\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பனியில் கார்டினல் குருவி (Northern Cardinal)

அழகான பிரகாசமான சிவப்பு சிறகுகளும், சொண்டுகளையும் அதே சமயம் நிற வேறுபாடு தரும் கன்னங்கவரும் கறுப்பு நிற கண் பகுதிகளைக் கொண்ட பறவைதான் கார்டினல் குருவி. இது மினசோட்டா மற்றும் வட கிழக்கு அமெரிக்கக் கண்டத்தில் இலகுவாக அடையாளம் காணக்கூடிய பறவையாகும். குறிப்பாக வெள்ளைப் பனிப் பின்னணியில், இலையற்ற செடிகள், மரங்களில் இருந்து பாடுவது கண் குளிர் காட்சியாகும்.

இந்தக் குருவி இலத்தீன் பறவை வகைப் பிரித்தலில் Cardinalis cardinalis என்று அழைக்கப்படும். கார்டினல் பொதுவாக பத்தைக்காட்டு எல்லைகளில், அடர்த்தியான செடி கொடிகள், நகர், ஊர் பூங்காக்கள் போன்றவற்றில் வாழ்வன. கார்டினல் பறவைகள் பனியில் புலம் பெயர்ந்து போகாது, நமது அயல் சுற்றாடலில் வாழும்.

இந்தப் பறவைகளில் ஆண்கள் அதி சிவப்பு இறகுகளையும், பெண் பறவைகள் சற்று சிவப்பு,சாம்பல் நிறங்களைக் கொண்டதாகவும் பொதுவாக் காணப்படும். ஆயினும் நாட்டின் சில பாகங்களில் மஞ்சள் சார்ந்த சிவப்புக் கூடிய பறவைகளையும் கண்டு கொள்ளலாம். பறவைகளில் ஆண்கள் சுமார் 8-9 அங்குலம் (20-23 cm) நீண்டவை.

கார்டினல் சூரிய காந்திப் பூவிதைகளை விரும்பிச் சாப்பிடும். எனவை இப்பேர் பட்ட விதைகளை பறவைகள் உணவுத் தட்டுகளில் வைத்து, உங்கள் வீட்டருகே கார்டினல்களை வரவேற்றுக்கொள்ளலாம். உணவுத்தட்டுகள் சற்று செடிகள் மரங்கள் அருகே வைத்துக் கொண்டால் பறவைகள் பயமற்று வந்து போக வசதிப்படும். பொதுவாக கார்டினல் குருவிகள் இயற்கையில் விதைக்கள்,பெரிப் பழங்கள், சிறு பூச்சிகள், வண்டுகள், வெட்டுக்கிளி grass hoppers, அட்டைகள் centipedes, மசுக்குட்டிகள் caterpillars, சிலந்திகள், நத்தை போன்றவற்றைத் தின்னும்.

இந்தக்குருவிகள் வருடத்தில் 3-4 முட்டைகளை இடும். இந்த முட்டைகள் இளம் நீலத்தில் இருந்து வெண் பச்சை, அதில் மண்ணிறம், ஊதா, சாம்பல் நிற பொட்டுகள் கொண்டு இருக்கும். முட்டைகள் பெண்பறவையால் மாத்திரம் அடைகாக்கப்படும். இளம் குஞ்சுகள் சுமார் 12-13 நாட்களில் பொரியும். முட்டைகள் பொருந்ததும் குஞ்சகளுக்கு தாய்,தகப்பன் இரண்டு குருவிகளும் உணவூட்டம். சிறு பருவத்தில் கார்டினல் குருவிகள் தமது குஞ்சுகளுக்கு மணித்தியாலத்திற்கு 8 தடவைகள் வரை உணவூட்டும்.

இளம் காரிடினல் பறவைகள் பொதுவாக 9-11 நாட்களில் கூடுவிட்டுப் பறந்து விடுகின்றன. வட அமெரிக்காவில் வருடத்தில் கார்டினல் குருவிகள் 2-3 முறை முட்டையிடும். கார்டினல் பறவைகள் 13-15 வருடங்கள் இயற்கைச் சூழலில் வாழ்வன.

இந்தப்பறவைகளை தமது விளையாட்டு கூட்டமைப்புக்கள், வர்த்தக தாபனங்களுக்கும் பெயரிடப்பட்டிருத்தல் நாம் வட அமெரிக்காவில் காணலாம். உதாரணமாக தற்போது Delta எனப்படும் விமான சேவை 1990களில் Northwest Airlines என்ற மினசோட்டா சேவையைக் கொள்வனவு செய்து பெரிதானது. இந்த Northwest Airlines இன் சின்னம் கார்டினல் பறவைசார்ந்து அமைந்தது என்பது மாநில வரலாறு. இது போன்று அமெரிக்க National Foot Ball Leagues (NFL) குழுமியங்களில் Arizona Cardinals, மற்றும் Baseball விளையாட்டில் St. Louis Cardinals இந்தப் பறவையை வைத்து பெயர் சூடிக் கொண்டனர்.

மினசோட்டா, மற்றும் வட கிழக்கு அமெரிக்க வாழ் மக்களுக்கு பனிகாலத்தில் பரவசமான காட்சி யன்னல் ஊடு பறவைகளை பார்ப்பதும் எனலாம். பல ரக சிறிய பறவைகள் வருகை தந்தாலும் அதில் கார்டினல் குருவி மனதிற்கும் மகிழ்ச்சி தரும் ஒரு காட்சியே ஆகும்.

 

  • யோகி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad