admin
admin's Latest Posts
நானே சிந்திச்சேன்..

போன வாரத்துல ஒரு நாள் சாயங்காலம்.. வேலையெல்லாம் முடிச்சுட்டு, கொஞ்ச நேரம் விஸ்ராந்தியா உட்காரலாம்னு நெனச்ச நேரத்துல கரெக்டா, ஜனா ஃபோன் பண்ணினான்.. “ஏ மச்சி .. இந்த வீக் எண்ட் என்ன பண்ணப் போற?” ன்னு கேட்டான்.. இவன் எதுக்கோ தூண்டில் போடப்போறான்னு நெனச்சி “இந்த வாரமா? என் வொய்ஃப் ரொம்ப நாளா சொல்லிகிட்டே இருந்தா.. இந்தத் தோட்டத்துக்குச் செடியெல்லாம் வாங்கணும்.. ‘டாம்பா’ல ஒரு பெரிய ஆர்பரிட்டம் இருக்காம்.. போயிட்டு வந்துடலாம்னு.. அதான் ‘டாம்பா’ போலாம்னு […]
இளமையில் கொல்..

‘வாரன் லைப்ரரி’யைக் கடந்து இரண்டு மூன்று நிமிடங்களிலேயே ‘எலிசபெத் எஸ்டேட்ஸ்’க்கான என்ட்ரன்ஸ் வந்துவிட்டது. ‘பாம் பீச்’ பகுதி, ஃப்ளாரிடாவிலேயே மிக மிக வசதி படைத்தவர்கள் வசிக்கக் கூடிய பகுதி என்று தெரிந்திருந்தாலும், ‘எலிசபெத் எஸ்டேட்ஸின்’ கூடுதலான ஆடம்பரப் பகட்டு, மேசனுக்குப் பிரமிப்பு தந்தது. குறைந்தது மூன்று ஏக்கரில் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பங்களாவும், மற்றதை விட பிரம்மாண்டமாக இருப்பது போல் தோன்றியது. ஒவ்வொன்றும் எப்படியும் குறைந்தபட்சம் 20 மில்லியன் போகுமென மேசனின் மூளை கணக்கிட்டது. இரு புறங்களிலும் […]
இலையுதிர்காலத்தின் வசீகரிக்கும் அழகைத் தழுவுதல்

வட அமெரிக்காவில் வண்ணங்கள் மற்றும் விறுவிறுப்பான காற்றின் இயைவான இன்பரசம் பெரும்பாலும் இயற்கையின் மகத்தான கோடைப் பருவத்தின் முடிவாகக் கருதப்படும் இலையுதிர்காலம், வண்ணங்களின் மயக்கும் காட்சி மற்றும் மிருதுவான, புத்துணர்ச்சியூட்டும் காற்றுடன் வட அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. இலைகள் சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறங்களின் துடிப்பான படலமாக மாறும்போது, கண்டம் ஒரு பிரமிப்பூட்டும் தலைசிறந்த படைப்புக்கான ஓவிய வரை திரையாக (Drawing Canvas) மாறுகிறது. இத்தருணத்தில் நாம் வட அமெரிக்காவில், குறிப்பாக மினசோட்டா மாநிலத்தில் அழகான […]
இடி, மின்னல், மழை மங்கை!

நெற்றிப் பரப்பினில் சுற்றிப் பறந்திடும் கற்றைக் கூந்தலைச் சற்றே விலக்கிச் சிரித்தாள்!! விலக்கலில் வழிந்த வியர்வையும் மெதுவாய் விழிகளைத் தாண்டி விழுவதில் விழுந்தேன்!! நாசிகளைக் கடக்கையில் சுவாசித்துத் தணிந்ததால் வீசிய கனலது தூசியாய் மேகமாகியது! மங்கையின் வியர்வையும் பொங்கிய கனலினால் தங்கியே வான்புக கங்கையாய்ப் பொழியுதோ? கண்ணதன் ஒளியுமே மண்ணிதின் மீதிலே எண்ணத்தின் வேகமாய் மின்னலாய்ப் பாய்ந்ததோ? கன்னியவள் குலுங்கிடக் கடலலையும் குதித்திடுமோ? என்னவளும் சிணுங்கிட இடியதுவும் சினந்திடுமோ? […]
முத்தமிழ் விழா

மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தினர் 2023ஆம் ஆண்டிற்கான முத்தமிழ் விழாவை ‘ஓக்டேல்’ நகரில் அமைந்துள்ள ‘ரிச்சர்ட் வால்டன்’ பூங்காவில் உள்ள வெளிப்புற மேடையில் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று நடத்தினர். இந்த விழாவில் பறை மற்றும் சிலம்பம் பயிற்சிப் பட்டறையைக் காலை நேரத்திலும், மக்களிசை மற்றும் மரபுக் கலை நிகழ்ச்சிகளை மதியத்திற்குப் பிறகும் நடத்திக் காட்டினர். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் பறை பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பறையிசை கற்றுக்கொடுத்தார். அதே போல், […]
டைகர் கா ஹுக்கும் ..

72 வருடங்கள், எட்டு மாதங்கள், 10 நாட்கள் – இந்தப் படம் வெளியாகும் தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வயது. முக்கால்வாசி மனிதர்களுக்கு, அந்த வயதில் கழிப்பறை செல்வதற்கே துணை வேண்டும். இவரால் மட்டும், இன்னும் அந்த லட்சக்கணக்கான ரசிகர்களை வசீகரிக்க முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 1978இல் வெளிவந்த ‘பைரவி’ கதாநாயகனாக அவரின் முதல் படம். அதைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துப் பெற்று, கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். […]
மரணிக்கும் மனிதம்

ஜூன் 8, 1972ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘கிம் பக்’ எனும் வியட்நாமிய சிறுமியின், போர் பதட்டத்தால், ஆடைகளின்றி தெருவில் ஓடும் புகைப்படம் ஒன்று வியட்நாம் போரை நிறுத்தக் காரணமாகயிருந்தது என்பது வரலாறு. அதே போல் இன்று, பெண்கள் இருவர், ஆடைகள் களையப்பட்டு, காமச் சீண்டல்களுடன் தெருவில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், பெண்களின் நிலைமைக்கு அத்தாட்சியாகப் பதியப்பட்டுள்ளது. மிக வேகமாகப் பரவிய இந்தக் காணொளி உலக […]
மணிப்பூர்

மணிப்பூர் – இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. இந்தாண்டு மே மாதம் துவக்கம் முதல் இங்கு மேத்தயி எனப்படும் மேத்தி மற்றும் குக்கி/நாகா இனப்பிரிவினருக்கிடையே பல காலமாகவே இருந்து வந்த பூசல்கள் வலுபெற்று போராட்டமாக மாறத் துவங்கியது. பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன்பிருதே இப்பகுதியில் இனக்கலவரங்கள் பரவியிருந்தது. கிபி 33 ஆம் ஆண்டிலிருந்தே மணிப்பூர் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அச்சமயத்தில் மேத்தி இனக்குழுவினர், பகாங்பா எனும் மன்னரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. சனாமயிசம் (Sanamahism) எனும் […]
உலகளாவிய கொதிநிலை (Global Boiling)

‘புவி வெப்பமயமாதல்’ என்ற சகாப்தம் முடிந்து ‘உலகளாவிய கொதிநிலை’ என்ற சகாப்தம் தொடங்கிவிட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜூலை மாதம், காலநிலை பதிவுகள் தொடங்கப்பட்ட 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகின் வெப்பமான மாதமாகப் பதிவாகும் என்ற அதிர்ச்சித் தகவலையும் பகிர்ந்துள்ளார். காலநிலை மாற்றங்கள், எதிர்பார்த்ததை விட அதி பயங்கர வேகத்தில் நடந்து வருகிறது. ‘தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்’ (National Oceanic and Atmospheric Administration), […]