\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பனிப்பூக்கள் 2022 சிறுகதைப்போட்டி முடிவுகள்

​​

சென்ற ஜனவரி மாதம், பனிப்பூக்களின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியினை  அறிவித்திருந்தோம். ‘மனித உறவுகள்’ என்ற கருவின் அடிப்படையில் ஏராளமான கதைகள் எமக்கு வந்து சேர்ந்தன. உலகெங்கிலுமிருந்து அருமையான படைப்பாற்றலுடன்,  சிரத்தையெடுத்து போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பனிப்பூக்களின் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதுடன், தொடர்ந்து படைப்புகளை அளித்திடவும் வேண்டுகிறோம்.

போட்டிக்கு வந்திருந்த கதைகள் ஒவ்வொன்றும் உறவுகளின் பரிமாணத்தை வெவ்வேறு கோணங்களில், யதார்த்தத்துடன், மிக நேர்த்தியாக, அழுத்தமாகப் பதிவு செய்திருந்தன. கதைகளை வாசித்த எமது நடுவர் குழுவினர், வார்த்தைகளால் வருணிக்க முடியாத மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  அனைத்து நுழைவுகளும் ரத்தினமாக ஜொலித்ததால், அவற்றைத் தரவரிசைபடுத்துவதில் எமது குழு திக்குமுக்காடிப் போக நேர்ந்தது என்பது தான் உண்மை. தனித்துவத்துடன் அமைந்திருந்த அனைத்துக் கதைகளுமே பரிசுக்குரியவை என்றாலும், அறிவிப்பில் சொல்லியிருந்தபடி மதிப்பெண் பட்டியலில் முதல் மூன்று படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறோம். நூலிழையில் பரிசுப் பெறும் வாய்ப்பை நழுவவிட்ட படைப்பாளர்களும் விரைவில் பரிசுப் பட்டியலில் இடம்பெற வாழ்த்துகிறோம்.

பரிசு பெற்றவை உட்பட, அனைத்து கதைகளும் வரும் வாரங்களில் பனிப்பூக்கள் சஞ்சிகையில் வெளியாகும்.

இதோ இவ்வருடப் போட்டியில் பரிசு பெறும் மூன்று படைப்பாளிகள். பனிப்பூக்கள் மற்றும் கானம்பாடி பதிப்பகம் சார்பில் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.

பரிசு பெறும் சிறுகதைகள்:
முதலாவது பரிசு –  மணிமாலா மதியழகன், சிங்கப்பூர் எழுதிய “பலி
இரண்டாம் பரிசு –  எஸ் ராமன்,தியாகராய நகர், சென்னை, இந்தியா எழுதிய  “பதியம் போட்ட உறவுகள்
மூன்றாம் பரிசு –  தமிழ்ச்செல்வி இராஜராஜன், சிங்கப்பூர் எழுதிய “வெங்காய முட்டையும் ஞாயிற்றுக் கிழமையும்”
வாழ்க தமிழ், வளர்க வையகம்
பனிப்பூக்கள் சஞ்சிகை

ISSN 2326-7763 (Online) | P.O. Box 3021, Burnsville, MN 55337, USA

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Lakshmi says:

    Same prize winners every year.

Leave a Reply to Lakshmi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad