IAMன் GOLF 2022
மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கால்ஃப் (GOLF) விளையாட்டுப் போட்டியைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் அதேபோல், அக்டோபர் ஒன்றாம் தேதி ஹேமல் (Hamel) நகரில் உள்ள ‘பேக்கர் நேஷனல் கால்ஃப் கோர்ஸ்’ இல் (Baker National Golf Course) போட்டி நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென இரு பிரிவுகளில் இந்த விளையாட்டு இடம்பெற்றது.
பலர் இந்தப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். இரவு உணவுடன், பாராட்டு விழா நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக!
- ராஜேஷ் கோவிந்தராஜன்.
 





							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
							
													
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
											
								

	