'அண்ணே உங்களுக்கு ஃபோன்! நம்ம வேலா அண்ணன்...' 'என்னது? வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்... ஏன்டா? உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்...?' என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு 'இல்ல... வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான்.. சொல்ல வந்த நான்' என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது. 'இந்தாங்க பிடிங்கண்ணே!' என்று செல்ஃபோனை என்னிடம் தந்துவிட்டு நான் மறைந்திருக்கும் பாதுகாப்பான நிலவறைப் பதுங்குகுழியை விட்டு சட்டென […]