அச்செய்தி அவளது காதினில் விழுகையில், நெஞ்சுரைக்கூட்டுக்குள் இடி இறங்குவதைப் போலிருந்தது. அவள் ஓடிச்சென்று அவளது அப்பனை எழுப்பினாள். அவரோ நிறைமது மயக்கத்தில், எழுப்பியக் கையைத் தட்டிவிட்டபடி, போர்வையை இன்னும் தலை வரைக்குமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவராக இருந்தார். பூங்குழலிக்குத் தெருவை எழுப்புவதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை. நடுநிசி நேரம். மச்ச இருட்டு. கூகை, சாத்தான் சொல்லும் செய்திக்கு 'இம்' போடுவதைப் போல முணங்கிக்கொண்டிருந்தது. அதைக் கேட்கயில், நிணநீர் உறைவதைப் போலிருந்தது. இந்தக் கூகையைப் பிடித்து […]