Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இலத்திரனியல் திரையில் பார்ப்பதும் காகிதத்தில் கிரகித்தலும்

சந்தர்ப்பம், சூழல், தொழிநுட்ப நவீனங்கள் எமது வாழ்வைத் தொடர்ந்தும் மாற்றியவாறே உள்ளன என்பதை நாம் அறிவோம். மாற்றங்கள் யாவும் முன்னேற்றத்திற்கு உரியன என்று கூறிக்கொள்ள முடியாது. இதை நாம் படிக்கும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் என்று எடுத்துப் பார்த்தால் சில விடயங்கள் தெளிவிற்கு வரும். சென்ற பலவருடங்கள் அச்சுத்தாளில் தயாரிக்கப் பட்டு காகித வாசிப்பில் இருந்து கணனி உபகரணங்களில் desktop, notebook இருந்து இன்று பலவித கைத் தொலைபேசி smart phone,  தட்டு ஏடுகள் Tables கொண்ட இலத்திரனியல் திரைகளுக்கு மக்கள் மாறியுள்ளனர்.

குறிப்பாக கடந்த இரண்ட வருடங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது, மாணவர்கள் பாடசாலை வகுப்பறையில் இருந்து தொலைதூர, இணையத்தளத்துடன் Online கற்றலுக்கு மாறினர். வலைத்தளங்கள் மற்றும் பிற இலத்திரனியல் மென்பொருள் வகைகளும் பாடப்புத்தகங்களையும் மற்றும் பணித்தாள்களை அவசர, அவசரமாக டிஜிட்டலாக மாற்றினர். இந்த தகவல் பரிமாற்று விதங்களை எடுத்துப் பார்த்தால் டிஜிட்டல் புத்தகங்கள் ஏறத்தாழ ஒரு தசாப்த்திற்கு மேலாக எங்களுடன் உள்ளன. ஆயினும் எமது தலையாய கேள்வி நாம் அதையெல்லாம் உபயோகித்து எவ்வளவாக உள்வாங்கிக் கொள்கிறோம்?  என்பதே.

இலத்திரனியல் திரை நவீனமாகவும், சுலபமாக உபயோகிக்கலாம் என்று எண்ணப்பட்டாலும், அதை விட அச்சுக் காகிதம் புரிந்து கொள்ள எளிதானது என்பதும் தற்போது பல ஆய்வுகள் தரும் ஒரு செய்தி ஆகும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல எனபது ஒரு தமிழ் பழமொழி. எனவே வாருங்கள் நாம் இது பற்றி சற்று கலந்து ஆலோசிப்போம். இதில் காகிதப் புத்தகத்தை தலையாயதாக கொண்ட தலைமுறைகளுக்கும், தட்டுப்பலகை இலத்திரனியல் திரையை முக்கியமாகக் கொள்ளும் தலைமுறைகளுக்கும் இடையே பழக்கதோச வேறுபாடுகள் உண்டு என்பதை நாம் தெரிந்து கொண்டு, மேற்கொண்டு அணுகுவோம்.

அச்சுப் படிமம், புத்தகம் வாசிப்பு என்பது ஒரு தியானம் போன்றது. இது ஏதோவொன்றில் எங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. மேலும் அச்சுப் புத்தகத்தை வாசிக்கும் போது அது டிஜிட்டல் திரை போன்றது அல்ல. அதில் நுகர்வோர் கவனத்தை அதிகமாக தூண்டுதல்களுக்குரிய யுக்திகள் உபயோகித்தல் – மேலும் அதற்கு அவர்கள் தொடர்ந்து சொடுக்கல்கள், விரலசைவுகள், எங்கு அவர் கண்கள் போகின்றன அனுமானிப்பு செய்து பதிலளிக்க வைப்பதைப் போன்றது அல்ல. புத்தகம் வாசிப்பவர் அனுபவம் முற்றிலும் வேறுபட்ட வகையான வகையில் உபயோகிப்போரை மூழ்கியது எனலாம். மனிதர்களாகிய நாம் தொடர்ந்தும் நகராத, தாவித் தாவி சொடுக்கிப் போகாத அல்லது தேவைக்கு மேலாக நம் கவனத்தை ஈர்க்காத ஏதோவொன்றுடன் அமர்ந்திருப்பது ஆரோக்கியமானது. இது நாம் வாசிப்பதைக் கிரகிக்க, நேரம் எடுத்து மனதில் பதிந்து கொள்ள உதவும்.

இந்த பல முனை மனத் திருப்பல் செய்யும் டிஜிட்டல் திரையை விட அச்சுப் புத்தகம் ஒருவர் பார்வை செயற்பாட்டை குறைவாகவே கோருகிறது. இது ஒரு பக்கத்தில் உள்ள சொற்களைப் புரிந்து கொள்ள, செயலாக்க வாசகர்களுக்கு உதவுகிறது. மேலும் புத்தகத்தின் அச்சுத் தாள் பக்கத்தில் இடஞ்சார்ந்த மற்றும் தொட்டுணரக்கூடிய குறிப்புகளை வழங்குகிறது.

வாசிப்பதைத் புரிந்து, கிரகித்துக் கொள்ள வாசிகர் மனநிலையும் ஒரு காரணியாக இருக்கலாம். உதாரணமாக eMarketer தரவுகளின் படி 2020 இல் 470 நிமிடங்களையும், 2021 இல் 477 நமிடங்களையும் 2022 இல் சராசரியாக அமெரிக்காவில் தினமும் 482 நிமிடங்களை டிஜிட்டல் திரையில் செலவு செய்துள்ளனர். மக்கள் திரை நேரத்தை சாதாரண வலை-உலாவலுடன் தொடர்புபடுத்தினால், அவர்கள் உரையை முழுமையாக உறிஞ்சாமல், நுகர்ந்து விளக்கம் தெரிந்து கொள்ளாமல் விரைந்து செல்லலாம்.

நீங்கள் இதற்கு ஒரு விதிவிலக்கு என்று நினைக்கிறீர்களா? இல்லவேயில்லை. தெரிந்தும், தெரியாமலும், நுகர்வு விளக்கம் இல்லாது டிஜிட்டல் திரை கொண்ட கைத்தொலைபேசி, மின் ஏடு Tablet, கணினி, தொலைக்காட்சி உபயோகிக்கும் பெரும்பாலான மக்கள் இதனைச் செய்கிறார்கள். டிஜிட்டல் வாசிப்பு மக்கள் தாம் பல விடயங்களை புரிந்து கொள்கிறோம் என்ற அதிக நம்பிக்கையை வளர்ப்பதாக ஆய்வுகள் கண்டறிந்தன.

நாங்கள் டிஜிட்டல் திரையில் மிக விரைவாகப் படிக்கிறோம், எனவே நாங்கள் அதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இது நம்மை சூழ்ந்துள்ள டிஜிட்டல் உலகின் சிறந்த பகுதிகளில் இது ஒன்றாகும். தகவல் எல்லாம் எங்கள் விரல் நுனியில் உள்ளது, மேலும் ஒரு நொடியில் தலைப்புச் செய்திகளைப் பெற முடியும். ஆனால் இது ஆபத்துக்களில் ஒன்றாகவும் இருக்கலாம். எல்லாம் மிகவும் விரைவானது மற்றும் அணுகக்கூடியது, எனவே நாம் உண்மையில் நாம் வாசிப்பதை கிரகிக்காமலும் இருக்கலாம். எனவே டிஜிட்டல் வாசிப்பு மேலோட்டமான செயலாக்கத்திற்கு சமம் இது மாடு மேல் புல் மேய்வது போலும் ஆகிவிடலாம்.

2016 ஆம் ஆண்டில், பாடகர் லொரன் சிங்கர் டிராக்மன் Lauren Singer Trakhman (University of Maryland, College Park) இளங்கலை மாணவர்களின் வாசிப்பு புரிதலை ஆய்வு செய்தார், அவர்கள் கட்டுரைகளின் டிஜிட்டல் மற்றும் அச்சு பதிப்புகளைப் படித்த பிறகு. வடிவமைப்பு முக்கிய யோசனை பற்றிய அவர்களின் பிடியை பாதிக்கவில்லை, ஆனால் மாணவர்கள் திரைகளில் படிக்கும் போது விவரங்களைத் தவறவிட்டனர்.

டிஜிட்டல் வாசிப்பு புரிதலைக் குறைக்கிறது, இது குறிப்பாக நீண்ட, மிகவும் ஆழமான, சிக்கலான,  பல்திறக்கூட்டொருமை தகவல்கள் தரும் நூல்களுக்கு, நோர்வே ஸாடாவெஞ்ஜெர் பல்கலைக்கழக இலக்கிய பேராசிரியர் ஆன் மங்கன் அவர்கள் (University of Stavanger, Norway). இது மேலோட்டமான கருதுகோளின் காரணமாக இருக்கலாம் – வேகமான, டிஜிட்டல் ஊடகத்தின் தொடர்ச்சியான வெளிப்பாடு, தகவல்களை விரைவாகவும் குறைவாகவும் முழுமையாகவும் செயலாக்க மூளையைப் பயிற்றுவிக்கிறது.

இன்னொரு விடயம் என்னவென்றால் டஉண்மையான நூல்களைப் படிப்பது குறித்து மூளை, நரம்பியல் விஞ்ஞான ஆராய்ச்சிகள் அதிகம் இல்லைட என்கிறார் மங்கென். இருப்பினும், தற்போதுள்ள ஆராய்ச்சி சில தடயங்களை வழங்குகிறது. ஒரு 2009 ஆய்வில், சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி நிறுவனமான மில்வார்ட் பிரவுன் மூளை உடல் மற்றும் டிஜிட்டல் பொருட்களை வித்தியாசமாக செயலாக்குவதைக் கண்டறிந்தது.

திரையில் பார்ப்புதும், அச்சுத் தாள் வாசிப்பதற்கும் இடையே உள்ள மூளை தொழில்பாடுகள்

மேலே கூறப்பட்ட சோதனையில் பங்கேற்பாளர்கள் எஃப்.எம்.ஆர்.ஐ FMRI (Functional magnetic resonance imaging) அலகிடு/ஸ்கேன் செய்யும்போது ஒரு திரையிலும் அச்சிடப்பட்ட அட்டையிலும் விளம்பரங்களைப் பார்த்தனர். அச்சுப் பொருட்கள், உணர்ச்சிகளைச் செயலாக்குவதில் ஈடுபட்டிருக்கும் மூளையின் இடைநிலைப் புறணி medial prefrontal cortex  மற்றும் மூளையின் இருபக்கமும் உள்ள வளைந்து நரம்பு மூட்டை உள்ளுரி cingulate cortex  ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்பட்டது. இவை பெரும்பாலும் வாசிப்பவர்கள் உணர்ச்சிகளை உண்டு பண்ணுவதில் பங்கேற்றின.

ஆயினும் அச்சு படித்தல் முதிர்முன்னகப் பெருமூளை/முன்நெற்றிப் புறணி parietal cortex அதிக செயல்பாட்டை உருவாக்கியது. இந்த மூளைப்பகுதி காண்ணினால் பார்த்து விவரமாக அறிந்து கொள்ளும் காட்சி, மற்றும் இடஞ்சார்ந்த (location) குறிப்புகளை செயலாக்குகிறது.

திரை உருட்டிக் Scrolling கொண்டே இருக்கலாமா அல்லது பக்கத்தை திருப்ப வேண்டுமா?

மனித மூளையானது தனது தப்புதலுக்காக Survival உரு மாதிரி அறிதலிலும் pattern recognition இருப்பிடம் அறிந்து கொள்ளுதலிலும் பிரதானமாக செலவளிக்கிறது. location recognition. இதுவே எமது மனித மூளையின் பல மில்லியன் வருட பரிணாம வளர்ச்சி நிலைப்பாடு. டிஜிட்டல் திரை மூலம் உருட்டிக்கொண்டே போவது மனித மூளையின் இடஞ்சார்ந்த சவால்களை உருவாக்குவதன் மூலம் புரிதலை பாதிக்கலாம்.

2017 ஆம் ஆண்டு ஒரு கிரகிப்பு ஆய்வில் பங்கேற்பாளர்களின் வாசிப்பு புரிதல் ஒரு வரைகதை புத்தகத்தின் (comics book) தனிப்பட்ட வரைபடப் பெட்டிகள்/cartoon panels மூலம் வாசிக்க திரை உருட்டல் செய்த போது கிரகிப்பு பாதிக்கப்பட்டதைக் கண்டறிந்தது. அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பதற்குப் பதிலாக. நாம் வாசிக்கும்போது, ஒரு புத்தகத்தின் மேல், இடது பக்கத்திற்கு அருகில் ஒரு துண்டு தகவல் தோன்றியது என்பதை நினைவில் கொள்வது போல, நமது மூளை உரையின் அறிவாற்றல் வரைபடத்தை உருவாக்குகிறது. ஆனால் ஒரு வலைப் பக்கத்தைப் போல, தொடர்ந்து நகரும் அடையாளங்களுடன் ஏதாவது ஒரு வரைபடத்தை வரைவதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு நிலையான இடத்தில் இல்லாத சொற்களை வரைபடமாக்குவது கடினம், ஏனென்றால் மூளையின் கிரகிப்பு பிம்பங்களில் நாம் முக்கியமான “காட்சி ஒதுக்கிடங்களை” இழக்கிறோம்.

திரையை உருட்டுவது எங்கள் மூளையின் வேலை நினைவகத்திலிருந்து  working memory மேலும் அதிகமாக் கோருகிறது. எங்கள் வேலை நினைவகத்தில், நாம் ஒரு நேரத்தில் சுமார் ஏழு பொருட்களை வைத்திருக்க முடியும், எனவே படிக்கும் போது இலக்கு முடிந்தவரை பல வாசிப்புக் கோரிக்கைகளை எடுத்துக் கொள்கிறது.. நாம் என்ன படிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருக்கும்போது, எங்களுக்கு காகிதப் புத்தகத்தில் உதவும் இடஞ்சார்ந்த குறிப்புகள்/அடையளங்கள் location based reference கிடைப்பது இல்லை. எனவே திரையை உருட்டுவது எங்கள் மூளையின் கிரகிப்பு அலைவரிசையில் Bandwidth பிரத்தியோக சிலவற்றை எடுத்துக்கொள்கிறது. அதன் பக்க விளைவு ஒப்பீட்டளவில் கிரகிப்புத் தன்மை குறைதலே ஆகும்.

கூடுதலாக, இலத்திரனியல்/LED திரைகளின் நிலையான மினுமினுப்பு பளபளப்பு நம் கண்களுக்கு அதிக வேலைகளை உருவாக்குகிறது, இது காட்சி நீண்ட உபயோகத்தில் மன சோர்வையும் ஏற்படுத்துகிறது. சராசரியாக இன்று அமெரிக்காவில் 7:30 மணித்தியாலங்கள் இலத்திரனியல் திரை முன்னர் கைத் தொலைபேசி முதல் தொலைகாட்சி வரை செலவிடப்படுகிறது. இதில் பெரும்பகுதி மூளை கிரகிப்பதில்லை. இது வெறும் திரையில் ஏதோ ஓடுவதை அவதானித்து உள்ளெடுக்காமல் காட்சிப் பார்ப்பது மட்டுமாகவே காணப்படுகிறது.

இருப்பினும், இன்று கின்டெல் Kindle போன்ற இலத்திரனியல் வாசிப்புப் பலகைகள் கண்ணிண் வாசிக்கும் சிரமங்களைக் குறைக்கின்றன. இவை மற்றய டிஜிட்டல் திரைகளை விட உயர்ந்தவை தான். ஆனால் இலத்திரனியல் பலகைகள் வாசிப்பு அனுபவத்தின் ஒரு முக்கியமான அம்சத்தைக் கொண்டிருக்கவில்லை. அதாவது கைவிரலால் அச்சுத்தாள் பக்கத்தைத் திருப்புதல் போன்ற அனுபவம் கிடைப்பதில்லை.

நோர்வே பேராசிரியை மாங்கனின் ஆய்வுகளில் ஒன்றில், பங்கேற்பாளர்கள் ஒரு கின்டெல் அல்லது அச்சில் ஒரு கதையைப் படித்து, பின்னர் புரிதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 2000 ஆம் ஆண்டை விட அச்சுகளின் நன்மைகள் இப்போது அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனினும், இந்த டிஜிட்டல்-திரை வாசிப்பு கிரகிப்புச் சிக்கலை முழுதாக அகற்றவில்லைய

இந்த கண்டுபிடிப்பு மேலோட்டமான கருதுகோளுடன் தொடர்புடையதாக இருக்கின்றது எனலாம். அதாவது நாம் வாசிப்பதை தொடர்வதற்கு திரையில் படிக்கும்போது சரி அச்சுத்தாளில் வாசித்தால் சரி வாசித்துப் புரிந்து கொள்வதைக் கைவிடக்கூடாது. ஆயினும் நமது வாசிப்பு ஊடகத்தைத் தேர்ந்தெடுக்கும் போது அதன் பொருத்தமான நிலைமையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நேரம் ஓடுகிறது தகவல்கள் சிதறிக் கொண்டிருக்கின்றன, மேலும் வேகமாகவும் மேலோட்டமாகவும் வாசிப்பதன் மூலம் ஏதோ சமாளிக்க முயற்சிக்கிறோம். தற்போத கால கட்டத்தில் எல்லோரும் எல்லா நேரத்திலும் அச்சுப் பிரதியைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை.

திரையில் தகவலை வாசித்கு கிரகிக்க மெதுவாக்கவும் முக்கிய எடுத்துச் செல்லவேண்டிய தகவல்களை கையெழுத்தாக ஆக குறிப்பெடுத்துக் கொள்ளதுல் ஒரு நல்ல கைமுறை. இலத்திரனியலே தம்மார்க்கமகாக் கருதுபவர் தட்டச்சு வேலை செய்கிறது என்றெல்லாம் கூறலாம், ஆனால் கையெழுத்து எமது மனித மூளையைப் பொறுத்தளவில் ஒரு சிறந்த நினைவக கருவியாக இன்றும் இயங்குகிறது. கண்ணினால் பார்ப்பதும், வாசிப்பதும், மூளையால் கிரகிக்கப் படுவதும், கை விரல்காளால் குறிப்பு எழுதுவதும் மூளையின் தகவல் கிரகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது என்பது பல்லாயிரம் ஆண்டு மனித அனுபவங்களே ஆகும். இது டிஜிட்டல் மாற்றியதாக ஆதாரங்கள் இன்றும் இல்லை.

நீங்கள் டிஜிட்டல் உலகில் இருந்து ஒரு இடைவெளி தேவைப்படும் போது, காகிதம் மற்றும் மை சக்தி குறைத்து மதிப்பிட வேண்டாம். உங்கள் மின்னணு சாதனங்களை முடக்குவது, ஒரு புத்தகத்தைப் பெறுவது மற்றும் பக்கத்தைத் திருப்புவது ஆகியவற்றைக் கவனியுங்கள்.

    யோகி

உச்சாந்துணைகள்.

  1. Overcoming screen inferiority in learning and calibration – Tirza Lauterman, Rakefet Ackerman, Computers in Human Behavior, Volume 35, 2014, Pages 455-463, ISSN 0747-5632
  2. Reading Across Mediums:Effects of Reading Digital and Print Texts on Comprehension and Calibration, Lauren M. Singer & Patricia A. Alexander (2016): The Journal of Experimental Education
  3. Comparing Comprehension of a Long Text Read in Print Book and on Kindle: Where in the Text and When in the Story?. Mangen, Anne & Olivier, Gerard & Velay, jean-luc. (2019). Frontiers in Psychology.
  4. Reading linear texts on paper versus computer screen: Effects on reading comprehension, – Anne Mangen, Bente R. Walgermo, Kolbjørn Brønnick, International Journal of Educational Research, Volume 58, 2013, Pages 61-68,ISSN 0883-0355,
  5. Cognitive map or medium materiality? Reading on paper and screen, Jinghui Hou, Justin Rashid, Kwan Min Lee, Computers in Human Behavior, Volume 67, 2017, Pages 84-94, ISSN 0747-5632,

 

 

Leave a Reply

Your email address will not be published.

banner ad
Bottom Sml Ad