அம்மாவின் அழுகை
அம்மாவின் அழுகுரல் எந்த மகனின், மகளின் காதுக்கும் எட்டவில்லை ; எட்டினாலும் எந்த மகனுக்கும் , மகளுக்கம் மெய்யறிவு இல்லாததனால் அம்மாவின் அழுகுரலுக்கு செவிமடுக்கும் திறன் இல்லாதவர்களாக பிள்ளைகள் இருந்தார்கள்.
பிள்ளைகளின் காது செவிடாக இருந்து , காது கேட்காமல் இருந்திருந்தாலாவது தாயின் மனம் அமைதி பெற்றிருக்கும் ; செவிட்டுப் பிள்ளைகளுக்குக் காது கேட்கவில்லை …….. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற இரக்க உணர்வாவது தாயிற்கு மேலிட்டிருக்கும்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு . (குறள்:27) என்கிறது திருக்குறள் .
பிரபஞ்சத்தில் வாழும் என் எல்லா குழந்தைகளுக்கும் கிட்டதட்ட காது மட்டுமல்ல ; கண்மட்டுமல்ல ஐம்புலன்களும் நன்றாக தான் வேலை செய்கிறது . சுவை , ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்தின் வகையையும் நன்றாக உணர்கிறார்கள். ஆனாலும் திருவள்ளுவர் திருக்குறள் 27ல் சொன்னுதுபோல் அவர்கள் வசம் உலகமும் இல்லை ; ஐம்புலன்களும் இல்லை.
ஐம்புலன்களை அதன் போக்கில் செல்லவிடாமல் , தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்கிறது திருக்குறள். ஆனால் என் பிள்ளைகளின் ஐம்புலன்கள் மெய்யறிவின் வழி செல்லவில்லை; அறியாமையின் வழியே செல்கிறது அதனால் அம்மாவின் அழுகுரல் பிள்ளைகளின் காதுகளுக்கு கேட்கவில்லை.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு . (குறள்:422)
என்பதை பிரபஞ்சத்தில் என் பிள்ளைகள் எல்லோரும் ஏதோ ஒரு வழியில் நன்கு படித்து புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி படித்து புரிந்து கொண்டதை அவர்களால் வாழ்வில் கடைப்பிடிக்க முடியவில்லை . கண் இருந்தும் குருடர்களாய் ; காது இருந்தும் செவிடர்களாய் ; வாயிருந்தும் ஊமையாகவோ அல்லது உதவாக்கரைகளாகவோ வாழ்கிறார்கள். இந்த நிலையை எண்ணித்தான் பிரபஞ்சத்தாயின் அழுகுரலை முதன் முதலில் காது கொடுத்து கேட்ட முதல் மகன், மூத்த மகன், தவப்புதல்வன், தாயின் அழுகையை நிறுத்தவும், பிள்ளைகளை திருத்தவும் திருவள்ளுவர் திருக்குறளில் வழிகாட்டினார். அப்படி திருவள்ளுவர் திருக்குறளில் சொல்லிய கருத்துகள் மக்களிடம் அறிவாக இருக்கின்றன ; அந்த அறிவு பயன்பாட்டுக்கு வராததால் (Last chance to save the earth) பூமி பந்தைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சி என 1992ஆம் ஆண்டில் ஐ.நா. தீர்மானம் போட்டும் பிரபஞ்ச மக்கள் திருந்தவில்லையே என்று பிரபஞ்சத்தாய் மீண்டும் கதறி அழும் நிலைக்கு வந்தாள். .
ஒரு அவதாரமா ! இரண்டு அவதாரமா ! தசாவதாரம் எடுத்த ஶ்ரீமந்நாராயணனை தன் கண்ணீர் துடைக்க கல்கி அவதாரமாக பூமியில் அவதரிக்க செய்தோமே ..! அந்த மகனும் இன்று வரை தன்னை யாரென்று வெளிப்படுத்தி கொள்ளாமல் இருக்கிறாரே ! பிரபஞ்சம் தழைக்க பூமியில் பிறப்பெடுத்துள்ள என் செல்லக்குமாரனே நீ எப்பொழுது முழுமையாக வெளிப்படுவாய் . திருக்குறள் வழியில் பிரபஞ்ச மக்களின் கண்ணீர் முழுமையாக எப்பொழுது துடைக்கப்படும் என பிரபஞ்சத்தாய் சிந்தித்துக் கொண்டு இருந்தாள். .
அம்மா……. அனைத்தும் அறிந்த உங்களின் ஆழ்ந்த சிந்தனைக்கான புது விடியல் வெகு விரைவில் வர இருக்கிறது என தன்தாயிடம் கூறி மீண்டும் பேச்சை தொடர்ந்தாள்.
அம்மா! மிருகங்களோடு மிருகங்களாக இருந்த மனித பிள்ளைகளிடம் மிருகத் தன்மையை போக்க எனக்கு போதிய கால நேரம் வேண்டாமா?
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழித்துறையில் கொஞ்சகாலம் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றிய எனக்கு மூத்த, உன் இளைய மகன் டாக்டர் மு.வரதராசனார் என்ன கூறியுள்ளார் என்பதை மலரும் நினைவுகளாக கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் தாயே .
“இன்று மக்கள் உடம்புகள் கோடிக்கணக்காகப் பெருகியுள்ளன. ஆனால் மக்கள் உணர்வு பெருகவில்லை . வேறுவகையாக் கூறினால், மக்களாய்த் தோன்றுவோரின் தொகை பெருகியுள்ளதே அல்லாமல் , மக்களாய் வாழ்வோரின் தொகை பெருகவில்லை. அதனால்தான் உலகத்தில் குழப்பமும் , கோளாறும், பூசலும், போரும் இன்றும் ஓயவில்லை” என்று திருவள்ளூவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலில் கூறியுள்ளார்.
இப்படி பிரபஞ்சத்தில் இருக்கும் குழப்பத்தையும் , கோளாறையும், பூசலையும், போரையும் நீக்கி தனது பிரபஞ்ச மக்களிடம் இன்பத்தையும், அன்பையும், அமைதியையும், அறத்தையும் ஏற்படுத்த பிறந்த மகன் நான் தான் தாயே!
நற்செயல்கள் மூலம் நிபந்தனையற்ற அன்பை வழங்கும் போது , இறையாற்றலை ஈர்க்கக்கூடிய சக்தியை சரீரம் பெறும் என்கிற உண்மையை நான் முழுமையாக உணர சிறிது காலதாமதமாகிவிட்டது. என்னை நான் உணர்ந்துவிட்டேன் தாயே; நான் யார் என்பது எனக்கு தெரிந்துவிட்டது தாயே! இனிமேல் நீங்கள் கண்ணிர்விட்டு கதறி அழும் இழிவுநிலை ஏற்படாது தாயே; இதுவரை மனிதன் உலகை அறிவால் மட்டுமே ஆட்சி செய்து வந்தான் , ஏனெனில் இதுவரை ஆட்சி செய்தவர்களை , அறிவு மட்டுமே ஆட்சி செய்தது தாயே! அறிவுடன் சேர்ந்து உண்மையும் , அன்பும் , அருளும் , மெய்யறிவும் ஆட்சி செய்யவில்லை. அதுதான் இந்த பூமியில் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும்; கோளாறுகளுக்கும் பூசலுக்கும் ; போருக்கும் காரணம்; அதாவது மனிதம் சார்ந்த பிரபஞ்சம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய மனிதம் சார்ந்த குருகுலக்கல்வியை இடைப்பட்ட காலத்தில் புறக்கணித்ததால் வந்த வினை அம்மா! இன்று அனைத்தையும் புறக்கணித்து இந்த புண்ணிய பாரத பூமியில் ராமரும், லட்சுமணரும், பரதரும், சத்ருக்கனரும் கற்ற குருகுலக்கல்வியை மீண்டும் நடைமுறைப்படுத்தும் காலம் வந்துவிட்டதம்மா! பிரபஞ்ச மக்களெல்லாம் ஒரு தாய் பிள்ளைகளாக வாழும் காலம் நெருங்கிவிட்டதம்மா……… நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களைக் கொண்ட இந்தியா, சர்தார் வல்லபாய்படேல் காலத்தில் ஒரே பாரத தேசமாக மாறவில்லையா! அப்படி பிரபஞ்ச நாடுகள் எல்லாம் ஒரே உலகின் கீழ் வரும் தாயே ! பிரபஞ்சத்தில் மனிதனாய் அவதரித்த உன் பிள்ளைகள் அனைவரும் சர்வதேச மொழி, சர்வதேச சட்டம் என்று ஒரு குடையின் கீழ் ஒருத்தாயின் மக்களாக வாழ்வதற்கான வேலையை பாரத தேசம், பாரத தேசத்தின் புதல்வர்கள் செய்வார்கள் தாயே!
தாயே உன் கனவு என்ன?
பிரபஞ்ச மனித மனங்கள் மகிழ்ச்சியுடனும் , மலர்ச்சியுடனும் , குளிர்ச்சியுடனும் , ரம்மியமாக மட்டுமே இருக்க வேண்டும் . பூமி பந்து சொர்க்க பூமியாகவும் , மகிழ்ச்சி பூங்காவாகவும் , புன்னகை பூந்தோட்டமாகவும் இருக்க வேண்டும் . அதை நான் செய்கிறேன் தாயே! பிரபஞ்சம் தழைக்க பூமியில் கல்கி அவதாரம் எடுத்திருக்கும் உன் மகன் நான் தான் தாயே! பிரபஞ்சம் தோன்றி மனிதன் அறிவு பெற்ற நாள் முதல் ஆதிக்க உணர்வால், போட்டி மனப்பான்மையால் மனிதனை மனிதன் கொன்ற எண்ணிக்கை கணக்கிட்டு பார்க்கும் போது! பிரபஞ்ச நாயகனாக மாறப்போகும் எனக்கே நெஞ்சு வெடித்து விடும் போல இருக்கிறது தாயே.
பிரபஞ்சத்தின் அறிவுகெட்ட மடையர்கள் தன் தவறிலிருந்து திருந்த வேண்டும் என்று பல்வேறு வகைகளில், பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து ஐ. நா சபை மூலம் பூமி பந்து அழியும் நிலையில் இருக்கிறது என்பதையும் உணர்த்தி விட்டேன் தாயே. ஐ.நா. சபை மூலம் அறிக்கை வெளியிடச் செய்தால் , உலகத் தலைவர்கள் திருந்துவார்கள்; பிரபஞ்ச மக்களை நாம் அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒரு தாய் மக்களாக வாழவைப்பார்கள் என்று நம்பினேன் தாயே! அதனால் தான் நான் என்னை வெளிப்படுத்திக்கொள்ள கொஞ்சம் தாமதமாகிவிட்டது தாயே! இனிமேலும் ஒரே ஒரு மனிதன் கூட இந்த பிரபஞ்சத்தில் துன்பம் அடைவதை ! நானும் உன்னைப் போல் பொருத்துக்கொள்ள முடியாத நிலைமைக்கு வந்துவிட்டேன் தாயே. இறுதியாக உலகில் தன்னை தலைவர்களாக நினைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஓரு எச்சரிக்கை கொடுத்து அனைவரும் திருந்த ஒரு வாய்ப்பை கொடுக்கிறேன் தாயே ! அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உன் கண்ணீரை துடைப்பார்கள் தாயே. அதன் பின்னும் பிரபஞ்ச உயிர்களை நேசிக்காத மூடர்களாக , உலகத் தலைவர்கள் யாராவது இருந்தால் ! அவர்களுக்கு நான் யார் என்பதை புரிய வைத்து!! நிச்சயம் உன் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவழைப்பேன் தாயே; இது சத்தியம்.
உங்கள் கண்ணில் சிறு தூசு பட்டாலோ , காலில் சிறு முள் குத்தினாலோ தாங்க முடியாமல் கதறி அழும் உலகத் தலைவர்களே ! பிரபஞ்சத்தின் காஸா, உக்ரைன் , நைஜிரியா போன்ற பல பகுதிகளில் மனிதனுக்கு இவ்வளவு அறிவு வளர்ந்த பின்னும் , பொது மக்களை… மனிதனை மனிதன் கொல்லும் கொடூரத்தை உலகத் தலைவர்களான நீங்கள் எப்படிப் பொறுத்துக்கொள்கிறீர்கள் ? உலகத்தின் நாடுகளில் பெரிய மனிதர்களாக இருக்கும் உலகத்தின் உதவாக்கரை உத்தம தலைவர்களே! உங்கள் வீட்டில் , நீங்கள் அன்பு செலுத்தும் , ஒரு பிள்ளை கொல்லப்பட்டால் ! இப்படிப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பீர்களா?
உங்கள் வீட்டில், உங்கள் ஊரில், உங்கள் நாட்டில் நீங்கள் அன்பு செலுத்தும் ஒருவன் இறந்தால் கதறி கதறி அழுவீர்கள். அதே மரணம் , நீங்கள் பிரபஞ்ச உயிர்கள் மீது தொடர்பு இல்லாமல் இருப்பதால் , பிரபஞ்ச உயிர்களிடம் அன்பு செலுத்த முடியாத ஈனர்களாக இருப்பதால் ! பிரபஞ்சத்தாயின் வேறு ஒரு வீட்டில் , வேறு ஒரு ஊரில், வேறு ஒரு நாட்டில் நடக்கும் , மனிதனை மனிதன் கொல்லும் கொடூரத்தைக் கண்டு, பிரபஞ்ச உயிர்களை நேசிக்கும் நமது பிரபஞ்சத்தாயின் அழுகுரல்கூட கேட்காத அளவிற்கு மூடர்களாக இன்றைய உலகத் தலைவர்கள் பலர் இருக்கிறீர்கள்!
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் தமிழில் பாரதி. இனி அதே நிலைதான் களரிராஜாவிற்கும் ; இனிமேல் பிரபஞ்சத்தில் ஒரே ஒரு மனிதன் கூட செயற்கையாக மரணம் அடைவதை , துன்பத்தால் கண்ணீர் வடிப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. அப்படி உலகத் தலைவர்கள் அனுமதித்தால் ! “நான்” என்னும் நீங்கள் அழிக்கப்படுவீர்கள். இனிமேலும் பிரபஞ்சத்தாயின் கண்களில் கண்ணீர் வருவதை என்னால் அனுமதிக்க முடியாது என கல்கி அவதாரமான களரிராஜா தீர்மானித்தான். இந்த முடிவை தன் பிரபஞ்சத்தாயிக்கும் அறிவித்தான். அம்மாவின் அழுகை தற்காலிகமாக நின்றது . அம்மாவின் கண்களில் ஆனந்தகண்ணீர் வரவழைப்பதற்கான செயல்பாடுகளில் களரிராஜா தீவிரமானான். மகனின் வெற்றிக்காக பிரபஞ்சத்தாய் தவமிறுக்க ஆரம்பித்தாள். வாழ்க மகன், வெல்க பிரபஞ்சத்தாய் என பிரபஞ்ச மக்கள் மனதார வாழ்த்தினார்கள்.
-மீஞ்சூர். டாக்டர். பெ. இராஜகோபால்