… யூ ஹேவ் ஸீன் திங்க்ஸ் யூ ஷுட்ண்ட் ஹேவ்… பட், யுவர் குட் டைம், தட் இண்டியன் ஃபேமிலி வில் பி ஹியர் ஷார்ட்லி… தட் மேக்ஸ் மி திங்க் வாட் டு டூ … அண்ட், இட் கிவ்ஸ் யூ டைம்…” சொல்லிக் கொண்டே, ஜேனின்மீதிருந்த தன பிடியைச் சற்று இறுக்கமாக்கினாள் ஜேக்குலின்.

வையெவையுமறிந்திராத கணேஷின் குடும்பம், ஜோஹன்னஸின் உதவியுடன் யூடிகான் வால்டெக் ஸ்டேஷனில் ட்ரெயின் பிடித்து, அனைத்து சூட்கேஸ்களையும் ஏற்றி, யூடிலி பெர்க் ஸ்டேஷன் நோக்கி வந்து கொண்டிருந்தது.

      வெ. மதுசூதனன்.

(தொடரும்)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad