admin
admin's Latest Posts
கண் முன் கடவுள்
காக்கிச் சட்டையில் மடிப்புக் கலைந்ததைப் பொருட்படுத்தாது உதறி விட்டு நடந்தார் கன்னியப்பர். அவர்கள் வீட்டு, சின்ன முகப்பில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தார். முன் நெற்றி வழுக்கையை மறைக்கும் விதமாக இருந்த சிறிய முடியை வலப்பக்கம் திருப்பி வாரினார். முகத்தின் சுருக்கங்கள் கண்ணாடியில் தெரிந்தன. ஆயிற்று வயது…. இந்தத் தை பிறந்தா 58 வயசு ஆயிடும். மிடுக்கு, வீம்பு எல்லாம் தளரும் வயது தொடங்கித் தான் விட்டது. சிவகாமி போன போதே பாதி ஆயுள் போயாச்சு. கண்ணாடிக்குப் […]
சிறகவரை எண்ணெய்க் கறி
அவரை வகைகளில் தாவரப் புரதம் தரும் காய்கறிகளில் சிறகவரை சிறப்பானதொன்று . மினசோட்டா மாநிலத்தில் சீனக் கடைகளிலும், ரொரோன்ரோவில் தமிழ், சீன, தாய்லாந்துச் சந்தைகளிலும் கிடைக்கும். தேவையானவை 1/2 இறாத்தல் பிஞ்சு சிறகவரை 5 நறுக்கிய சின்ன வெங்காயம் 2 நறுக்கிய பச்சை மிளகாய் 1 சிறுகிளை கறிவேப்பிலை 4 நறுக்கிய உள்ளிப்பூண்டு நகம் 1 அங்குல இஞ்சி (தட்டி எடுத்தது ) 10-15 கடுகு ½ தேயிலை கரண்டி வெந்தயம் 1 தேயிலை கரண்டி சீரகம் […]
கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி 2016
மேபிள் குரோவ் இந்துக் கோவிலில் நவம்பர் 19ம் தேதி அன்று கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள இசைக் கலைஞர்கள் திருமதி நிர்மலா ராஜசேகர் (வீணை இசை & வாய்ப்பாட்டாளர்), ஸ்ரீ தஞ்சாவூர் கே முருகபூபதி (மிருதங்கம்), ஸ்ரீ ராம் நடராஜன் (கஞ்சிரா) மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் ஸ்ரீ ஜெயந்த் (புல்லாங்குழல்), ஸ்ரீ கார்த்திக் சுப்ரமணியம் (கடம்), ஸ்ரீ பி உ கணேஷ் பிரசாத் (வயலின்) ஆகியோர் சேர்ந்து நடத்திய இந்த இசைச் கச்சேரி […]
டி.என். பாலமுரளி – கலந்துரையாடல்
பனிப்பூக்கள்: உங்களுக்குக் கர்நாடக சங்கீதத்தின் மேல் கொண்ட ஈர்ப்புக்குக் காரணம் என்ன? எப்படித் தொடங்கினீர்கள்? டி.என். பாலமுரளி: எனக்கு ஐந்து வயது இருக்கையில் அம்மா என்னையும் என் சகோதரியையும் பாட்டுக் கிளாசில் சேர்த்தார்கள். என்னுடைய அம்மாவும், மாமாவும் இசையில் ஈடுபாடு கொண்டவர்கள். அம்மா மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர். நான் பல பாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றேன். Sri Lanka Broadcasting Corporation(SLBC) நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினேன். இவர்கள் எல்லோரும் கொடுத்த உற்சாகம் என்னைச் […]
பகுத்து ஆராய்தல் வல்லமை
முக்கிய குறிப்பு :இது உங்களிற்கு ஏற்கனவே அறிந்து கொண்டுள்ள ‘ தெரிந்து கொண்டுள்ள அறிவியல் தகவல்களைத் தவிர்த்து – தரப்பட்டுள்ள தகவல்களை மாத்திரம் உபயோகித்து, பகுத்து அறிந்து, ஆராய்ந்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முனையவும். கீழே உள்ள கூற்றுக்களை நீங்கள் அடிப்படை என்று எடுத்துக் கொண்டால் அதை வைத்துக் மிகுதித்தரவுகளில் உண்மையானது எது என்று கூறவும். உதாரணம்: தானியங்கள் எல்லாம் புல் விதைகள் . நெல்லு ஒரு தானியம். ஆகவே, (1) தானியங்கள் எல்லாம் நெற்கள். (2) […]
அமெரிக்க நன்றி நவிலல் நாளும் அதன் சரித்திரமும்
ஆண்டுகள் புரண்டு ஓட ஆளுபவர், நாடுபவர், நடுவில் திளைத்தவர் எனப் பல்வேறு மக்களும் தமக்கென வழிமுறைக் கதைகளை உருவாக்கிக் கொள்ளுவர். வரலாறுகள் பெருமளவில் வெல்பவர்களால் எழுதப்படுபவை. இவையே காலகாலத்தில் சமூக இதிகாசங்களாக மாறுகின்றன; மேலதிக சிந்தனையின்றி நடைமுறை உண்மைகள் என்றும் திரிபுற்று மாறுகின்றன. ஆயினும் வரலாற்றுத் தகவல்களை தொடர்ந்தும் ஆய்வு செயப்பட்டு இது ஒரு சாரார்க்குச் சாதமானதோ இல்லையோ அடிப்படை உண்மைகளை பன்முனை ஆய்வு தரவு தகவல்கள் மூலம் வெளிக்கொண்டு வர முனையும். எனினும் சமூகங்கள் அந்தந்தக் […]
மினியாபொலிஸில் இருந்து யாழ்ப்பாணம் வரையான பயணப் பாதையில்…
( பயணக் கட்டுரை) மிகவும் நெருக்கடியான ஒரு மாலைப் பொழுதில் அன்றொருநாள் எனது தாய் நிலத்தை விட்டு நீங்கியே ஆக வேண்டிய கட்டாயச் சூழலில் இரவோடு இரவாக ஊர்விட்டு நீங்கினோம். எனது தாய்நாட்டையும் உறவுகளையும் பிரிந்து சரியாகப் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தாயகம் நோக்கிய எனது பயணம் மினியாபொலிஸ் விமான நிலையத்தில் இருந்து தொடங்கியது சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் ஆண்டுப் பலன் நன்றாக எனக்கு வேலை செய்திருக்கின்றது போல.… இந்தப் […]







