\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நானே சிந்திச்சேன் – ஜனநாயகத் திருவிழா

வீட்டுக் காலண்டர், அன்றைக்கு என்ன கிழமைன்னு சொல்லுதோ இல்லையோ, ஜனாவிடமிருந்து ஃபோன் வந்தால் அது ஞாயிற்றுக்கிழமையென்று அடித்துச் சொல்லலாம். ஃபோனை எடுத்து ‘ஹலோ’வென்று சொல்லும் முன்னரே 

“மச்சி .. லைன்ல யாரு இருக்குறதுன்னு சொல்லு?” என்றான்.

“இதென்னடா கேள்வி.. நீ ஃபோன் போட்டா நீ தான் லைன்ல இருப்ப .. கூட, வீணா போன வரது வேணா இருப்பான்..”

“என்னடா இப்டி பொசுக்குனு இன்சல்ட் பண்ணிட்ட.. நல்ல வேளை அவன இன்னும் நான் ‘கான்ஃப்ரன்ஸ்’ பண்ணல.. இது வேற.. யாருன்னு கண்டுபிடி பாப்போம்”

ஃபோனைப் பார்த்தான் வோல்ட்… எதோவொரு ‘ஏர்டெல்’ நம்பர் என்பது மட்டும் புரிந்தது..

“டேய் ஆடியோ கால்ல எப்படிடா தெரியும்? ஹலோ, யாருங்க லைன்ல இருக்கறது?”

“டேய் வோல்ட்டு .. எப்புட்றா இருக்க?” என்றது ஒரு குரல்.

“சாரி… யாருன்னு சரியா புரில..” என்று இழுத்தேன்.

“அர்னால்டு மச்சி .. அரும்பாக்கம் அர்னால்டு” என்று ஒரு வழியாகப் பேரைச் சொன்னான் ஜனா..

“ஏ.. அர்னால்டு.. எப்டியிருக்க? சாரி மச்சி, குரல் கேட்டு ரொம்ப நாளாச்சு.. அதுமில்லாம கொஞ்சம் ‘நேசலா’ இருந்துச்சா.. சட்டுனு கனெக்ட் பண்ணிக்க முடில.. ஜலதோஷமா என்ன?”

“வுடு, வுடு .. மறண்டேன்னு சொல்லு.. அதுக்கு எதுக்கு கம்பி கட்டற இப்போ? சரி சொல்லு, ‘ஃபேமிலில’ எல்லாம் எப்டியிருக்காங்கோ?”

“அர்னால்டு தான் ஃபோன் பண்ணான் மச்சி எனக்குகூட டக்குனு புரில.. அதான் உன்னையும் கோத்துவுட்டேன்..” என்று சிரித்தான் ஜனா.

“சும்மா தான் கூப்டிருந்தேன் .. திருவிழால்லாம் வருதே, என்னா ப்ளான் பண்ணிக்கிறீங்கோன்னு கேக்க நெனச்சேன்..” என்றான் அர்னால்டு.

“திருவிழாவா? என்ன திருவிழா? எங்க நடக்குது?” கான்பிரன்ஸில் சேர்ந்துகொண்ட வரது கேட்டான்.

“என்னாடா இப்டி கேக்குற? ஜனநாயகத் திருவிழா தான் “

“ஜனநாயகமே இருக்கா இல்லையான்னு தெரியல.. இதுல என்ன திருவிழா?” 

“என்னடா வோல்ட்டு இப்டி அலுத்துக்கறே? எக்ஸ்ட்ரா துட்டு கிடைக்குதா இல்லையா? அப்படின்னா திருவிழா தானே?”

“எக்ஸ்ட்ரா துட்டா? நம்ப ஊர்ல மட்டுந்தான் அதெல்லாம் ‘பாசிபிள்’ மச்சி.. இங்க நம்பகிட்டருந்துதான் புடுங்குவானுங்க..” என்றான் ஜனா.

அர்னால்ட் தொடர்ந்தான், “நாங்களும் புடுங்குவோம்… ஆனா அது வேற மாதிரி.. கிட்டத்தட்ட ‘ராபின் ஹுட்’ கால டெக்னிக்குன்னு வெச்சிக்கியேன்.. என்னா ஒன்னு, ‘ராபின் ஹூட்’ மாதிரி திருட மாட்டோம்… ஜெண்ட்லா மிரட்டுவோம்.. தானா கொண்டு வந்து குடுப்பாங்க.. ஏழைகளுக்குக் கொடுத்துடுவோம்..”

“ஏன்டா .. இது அந்த ‘ரவுடி’ கேட்டகரில வராதா..”

“இதுல எங்க ரவுடித்தனம் வருது.. தானா விருப்பப்பட்டு குடுக்கிறாங்கோ.. சரி அத வுடு.. உங்க ஊர்ல ரெண்டே ரெண்டு தலைங்க தானே.. என்னென்ன ‘கேரண்டி’ குடுக்கறாங்கோ..”

“எங்க மச்சி .. லோக்கல்ல நடக்கிறத விட்டுட்டு, ‘உலக அமைதி’, ‘உலக வெப்பமயம்’னு பேசிக்கிட்டு இருக்காங்கோ..” வரது அலுத்துக் கொண்டான்.

“அப்ப அங்கயும் ‘ஜூம்லா’ தானா? ஆனா பில்டப் பண்றாங்களோ, பீலா வுடறாங்களோ.. நாம உத்து பாக்கிற அளவுக்கு பக்குவப்படுத்தி வெச்சிருக்காங்கோ நம்மளை..இங்க கூட அப்டித்தான் சில திராபை அரசியல் கட்சிக்காரங்கோ சதி பண்ணி 2 டிகிரி வெயில் ஜாஸ்தியாக்கிட்டாங்கோ … மலையே கொதிக்குது.. எவ்ளோ நாள் தேர்தல் நடக்கப் போவுது அங்க?”

“ஒரே நாள் தான்..”

“நான் நீ இருக்கிற ஸ்டேட்ல மட்டும் கேக்கல வோல்ட்டு.. மொத்த ‘ஸ்டேட்ஸ்’க்கும் கேக்குறன்.. “

“எல்லாத்துக்கும் ஒரே நாள் தான் .. தபால் ஓட்டு தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தொடங்கும்”

“நாடு பூராத்துக்கும் ஒரே நாள் தேர்தலா.. ‘ஒன் நேஷன் ஒன் எலெக்‌ஷன’ அதுக்குள்ள காப்பி அடிச்சிட்டீங்களா.. சரி, எல்லா ஊருக்கும் தலைங்க எப்டி போய் வருவாங்கோ.. ரோடு ஷோ நடத்தணும், ‘மீடியன’ தாண்டி குதிச்சு போய் ஸ்வீட்டு வாங்கணும், அங்கங்க லோக்கல் ஆளுங்கள அட்ராக்ட் பண்ற மாதிரி, மாத்தி மாத்தி பேசணும், டிரஸ் பண்ணணும்.. இதுல்லாம் எப்டி பண்ணுவாங்கோ.. பாவம் ரெண்டு தலைங்களும் மகா பெருசுங்க வேற .. அதுக்குதான் நாங்க ரெண்டு மாசத்துக்கு மேல எலக்‌ஷன் நடத்துவோம்.. ஆனா ரிசல்ட் ‘கன்’ மாதிரி ஒரே நாள்ல வந்துரும்.. பட்டனைத் தட்டினா போதும்..ஆமா உங்க ஊர்ல வோட்டு பட்டன அமுக்கும்போது என்ன கோஷம் போடுவீங்கோ ‘ஜெய் ஜீசஸ்னா?’”

“வோட்டு பட்டன்லாம் இல்ல அர்னால்டு.. பேப்பர் பேலட் தான்… அந்த காலத்துல நம்மூர்ல பாங்க் எக்ஸாம்லாம் எழுதுவமே.. அப்ஜக்டிவ் டைப்.. முட்டையா முட்டையா போட்டிருக்குமே, அது மாதிரி தான்.. ஓட்டு சீட்டும் பேணாவும் குடுத்துடுவாங்க.. ரெண்டு முட்டையும் ஒரே மாதிரிதான்.. ஆனா அதுல நமக்கு தேவையான முட்டைல கலர் அடிக்கணும்… ” வரது விளக்கினான்.

“என்னாது.. வோட்டிங் மெஷினு கிடையாதா.. தர்ட் வேர்ல்ட் கண்ட்ரியா நீங்கோ..” பெரிதாகக் கொக்கரித்தான் அர்னால்ட்.

“அதுல நெறய சிக்கல் இருக்குது அர்னால்டு.. நாள பின்ன எவனாவது வந்து நான் இந்த பட்டன அமுக்குனேன் அந்த கட்சிக்கு என் வோட்டு போய்டுச்சுன்னு சொல்லுவானுங்க… காப்பி கப்ல கூட “எச்சரிக்கை .. இந்த காப்பி கப் சூடா இருக்கலாம்” ன்னு போடற ஊரு இது.. முன் ஜாக்கிரதையா இருக்கணும்” 

“அப்டி போடு வோல்ட்டு .. அதுக்குத் தான் ‘விவிபாட்’ வேணும்ன்றது.. வோட்டு பட்டன அமுக்க சொல்லோ வோட்டு சீட்டும் ப்ரிண்ட் ஆயி பொட்டிக்குள்ள விழுந்துடும்.. ஆனா அதை நீ சாதரணமா பாக்க முடியாது.. 7 செகண்ட் தான் லைட் எரியும்..”

“ஓ அப்படின்னா அந்த வோட்டு சீட்ட எண்ணி ரிசல்ட் சொல்வாங்களா?” ஜனா கேட்டான்.

“சேச்சே .. அத எதுக்கு எண்ணணும்.. நீ பட்டன அமுக்கும் போதே அது கம்ப்யூட்டர்ல ரெகார்டு ஆயிடும்..  சில எடங்கள்ல அதுக்கு முன்னாடியே கூட ரெகார்டு ஆயிடும்.. ஃபுல்லா டிஜிட்டல் ஊரு..”

“அப்புறம் எதுக்கு, அது என்னமோ சொன்னியே.. விவிபேடு.. அதுக்கு  ஏன் செலவு பண்றீங்க..” 

“அது சொம்மா .. லுவலாய்க்கு .. யாராவது வந்து கேள்வி கேட்டா பதில் சொல்றதுக்குன்னு வெச்சிக்கயேன்.. அது மட்டுமில்லாம, ஒவ்வொரு ஏரியாலயும் 5% விவிபாட் சீட்டுங்கள எண்ணுவாங்கோ..”

“அதாவது பல லட்சம் விவிபேட்ல சில ஆயிரம் மட்டும் எண்ணுவாங்க? விவிபேடுக்காக அவ்ளோ செலவு பண்ணதுக்கு எல்லாத்தையும் எண்ணிடலாமே..”

“ஆஹங்.. அது வேலைக்கு ஆவாது வோல்ட்டு .. அப்புறம் ரிசல்ட் சொல்றதுக்கு அஞ்சாறு நாளாயிடும்.. ” என்றான் அர்னால்ட்.

“மூணு மாசம் தேர்தல் நடத்துவீங்க ஆனா ரிசல்ட் மூணு மணி நேரத்துல வந்துடனும் .. “

“ஆமா வரது .. டென்சனாவாதா பின்ன? டிஜிட்டல் பவர் மாமா.. டிஜிட்டல் ஊரு.. உங்க ஊர்ல ரிசல்ட் வர எத்தன மாசமாவும்?”

“எல்லா ஊர்லயும் எலக்‌ஷன் நடந்து முடியறதுக்குள்ளவே ரிசல்ட் கொஞ்சங் கொஞ்சமா வர ஆரம்பிச்சிடும்.. அன்னைக்கு நைட்டே யாரு ஜெயிக்கிறாங்கன்னு ஒரு மாதிரி தெரிய ஆரம்பிச்சிடும்.. அதிகப்பட்சம் ரெண்டு நாள்ல 100% தெரிஞ்சிடும்” வரது தெளிவாக விளக்கினான்.

“சூப்பருப்பா.. அவ்ளோ வேகமா கவுண்ட் பண்ணிடறாங்களே..”

“ரிசல்ட்டுக்கு, கடைசி வோட்டு வரைக்கும் எண்ணணும்னு அவசியமில்ல… டிரெண்ட் எப்படியிருக்குனு பாத்துட்டு எலக்டோரல் காலேஜ் ஆளுங்க யாரு தலைவரா வரணும்னு ஓட்டு போடுவாங்க..” என்றேன்.

“அய்ய்.. சுளுவான வேலையாச்சே.. மொத்த ஜனங்களைக் கெஞ்சறதுக்கு பதிலா இவங்களை வாங்கிட்டா முடிஞ்சுது.. வந்து.. இது.. அவங்களோட நம்பிக்கையை வாங்கிட்டான்னு வேலை முடிஞ்சிடும்னு சொல்ல வந்தேன்.. எத்தன சீட்டு வாங்கணும்.. ஐ மீன் … ஜெயிக்கணும்”

“538 எலக்டர்ஸ் இருக்காங்க… அதுல கொறஞ்சபட்ச 270 பேரோட வோட்டு யாருக்கு போதோ அவங்க தான் அடுத்த தலைவரு..”

“அட .. கிட்டத்தட்ட அதே நம்பர் தான் .. இங்க மொத்தம் 543 சீட்டு.. மினிமம் 272.. ஆனா எங்களுக்கு டார்கெட் நானூறுக்கு மேல தான் .. ‘சார் செள பார்’ இல்லைன்னா ‘நாப்பதும் நமதே’ ரெண்டுத்துல எதாவது ஒன்னு நடக்கும்.. மச்சீஸ், நீங்க எல்லாரும் போய் மறந்துடாம ஓட்டு போட்டுடுங்க.. நல்ல ஜாதிக்காரனா பாத்து ஜெயிக்க வையுங்கோ..” 

“என்னடா சொல்ற… எலக்ஷன்ல போய் ஜாதி அது இதுன்னு.. டிஸ்கஸ்டிங்.. “

“இல்ல வோல்ட்டு இதுல என்ன டிஸ்கஸ்டிங்.. நாயில கூட ஜாதி பாக்கிறோம் இல்ல.. அது மாதிரி…” அர்னால்டு இழுத்தான்.

“அது மாதிரி.. நீ என்ன சொல்ல வர..” என்றான் வரது..

“கய்ஸ்.. இது டூ மச்சா போயிட்டிருக்கு… நம்ம தனிப்பட்ட விருப்பம், ஆசை எல்லாத்தையும் தாண்டி ஜனங்களுக்கு எந்த தலைவர் தேவையோ அதுவே நடக்கட்டும் .. ஆக மொத்தம் நடக்கறது, நடக்கப்போறது திருவிழா இல்ல.. திருவிழாவோட ஒரு பகுதியான கூத்து தான்.. ஜனநாயகக் கூத்து.. ம்ஹூம் அது கூட இல்ல, நாயகக் கூத்து .. அவ்ளோதான்”

“கரெக்டு தான் வோல்ட்டு.. என்ன நடக்குதுன்னு பாக்கலாம்..”

  • வோல்டெய்ர்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad